காரா வாங்கி தள்ளுறாங்களே... நஸ்ரியா - ஃபஹத் ஃபாசில் ஜோடி வாங்கிய இந்த புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

பிரபல மலையாள நடிகரும், நஸ்ரியாவின் கணவருமான ஃபகத் ஃபாசில் சமீபத்தில் லம்போர்கினி உருஸ் சொகுசு காரை வாங்கியிருந்தநிலையில் தற்போது மீண்டும் ஓர் விலையுயர்ந்த காரை வாங்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

காரா வாங்கி தள்ளுறாங்களே... நஸ்ரியா - ஃபஹத் ஃபாசில் ஜோடி வாங்கிய இந்த புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

மினி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைச் செய்து வரும் முக்கியமான கார் மாடல்களில் கூப்பர் கன்ட்ரிமேன் ஜேசிடபிள்யூ (Mini Countryman JCW)-வும் ஒன்று. இந்த காரையே பிரபல மலையாள நடிகரும், முன்னணி நடிகை நஸ்ரியாவின் கணவருமான ஃபகத் ஃபாஸில் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய காருடன் நடிகர் நிற்கும் படங்கள் இணையத்தில் வெளியாகியிள்ளன.

காரா வாங்கி தள்ளுறாங்களே... நஸ்ரியா - ஃபஹத் ஃபாசில் ஜோடி வாங்கிய இந்த புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

இதன் வாயிலாகவே நடிகர் அக்காரை வாங்கியிருப்பது உறுதியாகியுள்ளது. ஃபகத் ஃபாசில் மிக சமீபத்திலேயே லம்போர்கினி உருஸ் காரை வாங்கியிருந்தார். இந்த காரை கடந்த ஆகஸ்டு மாதமே டெலிவரி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தற்போது புதிதாக மினி கூப்பர் கன்ட்ரிமேன் ஜேசிடபிள்யூ காரை அவர் வாங்கியிருக்கின்றார்.

காரா வாங்கி தள்ளுறாங்களே... நஸ்ரியா - ஃபஹத் ஃபாசில் ஜோடி வாங்கிய இந்த புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

ஏற்கனவே இவரிடத்தில் டொயோட்டா வெல்ஃபையர் மற்றும் போர்ஷே 911 கர்ரேரா போன்ற விலையுயர்ந்த சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே அடுத்தடுத்ததாக சொகுசு கார்களை நடிகர் வாங்கிய வண்ணம் இருக்கின்றார். இவரின் இந்த செயல் தென்னிந்திய திரையுலகில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

காரா வாங்கி தள்ளுறாங்களே... நஸ்ரியா - ஃபஹத் ஃபாசில் ஜோடி வாங்கிய இந்த புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

புதிதாக வாங்கப்பட்டிருக்கும் மினி கூப்பர் கன்ட்ரிமேன் ஜேசிடபிள்யூ சொகுசு காரின் விலை ரூ. 46 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய விலையுயர்ந்த சொகுசு காரையே புதிதாக மலையாள நடிகர் வாங்கியுள்ளார். இவர் மலையாள திரைப்படம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்தியாவின் பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

காரா வாங்கி தள்ளுறாங்களே... நஸ்ரியா - ஃபஹத் ஃபாசில் ஜோடி வாங்கிய இந்த புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய விக்ரம் படத்தில் தோன்றியது, ஃபகத்துக்கு நற்பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த நிலையிலேயே ரசிகர்களைக் கிரங்கடிக்கச் செய்யும் வகையில் மினி கூப்பர் கன்ட்ரிமேன் ஜேசிடபிள்யூ-வை வாங்கியிருக்கின்றார். இது சற்று அதிக வசதிகள் கொண்ட வாகனமாகும்.

காரா வாங்கி தள்ளுறாங்களே... நஸ்ரியா - ஃபஹத் ஃபாசில் ஜோடி வாங்கிய இந்த புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

வழக்கமான மினி கூப்பரை போல் இரண்டு கதவுகளை கொண்டிராமல் நான்கு கதவுகளையும், கூடுதல் அகலம் மற்றும் நீளத்தையும் கன்ட்ரிமேன் ஜேசிடபிள்யூக் கொண்டிருக்கின்றது. மேலும், கூடுதல் சதுரமான வாகனமாகவும் இதனை மினி நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. ஆகையால், வழக்கமான மினி கூப்பரைக் காட்டிலும் கூப்பர் கன்ட்ரிமேன் அதிக கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது.

காரா வாங்கி தள்ளுறாங்களே... நஸ்ரியா - ஃபஹத் ஃபாசில் ஜோடி வாங்கிய இந்த புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

மினி கூப்பர் கன்ட்ரிமேன் இந்தியாவில் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. கூப்பர் எஸ் மற்றும் கூப்பர் எஸ் ஜேசிடபிள்யூ ஆகியவையே அவை ஆகும். 2.0 லிட்டர் 4 சிலிண்டர், டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 189 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

காரா வாங்கி தள்ளுறாங்களே... நஸ்ரியா - ஃபஹத் ஃபாசில் ஜோடி வாங்கிய இந்த புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 225 கிமீ ஆகும். அதேவேலையில், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை வெறும் 7.2 செகண்டுகளில் எட்டிவிடும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் திறன் கொண்ட சொகுசு காரையே ஃபகத் ஃபாஸில் தற்போது வாங்கியிருக்கின்றார். இந்த காரின் கொள்முதலின் வாயிலாக தான் ஒரு மிகப்பெரிய சொகுசு கார் பிரியர் என்பதை ஃபகத் வெளியுலகிற்கு தெரியப்படுத்தியிருக்கின்றார்.

காரா வாங்கி தள்ளுறாங்களே... நஸ்ரியா - ஃபஹத் ஃபாசில் ஜோடி வாங்கிய இந்த புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

பிஎம்டபிள்யூ நிறுவனம் மினி பிராண்ட் கார்களை 2018ம் ஆண்டிற்கு முன்னர் வரை சிபியூ வாயிலாகவே இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வந்தது. இந்த பிராண்டுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்ததை அடுத்து இதன் உற்பத்தியை சென்னை ஆலையில் தொடங்கியது. இதனால், முன்பு பல மடங்கு அதிக விலையில் விற்கப்பட்டு வந்த மினியின் தயாரிப்புகள் தற்போது பல மடங்கு குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆகையால், முன்பைக் காட்டிலும் இப்போது இந்த மினி கார் அதிகளவில் இந்தியாவில் தென்பட தொடங்கியிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 11, 2022, 8:30 [IST]
English summary
Malayala actor fahadh faasil buys mini cooper countryman jcw
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+