ஃபகத் ஃபாஸிலும் வாங்கிட்டாரா! ரஜினியின் மகள், பிரித்விராஜ்னு பல நடிகர்கள் இந்த காரைதான் பயன்படுத்துராங்க!
முன்னணி நடிகரும், நடிகை நஸ்ரியாவின் கணவருமான ஃபகத் ஃபாஸில் மிக மிக விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கார்குறித்த கூடுதல் விபரங்களையும், இந்தியாவில் வேறு எந்த பிரபலங்கள் ஃபகத் ஃபாஸில் வாங்கியிருக்கும் சொகுசு காரை பன்படுத்தி வருகின்றனர். என்பதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

லம்போர்கினி உருஸ் உலகின் ஃபாஸ்டஸ்ட் செல்லிங் சொகுசு கார் ஆகும். இந்த காருக்கு இந்திய நடிகர்கள் அடிமையாகவே மாறிவிட்டனர் என கூறலாம். ஆம், பாலிவுட், டோலிவுட், கோலிவுட் மற்றும் மோலிவுட் என அனைத்து திரையுலகிலும் உள்ள பிரபலங்கள் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். இத்தனைக்கும் இந்த காரின் விலை பல கோடிகள் ஆகும். இருப்பினும் இந்தியர்கள் இந்த காரை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு உதாரணமாக பிரபல இந்தி பாடகர் பாட்ஷாவை கூறலாம். இவரிடத்தில் ஏற்கனவே லம்போர்கினி உருஸ் கார் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் புதிதாக மற்றுமொரு உருஸ் எஸ்யூவி காரையும் அவர் வாங்கியிருக்கின்றார். இந்த அளவிற்கு மிக அதிக புகழ்பெற்ற காராகவே லம்போர்கினி உருஸ் உள்ளது. இத்தகைய அதிக புகழ்வாய்ந்த வாகனத்தையே பிரபல மலையாள திரைப்பட நடிகரும், நடிகை நஸ்ரியாவின் கணவருமான ஃபகத் ஃபாஸில் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபகத் ஃபாஸில் லம்போர்கினி உருஸ் காரை வாங்கியிருக்கின்றார் என்பதற்கு சான்றாக ஓர் வீடியோ வெளியாகியுள்ளது. அவ்வீடியோவில், ஃபகத் ஃபாஸில் லம்போர்கினி உருஸ் காரில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோவை ஆட்டோ மொபிலி ஆர்டன்ட் எனும் இன்ஸ்டா பக்கம் வெளியிட்டிருக்கின்றது.

ஃபகத் ஃபாஸில் கிரிகியோ கெரஸ் ஷேட் நிறத்திலான லம்போர்கினி உருஸ் காரை வாங்கியிருக்கின்றார். இது ஓர் அதிக பவர்ஃபுல்லான எஸ்யூவி ரக காராகும். இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 650 பிஎஸ் பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 8 ஸ்பீடு இசட்எஃப் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த எஞ்ஜினில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இக்காரின் விலை ரூ. 3.15 கோடி ஆகும். இத்தகைய உச்சபட்ச விலைக் கொண்ட சூப்பரான லம்போரிகினி காரையே ஃபகத் வாங்கியிருக்கின்றார். மிகவும் கவர்ச்சியான தோற்றம், அதீத திறனை வெளிப்படுத்தும் வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக இக்காரை இந்திய பிரபலங்கள் அதிகளவில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

Image Courtesy: Eisk007
மிக சமீபத்திலேயே ஃபகத் ஃபாஸில் மற்றும் நஸ்ரியா ஜோடி போர்ஷோ நிறுவனத்தின் 911 கர்ரேரா எஸ் காரை வாங்கினர். அட்டகாசமான பைத்தான் கிரீன் நிறத்தில் காட்சியளிக்கக் கூடிய போர்ஷே 911 கர்ரேரா எஸ் காரை அவர் வாங்கினார். இது ஓர் சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் ஆகும். இந்த காரில் 3.0 லிட்டர் ஃபிளாட் பாக்ஸ்டர் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 450 பிஎச்பி பவரையும், 530 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 8 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் இது இயங்கும். இது ஓர் குயிக்கஸ்ட் டிரான்ஸ்மிஷன் ஆகும். மேலும், இந்த டிரான்ஸ்மிஷன் நேரடியாக பின் வீலுக்கு இயக்க திறனை வழங்கும். இந்த காரை இந்தியாவில் ஃபகத் ஃபாஸில் மட்டுமின்றி இன்னும் பல பிரபலங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர் ராம் கபூர் மற்றும் மம்தா மோஹன்தாஸ், முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இக்கார் மாடலை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களும் போர்ஷே 911 கர்ரேரா எஸ் கார் மாடலை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதேபோல், தற்போது ஃபஹத் ஃபாஸில் வாங்கியிருக்கும் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரையும் இந்திய பிரபலங்கள் பலர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, மலையாள திரையுலகில் அண்மையில் பிரித்விராஜ் இந்த காரை வாங்கினார். இவர் வாங்கியது செகண்ட் ஹேண்ட் உருஸ் எஸ்யூவி ஆகும். செகண்ட் ஹேண்ட் உருஸை காரை பிரித்வி ஏன் தேர்வு செய்தார் என்பதற்கான துள்ளியமான காரணம் தெரியவில்லை.

தற்போது அக்காருக்கு இந்தியாவில் டிமாண்ட் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகையால், காத்திருப்பு காலத்தைத் தவிர்க்கும் பொருட்டு செகண்ட் ஹேண்டில் லம்போர்கினி உருஸை வாங்கியிருக்கலாம் என யூகிக்க முடிகின்றது. இந்த காரை சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கார்திக் ஆர்யன், ஜூனியர் என்டிஆர், ரன்வீர் சிங், ஸ்ரேயா சிங்காள் உள்ளிட்டோர் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








