தீபாவளி போனஸை எப்படி செலவு பண்ணுறதுன்னு தெரியலயா? உடனே இந்த காரை வாங்கி போடுங்க!விலையும் கம்பி பண்ணீட்டாங்க

மாருதி நிறுவனம் தனது ஆல்டோ கே10 மற்றும் ஆல்டோ 800 கார்களுக்கான விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது. எவ்வளவு விலை குறைத்துள்ளது. மற்றும் இந்த காரில் உள்ள அம்சங்களைப் பற்றிக் காணலாம் வாருங்கள்.

தீபாவளி போனஸை எப்படி செலவு பண்ணுறதுன்னு தெரியலயா . . . உடனே இந்த காரை வாங்கி போடுங்க . . . விலையும் கம்பி பண்ணிட்டாங்க . . .

மாருதி சுஸூகி ஆல்டோ கார் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக விற்பனையாகி வரும் ஹேட்ச்பேக் கார். இது என்ட்ரி லெவல் ஹேட்ச் பேக் காராக இருப்பதால் முதன் முறையாகச் சொந்தமாக கார் வாங்குபவர்கள் இந்த காரை தான் விரும்பி வாங்குகின்றனர். இந்த கார் விலையும் குறைவு, முதன் முறையாக கார் ஓட்டுபவர்களுக்கும் எளிமையாக கார் ஓட்டலாம் என்ற எண்ணத்தில் இந்த காரை பலர் விரும்புகின்றனர்.

தீபாவளி போனஸை எப்படி செலவு பண்ணுறதுன்னு தெரியலயா . . . உடனே இந்த காரை வாங்கி போடுங்க . . . விலையும் கம்பி பண்ணிட்டாங்க . . .

பலர் முதன் முறையாக கார் ஓட்டி படித்ததே இந்த காரில் தான் இருக்கும். இப்படியான ஆல்டோ காரை தற்போது மாருதி நிறுவனம் ஆல்டோ கே10 மற்றும் ஆல்டோ 800 ஆகிய 2 வித காராக வெளியிடுகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி தான மாருதி நிறுவனம் ஆல்டோ கே10 காரை அப்டேட் செய்து வெளியிட்டது. கடந்த காரின் மூன்றாம் தலைமுறை கார் கடந்த 2011ம் ஆண்டு வந்திருந்தது.

தீபாவளி போனஸை எப்படி செலவு பண்ணுறதுன்னு தெரியலயா . . . உடனே இந்த காரை வாங்கி போடுங்க . . . விலையும் கம்பி பண்ணிட்டாங்க . . .

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆல்டோ கே10 கார் ரூ3.99 லட்சம் முதல் டாப் வேரியன்ட் ரூ5.84 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதுவே ஆல்டோ 800 கார் ரூ3.39 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் தீபாவளி நெருங்குவதால் பலர் இந்த நேரத்தில் கார்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் கார்களின் விற்பனையை அதிகரிக்க மாருதி தற்போது புதிய யுக்தி ஒன்றைக் கையில் எடுத்துள்ளது.

தீபாவளி போனஸை எப்படி செலவு பண்ணுறதுன்னு தெரியலயா . . . உடனே இந்த காரை வாங்கி போடுங்க . . . விலையும் கம்பி பண்ணிட்டாங்க . . .

தற்போது மாருதி ஆல்டோ கே10 மற்றும் ஆல்டோ 800 காருக்கு விலையில் தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதன்படி ஆல்டோ கே10 காருக்கு ரூ25 ஆயிரம் வரையிலும், ஆல்டோ 800 காருக்கு ரூ29 ஆயிரம் வரையிலும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் கார்களின் விற்பனையை அதிகரிக்க இந்த யுக்தியை தற்போது மாருதி கையில் எடுத்துள்ளது. இதனால் பலர் பலனடைய முடியும்.

தீபாவளி போனஸை எப்படி செலவு பண்ணுறதுன்னு தெரியலயா . . . உடனே இந்த காரை வாங்கி போடுங்க . . . விலையும் கம்பி பண்ணிட்டாங்க . . .

மாருதி ஆல்டோ கே10 காரை பொருத்தவரை கே சிரீஸ் 1.0 லிட்டர் டூயல் ஜெட் இன்ஜின், டூயல் விவிடி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 66.62 பிஎஸ் பவரையும் அதிகபட்சமாக 89 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், இந்த காரின் ஆட்டோமெட்டிக் வேரியன்ட் 24.90 கி.மீ மைலேஜூம் மேனுவல் வேரியன்ட் 24.39 கி.மீ மைலேஜூம் கிடைக்கும் என மாருதி நிறுவனம் கூறுகிறது.

தீபாவளி போனஸை எப்படி செலவு பண்ணுறதுன்னு தெரியலயா . . . உடனே இந்த காரை வாங்கி போடுங்க . . . விலையும் கம்பி பண்ணிட்டாங்க . . .

இந்த புதிய ஆல்டோ கே10 காரில் பல மார்டனான தொழிற்நட்ப அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 7 இன்ச் ஃப்ளோட்டிங் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இதே டிஸ்பிளே தான் எஸ்பிரெஸ்ஸொ, செலிரியோ மற்றும் வேகன்ஆர் ஆகிய கார்களிலும் உள்ளது. இது ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றை சப்போர்ட் செய்யும், இது போக யூஎஸ்பி, ப்ளூடூத், ஆக்ஸ் கேபிள் கனெக்டிவிட்டியும் இருக்கிறது. இதன் கண்ட்ரோல் செய்யும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளி போனஸை எப்படி செலவு பண்ணுறதுன்னு தெரியலயா . . . உடனே இந்த காரை வாங்கி போடுங்க . . . விலையும் கம்பி பண்ணிட்டாங்க . . .

இந்த புதிய ஆல்டோ கே10 காரில் பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதில் எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்பியூஷன் உடன் கூடிய அண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்றார், ஸ்பீடு சென்சிங் டோர் லாக், ஹைஸ்பீடு அலர்ட், ப்ரிடென்ஷனர் மற்றும் ஃபோர்ஸ் லிமிட் முன்பக்க சீட் பெல்ட் உள்ளிட்ட ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

தீபாவளி போனஸை எப்படி செலவு பண்ணுறதுன்னு தெரியலயா . . . உடனே இந்த காரை வாங்கி போடுங்க . . . விலையும் கம்பி பண்ணிட்டாங்க . . .

இந்த கார் மொத்தம் 6 விதமான கலர்களில் கிடைக்கிறது ஸ்பீடி ப்ளூ, எர்த் கோல்டு, சிசிலிங் ரெட், சில்கி ஒயிட், சாலிட் ஒயிட், க்ரனைட் க்ரே ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரை நீங்கள் உடனடியாக வாங்க விரும்பினால் அருகில் உள்ள டீலரை தொடர்பு கொள்ளுங்கள், தள்ளுபடி விலையிலேயே டீலர்களிடம் இந்த கார் தற்போது கிடைக்கிறது. தீபாவளி வரை மட்டுமே இந்த காருக்கு தள்ளுபடி விலை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Saturday, October 1, 2022, 10:14 [IST]
English summary
Maruti alto cars price discounted for festival season
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+