மாருதியின் புத்தாண்டு பரிசு அறிவிப்பு! என்ன தெரிஞ்சா ஐஸ்போல உறைஞ்சிருவீங்க! வெறுப்பு மட்டும் ஆகிடாதீங்க!

புத்தாண்டை முன்னிட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக வாகன உற்பத்தியாளர்கள் தள்ளுபடி, கேஷ்பேக் மற்றும் சிறப்பு பரிசுகள் போன்றவற்றை வழங்குவது வழக்கம். அந்தவகையில், மாருதி சுஸுகி நிறுவனம் வரும் 2023 ஆம் ஆண்டை முன்னிட்டு இந்தியர்களுக்கு ஓர் வித்தியாசமான பரிசை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

விலை உயர்வு எனும் பரிசையே வரும் புதிய ஆண்டை முன்னிட்டு மாருதி இந்தியர்களுக்கு வழங்க திட்டமிட்டிருக்கின்றது. இந்த தகவல் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக புத்தாண்டை முன்னிட்டு அடுத்த வருடம் புதிய மாருதி காரை வாங்கலாம் என திட்டம் போட்டிருந்தவர்களுக்கு இந்த தகவல் பெருத்த ஷாக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நடப்பாண்டு தொடங்கியது முதலே மாருதி சுஸுகி உள்ளிட்ட முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் தயாரிப்புகளின் விலையை உயர்த்திய வண்ணம் இருக்கின்றனர்.

விலை உயர்வு

இந்த நிலையிலேயே அடுத்த ஆண்டின் தொடக்கத்தையும் விலை உயர்வுடன் தொடங்க இருப்பதாக சில நிறுவனங்கள் அறிவித்த வண்ணம் உள்ளன. அவற்றின் வரிசையில் தற்போது மாருதி சுஸுகியும் இணைந்துள்ளது. இது மாருதி சுஸுகி வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரியளவில் கவலையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. சமீப காலமாக மிகக் கடுமையாக உயர்ந்துக் கொண்டிருக்கும் வாகன கட்டுமான பொருட்களின் விலை உயர்வே இந்த விலை உயர்வு நடவடிக்கைக் காரணம் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாகன கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் சுமை அதிகரித்திருப்பதாகவும், அதைக் குறைக்கும் பொருட்டே இந்த விலை உயர்வைச் செய்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மாருதி இந்த செயலை செய்திருப்பது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சி, கவலை என அனைத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது. சமீபத்தில் டாடா நிறுவனம் அதன் நெக்ஸான் போன்ற குறிப்பிட்ட கார் மாடல்களின் விலையைக் கணிசமாக உயர்த்தியது.

இதேபோல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் அதன் இருசக்கர வாகனங்களின் விலையை அண்மையில் உயர்த்தியது. ரூ. 1,500 வரை டூ-வீலர்களின் விலையை நிறுவனம் உயர்த்தி அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இந்த நிலையிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் அதன் கார்களின் விலையைக் கணிசமாக உயர்த்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் விலை உயர்வை 2023 ஜனவரியில் இருந்தே செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதுவரை பழைய விலையிலேயே நிறுவனத்தின் கார்கள் விற்பனைக்குக் கிடைக்கும். இது இந்தியர்களுக்கு லேசாக ஆறுதல் அளிக்கும் தகவலாக அமைந்துள்ளது. புதிய ஆண்டை முன்னிட்டு காரை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த கால அவகாசம் மிகுந்த உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. ஆமாங்க வாடிக்கையாளர்கள் புதிய காரை வாங்கிக் கொள்ளும் பொருட்டு பழைய விலையிலேயே இந்த டிசம்பர் மாத இறுதி வரை மாருதி கார்கள் விற்கப்பட இருக்கின்றன.

மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் சில மாதங்களில் அதிகம் மைலேஜ் தரும் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகிய கார் மாடல்களின் ஹைபிரிட் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்த கார்கள் லிட்டருக்கு 35 கிமீ தொடங்கி 40 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. ஏற்கனவே ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார் மாடல்களுக்கு இந்தியாவில் மிக அமோகமான வரேவற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலில் இதன் அதிகம் மைலேஜ் தரும் ஹைபிரிட் வெர்ஷன்கள் விற்பனைக்கு வர இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் அந்த கார்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த கார்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே நிறுவனம் விரைவில் அவற்றின் ஹைபிரிட் வெர்ஷன்களை இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது. ஏற்கனவே, இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக டொயோட்டா உடனான கூட்டணியில் உருவாக்கியிருக்கும் கிராண்ட் விட்டாராவை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இதைக் கொண்டு வந்ததற்கு நல்ல பலன் கிடைக்கும் பல ஆயிரக் கணக்கானோர் இந்த காரை புக் செய்துக் கொண்டிருக்கின்றனர். அக்டோபர் மாத நிலவரப்படி இந்தியாவில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கிராண்ட் விட்டாராவிற்கு முன்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போதைய நிலவரப்படி இந்த எண்ணிக்கை லட்சத்தைக் கடந்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. மாருதியின் இந்த கார் அதிகம் மைலேஜ் தரும் காராக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் என இரு விதமான தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் மைல்டு ஹைப்ரிட் வெர்ஷனில் 1.5 லிட்டர் கே15சி பெட்ரோல் மோட்டாரும், ஸ்ட்ராங் ஹைப்ரிட் வெர்ஷனில் 1.5 லிட்டர் டிஎன்ஜிஏ பெட்ரோல் மோட்டாரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஸ்ட்ராங் ஹைபிரிட் வெர்ஷனில் இ-சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Maruti announced price hike 2023 january
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X