மாருதி சுஸுகிக்கு கடந்த 2021-22 நிதியாண்டு எப்படி அமைந்தது? கொரோனாவிற்கு பிறகு ஏற்றம் கண்டுள்ளதா?

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியின் கடந்த 2022 பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி சுஸுகிக்கு கடந்த 2021-22 நிதியாண்டு எப்படி அமைந்தது? கொரோனாவிற்கு பிறகு ஏற்றம் கண்டுள்ளதா?

3 மாதங்களாகிவிட்ட நிலையில், பயணிகள் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்திற்கு நடப்பு 2022ஆம் ஆண்டு எதிர்பார்த்த அளவிற்கு நல்லப்படியாக துவங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் கடந்த ஜனவரி & பிப்ரவரியிலும் சரி, கடந்த மார்ச் மாதத்திலும் சரி கடந்த ஆண்டை காட்டிலும் மாருதி கார்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

மாருதி சுஸுகிக்கு கடந்த 2021-22 நிதியாண்டு எப்படி அமைந்தது? கொரோனாவிற்கு பிறகு ஏற்றம் கண்டுள்ளதா?

கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 1,33,861 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது 1,46,203 மாருதி கார்கள் விற்பனையாகி இருந்த கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 12,342 யூனிட்கள், அதாவது 8.44% குறைவாகும். 28 நாட்கள் மட்டுமே கொண்ட கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் கூட கடந்த மார்ச் மாதத்தை காட்டிலும் 63 மாருதி கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

மாருதி சுஸுகிக்கு கடந்த 2021-22 நிதியாண்டு எப்படி அமைந்தது? கொரோனாவிற்கு பிறகு ஏற்றம் கண்டுள்ளதா?

மொத்தமாக கடந்த 3 மாதங்களில் 3,96,733 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் 3 மாதங்கள் உடன் ஒப்பிடுகையில் 7.73% குறைவாகும். ஏனெனில் 2021இன் முதல் 3 மாதங்களில் 4,29,966 மாருதி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், 2021ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களுடன் ஒப்பிடுகையில் அதற்கடுத்த 3 மாதங்களில் கிட்டத்தட்ட 55,000 மாருதி கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகிக்கு கடந்த 2021-22 நிதியாண்டு எப்படி அமைந்தது? கொரோனாவிற்கு பிறகு ஏற்றம் கண்டுள்ளதா?

கடந்த மார்ச் மாதத்தில் உள்நாட்டு சந்தையில் 1,37,658 யூனிட் கார்களை (இதில் 6,241 யூனிட்கள் மாற்று நிறுவனங்களால் விற்கப்பட்டவை) விற்பனை செய்துள்ள மாருதி சுஸுகி இந்திய பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெளிநாட்டு சந்தைகளுக்காக 26,496 கார்களை கடந்த மாதத்தில் ஏற்றுமதி செய்துள்ளது. ஒரு மாதத்தில் மாருதி சுஸுகி ஏற்றுமதி செய்துள்ள அதிகப்பட்ச கார்களின் எண்ணிக்கை இதுவாகும்.

மாருதி சுஸுகிக்கு கடந்த 2021-22 நிதியாண்டு எப்படி அமைந்தது? கொரோனாவிற்கு பிறகு ஏற்றம் கண்டுள்ளதா?

மொத்தமாக 2021 ஏப்ரலில் துவங்கிய கடந்த 2021-22 நிதியாண்டில் 2,38,376 கார்களை இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு மாருதி சுஸுகி அனுப்பி வைத்துள்ளது. இந்தியா, பல வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சிறந்த உற்பத்தி சந்தையாக உள்ளதை ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறோம். ஏனெனில் மற்ற நாடுகளை காட்டிலும் வாகன தயாரிப்பு பணிகளை மேற்கொள்வது இந்தியாவில் செலவு குறைந்ததாக, நம்பகத்தன்மை உடன் இருப்பதே இதற்கு காரணமாகும்.

மாருதி சுஸுகிக்கு கடந்த 2021-22 நிதியாண்டு எப்படி அமைந்தது? கொரோனாவிற்கு பிறகு ஏற்றம் கண்டுள்ளதா?

மாருதி சுஸுகியின் மினி கார்களான ஆல்டோ & எஸ்-பிரெஸ்ஸோ மொத்தமாக 15,491 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2021 மார்ச் மாதத்தில் இவை 24,653 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த நிதியாண்டில் (2021 ஏப்ரல்- 2022 மார்ச்) மொத்தமாக 2,11,762 ஆல்டோ & எஸ்-பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020-21 நிதியாண்டில் இவற்றின் விற்பனை எண்ணிக்கை 2,26,159 யூனிட்களாக பதிவாகி இருந்தது.

மாருதி சுஸுகிக்கு கடந்த 2021-22 நிதியாண்டு எப்படி அமைந்தது? கொரோனாவிற்கு பிறகு ஏற்றம் கண்டுள்ளதா?

அடுத்து காம்பெக்ட் கார்கள் பிரிவில் அடங்குகின்ற பலேனோ, செலிரியோ, டிசைர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர் எஸ், வேகன் ஆர் உள்ளிட்டவை 82,314 யூனிட்கள் கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டிலும் இவற்றின் விற்பனை எண்ணிக்கையில் பெரியதாக மாற்றமில்லை, 82,201 யூனிட்கள் தான் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து கடந்த மார்ச் வரையில் மேற்கூறப்பட்டுள்ள மாருதி காம்பெக்ட் கார்கள் 7,04,881 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகிக்கு கடந்த 2021-22 நிதியாண்டு எப்படி அமைந்தது? கொரோனாவிற்கு பிறகு ஏற்றம் கண்டுள்ளதா?

கொரோனா வைரஸ் பரவலால் சில மாதங்களுக்கு விற்பனை பாதிக்கப்பட்ட போதிலும், இதற்கு முந்தைய 2020-21 நிதியாண்டில்தான் மாருதி காம்பெக்ட் கார்கள் சற்று அதிகமாக 7,19,647 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய மினி & காம்பெக்ட் பிரிவுகளில் கடந்த மார்ச் மாதத்தில் 97,805 யூனிட் கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.மாருதியின் ஒரேயொரு நடுத்தர-அளவு செடான் காராக விளங்கும் சியாஸ் கடந்த மார்ச்சில் 1,834 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகிக்கு கடந்த 2021-22 நிதியாண்டு எப்படி அமைந்தது? கொரோனாவிற்கு பிறகு ஏற்றம் கண்டுள்ளதா?

எர்டிகா, ஜிப்ஸி, எஸ்-கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எக்ஸ்.எல்6 உள்ளிட்டவை அடங்கும் மாருதி பயன்பாட்டு வாகன பிரிவில் இருந்து 25,001 கார்களும், 9,221 ஈக்கோ வேன்களும் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக கடந்த நிதியாண்டில் 13,31,558 யூனிட் பயணிகள் கார்களை மாருதி சுஸுகி இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இது 2020-21 நிதியாண்டின் 12,93,840 யூனிட்கள் உடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய 38 ஆயிரம் யூனிட்கள் அதிகமாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 1, 2022, 18:05 [IST]
English summary
Maruti car sales march 2022 segment wise
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+