எஸ்-பிரஸ்ஸோ காரை ஓட்டிட்டு இருந்த நடிகை.. இப்ப எவ்வளவு சூப்பரான கார வாங்கியிருக்காங்க தெரியுமா? தரமான வளர்ச்சி
ஆரம்பத்தில் எஸ்-பிரஸ்ஸோ காரை ஓட்டி வந்த இளம் நடிகை ஒருவர் தற்போது மிக சூப்பரான வசதிகள் கொண்ட காரை வாங்கியிருக்கின்றார்.
யார் அந்த நடிகை? அவர் வாங்கியிருக்கும் காரின் விலை மற்றும் சிறப்புகள் என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இன்ஸ்டா கிராமில் அதிக ஃபாலோவர்களைக் கொண்ட மலையாள நடிகைகளில் அமியா மேத்யூ-வும் ஒருவர். மலையாள திரையுலகில் இப்போதே இவரின் வளர்ச்சி துளிர் விட ஆரம்பித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் காரியத்தை அந்த நடிகை செய்திருக்கின்றார். அதாவது, புத்தம் புதிய கியா சொனெட் (Kia Sonet) காரை அவர் வாங்கியிருக்கின்றார்.

இந்தியர்கள் மத்தியில் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் கார் மாடல்களில் கியா சொனெட்டும் ஒன்று. இந்த காரில் ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். கியா நிறுவனத்தை மிக ஆழமாக காலூன்ற செய்த கார் மாடல் என்றால் அது செல்டோஸ் எஸ்யூவிதான். இந்த கார் மாடலுக்கு அடுத்தபடியாக அந்நிறுவனத்திற்கு பேரையும், புகழையும் தேடி தந்த வாகனமாக சொனெட் இருக்கின்றது.

இத்தகைய சூப்பரான காரையே மலையாள திரையுலகின் இளம் நடிகை அமியா மேத்யூ தற்போது வாங்கியிருக்கின்றார். முன்னதாக அமியா மேத்யூ மாருதி சுஸுகி நிறுவனத்தின் மலிவு விலை கார் மாடாலான எஸ்-பிரஸ்ஸோவை பயன்படுத்தி வந்திருக்கின்றார். இதற்கு அடுத்தபடியாக அவர் ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி கார் பயன்பாட்டிற்கு மாறினார்.

தற்போது, மிக சூப்பரான வளர்ச்சியாக கியா சொனெட் காரை வாங்கியிருக்கின்றார். தொடர்ச்சியாக அமியா மேத்யூ வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதை இந்த தொடர் கொள்முதல்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. கியா சொனெட் கார் மாடலின் ஆரம்ப நிலை தேர்வே ரூ. 7.49 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த விலையிலேயே எக்கசக்க சிறப்பு வசதிகளை கியா சொனெட் காரில் வாரி வழங்கியிருக்கின்றது. முன் பக்கத்தில் இரு ஏர் பேக், ஹார்ட் பீட் ஸ்டைலிலான டெயில் லேம்ப், உயர் டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன் மற்றும் பின் பக்கத்திற்கான ஏசி வசதி, 3.5 ஒற்றை நிற இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், நடுத்தர லெதர் இருக்கை மற்றும் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்டபிள் அவுட்சைட் மிர்ரர்கள் உள்ளிட்ட அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகள் சொனெட் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, உயர்நிலை வேரியண்ட் சொனெட் காரில் மிக மிக அதிக சிறப்பு வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டிருக்கும். தற்போதைய நிலவரப்படி கியா சொனெட் இந்திய சந்தையில் எச்டிஇ, எச்டிகே, எச்டிகே பிளஸ், எச்டிஎக்ஸ், எச்டிஎக்ஸ் ஏஇ, எச்டிஎக்ஸ் பிளஸ் மற்றும் ஜிடிஎக்ஸ் பிளஸ் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதன் உயர்நிலை தேர்வான ஜிஎக்ஸ் பிளஸ் வேரியண்ட் ரூ. 12.59 லட்சம் என்ற விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இதில், பிரீமியம் அம்சங்கள் ஏராளமாக வழங்கப்பட்டிருக்கும். அதாவது, போஸ் பிரீமியம் 7 ஸ்பீக்கர் சிஸ்டம், ஆறு ஏர் பேக்குகள், ஜிடி லைன், 10.25 அங்குல எச்டி தொடுதிரை நேவிகேஷன், கியா கார் இணைப்பு அம்சம், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், ஸ்மார்ட் ப்யூர் ஏர் ப்யூரிஃபையர் மற்றும் 4.2 அங்குல வண்ண இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இத்தகைய அதிக சிறப்பு வசதிகள் கொண்ட கியா செனெட் காரையே நடிகை அமியா மேத்யூ வாங்கியிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. அமியா தன்னுடைய இந்த லேட்டஸ்ட் கொள்முதல் குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக தெரியப்படுத்தியிருக்கின்றார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபரே நடிகை அமியா. இதன் அடிப்படையில் தன்னுடைய பல்வேறு அசைவுகளை அவர் சோஸியல் மீடியோக்களில் திறந்தவெளியாக வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையிலேயே தனது புதிய கார் பற்றிய தகவலையும் அவர் வெளியிட்டிருக்கின்றார். நடிகையின் இந்த வளர்ச்சிக்கு பலர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். காரிக் எனும் புகழ் பெற் தொடரின் வாயிலாக சினிமா துறைக்குள் கால் தடம் பதித்தவர் அமியா மேத்யூ. இதற்கு பின்னரே பல முன்னணி படங்களில் சிறிய மற்றும் பெரிய கதாப்பாத்திரங்களில் அவர் தோன்ற தொடங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளும் இக்காரில் வழங்கப்படுகின்றது. பெட்ரோல் வெர்ஷனில் ஓர் தேர்வும், டீசல் வெர்ஷனில் இரு தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. இதுதவிர, 6 ஐஎம்டி, 7 டிசிடி, 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு தானியங்கி ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் கியா சொனெட் எஸ்யூவி காரில் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








