மே மாதம் மாஸ் காட்டிய மாருதி... எவ்வளவு சேல்ஸ் நடந்துச்சு தெரியுமா?
மாருதி நிறுவனம் கடந்த மே மாதம் எவ்வளவு கார்கள் விற்பனை செய்தது. இது எவ்வளவு விற்பனையில் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

2022ம் ஆண்டின் 5 மாதத்தைக் கடந்துவிட்டோம். தற்போது ஆண்டின் மத்தியிலிருந்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் மே மாத வாகன நிறுவனங்களின் விற்பனை ரிப்போர்ட்கள் வரத்துவங்கியுள்ளன.அந்த வகையில் தற்போது மாருதி கார்களின் மே மாத விற்பனை ரிப்போர்ட்டை தான் இந்த பதிவில் காணப்போகிறோம். கடந்தாண்டு மே மாதம் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இந்தியா முழுவதும் இருந்த நிலையில் விற்பனை மந்தமாக இருந்தது. தற்போது கிட்டத்தட்ட எல்லாம் நார்மல் ஆகிவிட்ட நிலையில் இந்த விற்பனை சூடுபிடித்துள்ளது.

மாருதி நிறுவனம் கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 1,24,474 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு மே மாத விற்பனையை ஒப்பிடும் போது 278.31 சதவீத வளர்ச்சியாகும். கடந்தாண்டு மே மாதம் மொத்தம் 32,903 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. தற்போது அதை விட 91,571 வாகன விற்பனை அதிகரித்துள்ளது. மே மாத விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும் போது 2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 1,21,995 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன.

மாருதி நிறுவனம் ஏற்றுமதியிலும் மே மாதம் சக்கை போடு போட்டுள்ளது. மொத்தம்27,191 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. இதுவே கடந்தாண்டு மே மாதம் மொத்தம் 11,262 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தன. இது கடந்த ஏப்ரல் மாதம் 18,413 ஆகவே இருந்தது. ஏற்றுமதியிலும் மாருதி நிறுவனம் கடந்த மே மாதம் நல்ல விற்பனையைப் பெற்றுள்ளது.

இதில் மாருதி நிறுவனம் 4 மீட்டருக்கும் குறைவான வாகனங்களில் மினி மற்றும் காம்பேக்ட் ஆகிய கேட்டகிரியில் கார்களை விற்பனை செய்கிறது. இதில் மினி கேட்டகிரியில் 17,408 கார்களும் காம்பேக்ட் கேட்டகிரியில் 67,947 கார்களும், விற்பனையாகியுள்ளன. இந்த இரண்டு கேட்டகிரியும் சேர்ந்து மொத்தம் 85,355 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த மே மாதம் இதே கேட்டகிரியில் மொத்தம் 25103 வானகங்கள் விற்பனையாகியிருந்தது.

மினி கேட்டகிரியில் இந்நிறுவனம் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ ஆகிய கார்களை விற்பனை செய்கிறது காம்பேக்ட் கேட்டகிரியில் பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னீஷ், ஸ்விஃப்ட், டூர்-எஸ், வேகன்ஆர் ஆகிய கார்களை விற்பனை செய்வது குறிப்பிட்தக்கது அடுத்ததாக மிட் சைஸ் காரில் இந்நிறுவனம் சியாஸ் காரை மட்டுமே விற்பனை செய்கிறது. அந்த கார் கடந்த மே மாதம் 586 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இதன்விற்பனை 349 ஆக இருந்தது.

அடுத்ததாகப் பயணிகள் கார்களில் யூட்டிலிட்டி கார்கள் மற்றும் வேன்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அதன்படி கடந்த மே மாதம் யூட்டிலிட்டி கார்கள் மொத்தம் 28,051 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு மே மாதம் இதன் விற்பனை வெறும் 6,355 ஆக மட்டுமே இருந்தது. வேன்களை பொருத்தவரை ஈக்கோ என்ற ஒரே தயாரிப்பை மட்டும் இந்நிறுவனம் விற்பனை செய்கிறது. இது கடந்த மே மாதம் 10,482 எண்ணம் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு மே மாதம் வெறும் 1,096 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

யூட்டிலிட்டி வாகனத்தைப் பொருத்தவரை இந்நிறுவனம் எர்டிகா, எஸ்-கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ் எல்6 ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. ஒட்டு மொத்தமாக மினி, காம்பேக்ட், யூட்டிலிட்டி, மிட்சைஸ், வேன் ஆகிய எல்லாவற்றையும் சேர்ந்து மொத்தம் 1,24,474 வாகனங்கள் மொத்தம் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு வெறும் 32,903 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.

பயணிகள் வாகனம் தவிர லைட் கமர்ஷியம் வாகன பிரிவில் இந்நிறுவனம் சூப்பர் கேரி என்ற லோடு ஆட்டோவையும் விற்பனை செய்கிறது. அதைப் பொருத்தவரை கடந்த மே மாதம் 3526 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு மே மாதத்தில் இந்த வாகன விற்பனை வெறும் 868 ஆக மட்டுமே இருந்தது. குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இந்த மாதமும் மார்கெட்டில் மாருதி தான் நல்ல விற்பனையைப் பெற்ற நிறுவனமாக இருக்கிறது.
கடந்த மாதம் முதல் எல்லா செக்மெண்டிலும் விற்பனை வளர்ச்சி பெற்றுள்ளது.இது மக்கள் கொரோனாவிற்கு பிறகு சகஜ நிலைக்குத் திரும்பியதை உணர்த்துகிறது. இந்த ஜூன் மாதமும் எந்த வித தடங்களும் இதுவரை இல்லை என்பதால் மே மாத விற்பனையை ஜூன் மாதம் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








