எல்லோரும் எதிர்பார்த்த காரில் யாரும் எதிர்பாராத மாற்றம்! என்ன இப்படி ஆகிடுச்சு!

மாருதி நிறுவனம் வரும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தவுள்ள மாருதி ஜிம்னி காரில் முக்கியமா மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்த விபரமான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனத்திடமிருந்து மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வரும் கார் மாருதி ஜிம்னி, இந்த கார் இந்தியாவில் மாருதி ஆலையில் தயாரானாலும் இது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறதே தவிர இந்தியாவில் விற்பனையில்லை. இந்நிலையில் இந்த காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த மாருதி நிறுவனம் முடிவு செய்தது. இந்த அறிவிப்பு வெளியான போது இருந்தே மாருதி ரசிகர்கள் துள்ளி குதித்து வருகின்றனர். நீண்ட காலமாக மாருதியிடமிருந்து எதிர்பார்த்த கார் இது.

எல்லோரும் எதிர்பார்த்த காரில் யாரும் எதிர்பாராத மாற்றம்! என்ன இப்படி ஆகிடுச்சு!

இந்த காரை மாருதி நிறுவனம் வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த காரர் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் டெஸ்ட் செய்யப்பட்டு வந்த செய்திகள் எல்லாம் இதுவரை வெளியாகியுள்ளன. இந்த காருக்காக மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் இந்த காரை மாருதி நிறுவனம் 5 டோர் ஆஃப்ரோடு எஸ்யூவி காராக களம் இறக்க முடிவு செய்துள்ளது.

இந்த கார் குறித்த செய்திகள் வெளியான போது இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை பிரெஸ்ஸா காரில் உள்ள 1.5 லிட்டர் டூயல் ஜெட் கே15சி பெட்ரோல் இன்ஜின் மைல்டு ஹைபிரிட் தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த ஜிம்னி காரில் இந்த இல்லை எனவும், மாருதி நிறுவனத்தின் பழைய கே15பி இன்ஜின் தான் பொருத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாராகி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் 3 டோர் ஜிம்னி காரில் இதே இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் 102 பிஎச்பி பவரையும் 130 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், இந்த இன்ஜின் மைல்டு ஹைபிரிட் தொழிற்நுட்பத்துடன் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஜிம்னி காரின் மைலேஜ் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். கியரை பொருத்தவரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும்3 டோர் ஜிம்னி காரில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த கார் சுஸூகி ஆல்-கிரிப் ப்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த 1.5 லி கே15பி பெட்ரோல் இன்ஜின் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஜிம்னி 3 டோர் காரில் மட்டுமல்ல வெளிநாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதியாகும் எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் விற்பனையாகும் சியாஸ் செடான் கார் ஆகிய கார்களின் பொருத்தப்படுகிறது. இந்த இன்ஜினை இணைப்பது மூலம் காரின் தயாரிப்பு செலவு குறைகிறது. அதே போல இந்தியாவில் அறிமுகமாகும் 5 டோர் காரின் கியர் பாக்ஸிலும் மாற்றம் உள்ளது. இதன் ஆட்டோமெட்டிக் கியர் வேரியன்டில் 4 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸிற்கு பதிலாக 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் கியர் பாக்ஸ் பொருத்தப்படுகிறது. இந்த கியர் பாக்ஸ் தான் பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா, எர்டிகா, எக்ஸ்எல்6 ஆகிய கார்களில் இருக்கிறது.

இந்த காரில் சுஸூகி ஆல் கிரிப் ப்ரோ 4-வீல் டிரைவ் டெக் தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதே தொழிற்நுட்பம் கிராண்ட் விட்டாரா காரிலும் இருக்கிறது. இந்த சுஸூகி ஆல் கிரிப் ப்ரோ காரை பொருத்தவரை மல்டிபிள் இன்ஜின் டார்க் மற்றும் ஸ்பீடு லிமிட்களில் குறைந்த ரேஸியோ கியரில் செயல்படும் திறன் கொண்டது. இந்த காரில் டிரைவ் சாதாரண ரோட்டில் 2 வீல் டிரைவ் ஹை மோடையும்,ஆஃப் ரோடு கண்டிஷன்களில் 4 வீல் டிரைவ் ஹை மோடையும், அதிகமாகன ஆஃப்ரோடு கண்டிஷனில் 4 வீல் டிரைவ் லோ மோடையும் பயன்படுத்தலாம்.

இதற்கு முன்பு வந்த தகவலின்படி ஜிம்னி எஸ்யூவி காரின் நீளம் 3850 மிமீ எனவும், அகலம் 1645 மிமீ எனவும் உயரம் 1730 மிமீ எனவும், வீல் பேஸ் 2550 மிமீ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஜிம்னி சியாரா காரை விட வீல் பேஸ் மற்றும் ஒட்டு மொத்த நீளம் 300 மிமீ அதிகமாகும். இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள். இந்த காரின் விலை என்னவாக இருக்கும் என்ற உங்கள் கணிப்பையும் கமெண்டில் சொல்லுங்கள்!

Most Read Articles
English summary
Maruti 5 door SUV Jimny car specifications emerge
Story first published: Saturday, December 10, 2022, 10:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X