எதிர்கால சந்ததியினருக்காக ரூ.1.17 கோடி விலையுள்ள காரை வாங்கிய டிவி ஷோ ஜட்ஜ்... நீங்க என்ன செய்ய போறீங்க?

தனியார் தொலைக்காட்சி டிவி ஷோ ஒன்றில் ஜட்ஜாக வரும் இளம் பெண் ஆடி (Audi) நிறுவனத்தின் விலை உயர்ந்த சொகுசு எலெக்ட்ரிக் காரை மிக மிக அதிக விலைக் கொடுத்து வாங்கியிருக்கின்றார். இதற்கு அவர் காரணத்தையும் கூறியிருக்கின்றார். அது என்ன என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

எதிர்கால சந்ததியினருக்காக ரூ.1.17 கோடி விலையுள்ள காரை வாங்கிய டிவி ரியாலிட்டி ஷோ ஜட்ஜ்... நீங்க என்ன செய்ய போறீங்க!

ஆடி (Audi) நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்து வரும் மிக உயரிய விலைக் கொண்ட கார் மாடல்களில் இ-ட்ரான் இவி (e-Tron EV)-யும் ஒன்று. இது ஓர் சொகுசு வசதிகள் நிரப்பப்பட்ட எலெக்ட்ரிக் கார் மாடலாகும். இந்த காருக்கு இந்தியாவின் எலெக்ட்ரிக் மற்றும் ஆடம்பர வாகன விரும்பிகள் மத்தியில் நல்ல வரேவற்புக் கிடைத்து வருகின்றது.

எதிர்கால சந்ததியினருக்காக ரூ.1.17 கோடி விலையுள்ள காரை வாங்கிய டிவி ரியாலிட்டி ஷோ ஜட்ஜ்... நீங்க என்ன செய்ய போறீங்க!

இந்த நிலையில், டிவி சேனல் ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாக பங்கேற்று வரும் இளம் பெண் ஒருவர் ஆடி நிறுவனத்தின் இந்த மின்சார காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கஸல் அலஹ் இவரே ஆடி இ-ட்ரான் இவி எலெக்ட்ரிக் காரை வாங்கியவர் ஆவார். இவரே மமா எர்த் (Mamaearth) நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.

எதிர்கால சந்ததியினருக்காக ரூ.1.17 கோடி விலையுள்ள காரை வாங்கிய டிவி ரியாலிட்டி ஷோ ஜட்ஜ்... நீங்க என்ன செய்ய போறீங்க!

இந்த இளம் தொழிலதிபர் மற்றும் சின்ன திரை பிரபலம் வாங்கியிருக்கும் ஆடி இ-ட்ரான் சொகுசு எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 1.17 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, எந்தவித வரி மற்றும் கூடுதல் கட்டணமும் சேர்க்கப்படாத நிலையில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை இதுவாகும்.

எதிர்கால சந்ததியினருக்காக ரூ.1.17 கோடி விலையுள்ள காரை வாங்கிய டிவி ரியாலிட்டி ஷோ ஜட்ஜ்... நீங்க என்ன செய்ய போறீங்க!

கஸல் வாங்கியிருப்பது ஆடி இ-ட்ரானின் உயர் நிலை வேரியண்ட் ஆகும். அதாவது, ஸ்போர்ட்பேக் 55 எனும் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் இ-ட்ரானையே கஸல் வாங்கியிருக்கின்றார். தன்னுடைய புதிய கார் கொள்முதல் குறித்த தகவலை அவரே அவரது இன்ஸ்டா பதிவின் வாயிலாக தெரியப்படுத்தியிருக்கின்றார்.

எதிர்கால சந்ததியினருக்காக ரூ.1.17 கோடி விலையுள்ள காரை வாங்கிய டிவி ரியாலிட்டி ஷோ ஜட்ஜ்... நீங்க என்ன செய்ய போறீங்க!

சிவப்பு நிற ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் காருக்கு அருகில் போஸ் கொடுத்து நிற்பதைப் போன்ற படத்தை அவர் லெளியிட்டிருக்கின்றார். மேலும், "எதிர்கால சந்ததியினருக்கு மாசற்ற உலகத்தை விட்டு செல்லும் நோக்கில் இந்த எலெக்ட்ரிக் காரை தான் வாங்கியிருக்கின்றேன். தொடர்ந்து இதுபோன்ற பணியை மேற்கொள்வேன். நீங்களும் இவ்வாறு மாசற்ற உலகிற்கு உதவுவீர்களா?" என அப்பதிவில் அவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

எதிர்கால சந்ததியினருக்காக ரூ.1.17 கோடி விலையுள்ள காரை வாங்கிய டிவி ரியாலிட்டி ஷோ ஜட்ஜ்... நீங்க என்ன செய்ய போறீங்க!

அதாவது, பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு தான் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு மாறியிருப்பதை கஸல் தனது இன்ஸ்டா பதிவின் வாயிலாக தெரியப்படுத்தியிருக்கின்றார். உலக நாடுகள் பல காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு எலெக்ட்ரிக் வாகன ஊக்குவிப்பைக் கையாண்டு வருகின்றன.

எதிர்கால சந்ததியினருக்காக ரூ.1.17 கோடி விலையுள்ள காரை வாங்கிய டிவி ரியாலிட்டி ஷோ ஜட்ஜ்... நீங்க என்ன செய்ய போறீங்க!

இந்திய அரசாங்கமும் மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு மின் வாகனங்களுக்கு மானியம் வழங்குதல், வரி சலுகை போன்றவற்றை வழங்கி வருகின்றது. இத்துடன், மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியிலும் அரசு ஈடுபட்டு வருகின்றது.

எதிர்கால சந்ததியினருக்காக ரூ.1.17 கோடி விலையுள்ள காரை வாங்கிய டிவி ரியாலிட்டி ஷோ ஜட்ஜ்... நீங்க என்ன செய்ய போறீங்க!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே உலக நாடுகளின் எதிர்பார்ப்பில் தனது பங்களிப்பை வழங்கும் விதமாக மமா எர்த் நிறுவனத்தின் நிறுவனர் கஸல் விலையுயர்ந்த ஆடி இ-ட்ரான் மின்சார காரை வாங்கியிருக்கின்றார். வழக்கமான கார்களைக் காட்டிலும் பன் மடங்கு சிறப்பு வசதிகளைக் கொண்டதாக இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார் காட்சியளிக்கின்றது.

எதிர்கால சந்ததியினருக்காக ரூ.1.17 கோடி விலையுள்ள காரை வாங்கிய டிவி ரியாலிட்டி ஷோ ஜட்ஜ்... நீங்க என்ன செய்ய போறீங்க!

பெரிய அறுகோண வடிவ க்ரில், மேட் சாம்பல் பூச்சு கொண்ட பான்னெட், மஞ்சள் நிற காலிபர்கள் கொண்ட 20 இன்ச் வீல்கள் உள்ளிட்டவை இ-ட்ரானின் வெளிப்புற கவர்ச்சியான தோற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களாக நான்கு ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஒயர்லெஸ் சார்ஜிங், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட திரை, ஆம்பிசியன்ட் மின் விளக்கு உள்ளிட்ட அம்சங்கள் இக்காரில் வழங்கப்படுகின்றன.

எதிர்கால சந்ததியினருக்காக ரூ.1.17 கோடி விலையுள்ள காரை வாங்கிய டிவி ரியாலிட்டி ஷோ ஜட்ஜ்... நீங்க என்ன செய்ய போறீங்க!

ஆடி இ-ட்ரான் மின்சார காரை வீட்டில் உள்ள 11 kW ஏசி சார்ஜர்களில் வைத்துகூட சார்ஜ் செய்து கொள்ள முடியும். இது தவிர டிசி சார்ஜர் வாயிலாகவும் சார்ஜ் செய்யும் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இக்காரில் 95 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 408 பிஎச்பி பவர் மற்றும் 664 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

எதிர்கால சந்ததியினருக்காக ரூ.1.17 கோடி விலையுள்ள காரை வாங்கிய டிவி ரியாலிட்டி ஷோ ஜட்ஜ்... நீங்க என்ன செய்ய போறீங்க!

இது உயர்நிலை இ-ட்ரான் வெளிப்படுத்தும் திறன் ஆகும். ஆரம்ப நிலையில் விற்பனைக்குக் கிடைக்கும் இ-ட்ரான் அதிகபட்சமாக 360 பிஎச்பி பவரையும், 561 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றன. மேலும், இவை ஒரு முழுமையான சார்ஜில் 484 கிமீ வரை ரேஞ்ஜ் தரக் கூடியவையாக இருக்கின்றன. இத்தகைய சூப்பரான காரையே கஸல் தற்போது வாங்கியிருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 26, 2022, 19:59 [IST]
English summary
Mamaearth founder ghazal alagh buys audi e tron ev
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+