முழுமாத கர்பத்திலும் கணவரை ஆச்சரிய பரிசால் மகிழ்வித்த இளம்பெண்! இப்பரிசுக்கு பின்னால் இவ்ளோ பெரிய காரணமிருக்கா
விரைவில் குழந்தை பிறக்க இருக்கின்ற நிலையில் தனது கணவருக்கு விலை உயர்ந்த லம்போர்கினி காரை பரிசளித்து கர்ப்பிணி பெண் ஒருவர் ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார். இந்த பரிசளிப்பிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் சுவாரஷ்யமான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மலேசியாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் அவரது கணவருக்கு விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியிருக்கின்றார். அவர் பரிசு வழங்க காரணமாக கூறியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலகின் மிக மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றாக லம்போர்கினி ஹுராகேன் பார்க்கப்படுகின்றது. இந்த காரை கர்ப்பிணி பெண் ஒருவர் அவரது கணவருக்கு, தன் கர்ப்ப காலத்தில் பரிசாக வழங்கியிருக்கின்றார். இந்த பரிசளிப்பு நிகழ்விற்கு அந்த கர்ப்பிணி பெண் ஓர் வித்தியாசமான காரணத்தை கூறியிருக்கின்றார்.

இந்த நிகழ்வுகுறித்து வெளியாகியிருக்கும் வீடியோ டிக்டாக்கில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றது. மலேசியாவைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் அனெஸ் அயுனி ஓஸ்மான். இவர் மேக்-அப் ஆர்டிஸ்ட் ஆவார். இவருக்கும் வெல்டன் ஜுல்கெல்ஃபி (வயது 20) என்ற இளைஞருக்கும் அண்மையில் திருமணமானது.

Source: Malay Mail
தற்போது முழு மாத கர்ப்பிணியாக இருக்கும் அனெஸ் இம்மாத இறுதிக்குள் குழந்தை பெற்றெடுக்க இருக்கின்றார். இவரின் குடும்ப பாரம்பரியத்தின் படி குழந்தை பெற்ற பின்னர் 100 நாட்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும். இது குழந்தை பிறப்பிற்கு பின்னர் ஏற்படும் சுகமின்மையைத் தவிர்க்க உதவும்.

இந்த மாதிரியான நேரத்தில் கணவரே தாய் போன்று செயல்பட்டு குழந்தை மற்றும் அனெஸை பார்த்துக் கொள்ள வேண்டும். ஆகையால், அந்த 100 நாட்கள் அவருக்கு தூக்கம் மற்றும் ஓய்வில்லாத நாட்களாக அமையலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையைச் சமாளிக்க வெல்டன் தயாராக இருக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கவே அனெஸ் மிக மிக விலையுயர்ந்த லம்போர்கினி ஹுராகேன் காரை பரிசளித்திருக்கின்றார்.

இந்த பரிசளிப்பு நிகழ்வு குறித்த வீடியோவே தற்போது டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. வீடியோவில் அனெஸ் அவரது கணவரை கண்களை மூடி ஷோரூமிற்குள் அழைத்துச் செல்கின்றார். கண்ணை திறந்த பின்னர் அவர் கண்ட காட்சி பெரும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. நம்மால் இதனை தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ வாயிலாக உணர முடிகின்றது.

உண்மையில் யாராக இருந்தாலும் இந்த இடத்தில் மிகுந்த ஆச்சரியத்திற்குள்ளாவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சுமார் இரண்டு மில்லியன் மலேசியன் ரிங்கிட் செலவு இக்காரை அனெஸ் வாங்கியிருக்கின்றார். இந்திய ரூபாய் மதிப்பில் இதன் மதிப்பு 3.63 கோடிகள் ஆகும். இத்தகைய உச்சபட்ச தொகையை செலவிட்டே தனது கணவருக்காக அந்த கர்ப்பிணி பெண் வாங்கியிருக்கின்றார்.

குழந்தை பெற்ற பின்னர் 100 நாட்கள் தங்குவதற்காக தனது பூர்வீக வீட்டை அனெஸ் தயார் செய்திருக்கின்றார். இந்த நூறு நாட்களும் தன்னுடைய கணவர் தன்னுடனே இருக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் அனெஸ் தெரிவித்திருக்கின்றார். அதேநேரத்தில், தன்னுடைய கணவர் இந்த நேரத்தில் தன்னையும், தங்களின் குழைந்ததையும் மிக அக்கறையுடன் பார்த்துக் கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

லம்போர்கினி ஹுராகேன் எவோ மாடலையே அனெஸ் அவரது கணவருக்கு வாங்கியிருக்கின்றார். இது ஓர் சூப்பர் ஃபாஸ்ட் சூப்பர் காராகும். இக்காரில் 5.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பயர்டு வி10 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 638 பிஎஸ் பவர் மற்றும் 565 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்த எஞ்ஜின் டிசிடி டிரான்ஸ்மிஷனில் இயங்குகின்றது. இக்காரை பின் வீல் இயக்கம் மற்றும் முன் வீல் இயக்கம் என இரு விதமான தேர்வுகளில் லம்போர்கினி விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த சூப்பர் கார் ஏற்கனவே நாங்கள் கூறியதை போல் மிகவும் திறமை வாய்ந்த வாகனமாகும். இது வெறும் 2.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டக் கூடியது. அதேநேரத்தில் இக்கார் உச்சபட்சமாக மணிக்கு 232 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








