மாருதி கார் வெச்சுருக்கீங்களா... அப்ப ரெடியா இருங்க... உங்க கார்லயும் இந்த விஷயம் எப்ப வேணாலும் நடக்கலாம்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி பலேனோ (Maruti Baleno). இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில், மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது சாப்ட்வேர் அப்டேட் ஒன்றை செய்துள்ளது.
மாருதி பலேனோ காரின் ஜெட்டா மற்றும் ஆல்பா வேரியண்ட்களுக்கு, இந்த ஓவர் தி ஏர் (Over-the-air - OTA) அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மாருதி பலேனோ காரில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியை இந்த அப்டேட் சேர்த்துள்ளது. முன்னதாக ஓவர் தி ஏர் அப்டேட் மூலமாக மாருதி பிரெஸ்ஸா (Maruti Brezza) காரிலும் இதே வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

வரும் காலங்களில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற கார்களிலும் இந்த வசதி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாருதி பலேனோ காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 88 பிஹெச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்குகிறது.
தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 6.49 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.71 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். மாருதி சுஸுகி பலேனோ கார், சிஎன்ஜி வெர்ஷனிலும் கிடைக்கிறது. இதன் புதிய சிஎன்ஜி வெர்ஷன் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி பலேனோ காரின் ஸ்டாண்டர்டு மாடலில் பொருத்தப்பட்டுள்ள அதே இன்ஜின்தான் சிஎன்ஜி வெர்ஷனிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி வெர்ஷனில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 77.5 ஹெச்பி பவரையும், 98.5 என்எம் டார்க் திறனையும் மட்டுமே உருவாக்கும். அதாவது ஸ்டாண்டர்டு மாடலை காட்டிலும், சிஎன்ஜி வெர்ஷனின் பவர் அவுட்புட் சற்று குறைவு. ஆனால் பலேனோ சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான மைலேஜ் என்பதில் சந்தேகமில்லை. மாருதி பலேனோ கார் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மற்றும் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) போன்ற கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. மாருதி பலேனோ கார் பிரீமியமான மாடல் என்பதால், அந்நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
மாருதி சுஸுகி நிறுவனம் தனது ஒவ்வொரு கார்களிலும், சிஎன்ஜி வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தனது கார்கள் ஒவ்வொன்றிலும் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி மாருதி பலேனோ காரின் மிக முக்கியமான போட்டியாளரான டாடா அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் 2023ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. கூடவே, மாருதி சுஸுகி நிறுவனத்தை போன்று சிஎன்ஜி கார்களிலும் கவனம் செலுத்தி கொண்டுதான் உள்ளது. தனது டியாகோ (Tata Tiago) மற்றும் டிகோர் (Tata Tigor) கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அத்துடன் டியாகோ, டிகோர் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








