ஸ்டார் ரேட்டிங் எல்லாம் ஒன்னத்துக்கும் ஆகாது... சொன்னது யார்னு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க!

மாருதி நிறுவனத்தின் 3 கார்கள் சமீபத்தில் குலோபல் என்கேப் டெஸ்டில் 1 ஸ்டார் பெற்ற நிலையில் மாருதி நிறுவனத்தின் சேர்மன் இந்த கிராஷ் டெஸ்ட் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த முழு விபரங்களை காணலாம் வாருங்கள்

இந்தியாவில் அதிகமாக கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் மாருதி தான். விற்பனை எண்ணிக்கையில் மாருதியின் பக்கத்தில் கூட யாராலும் நெருங்க முடியாது. அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதமும் பலமான விற்பனையைக் காட்டி வருகிறது. என்னதான் விற்பனையில் நம்பர் 1 இடத்திலிருந்தாலும் மாருதி நிறுவனத்தின் கார்கள் பில்டு குவாலிட்டியில் சிறந்த கார்கள் இல்லை என்ற அவப்பெயரும் அந்நிறுவனத்திற்கு இருக்கிறது.

ஸ்டார் ரேட்டிங் எல்லாம் ஒன்னத்துக்கும் ஆகாது... சொன்னது யார்னு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க!

இதை உறுதிப்படுத்தும் விதமாகச் சமீபத்தில் வெளியான குலோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்டில் மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட், எஸ்-பிரஸ்ஸோ மற்றும் இக்னீஷ் ஆகிய கார்கள் எல்லாம் வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை வாங்கியது. இந்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் மாருதி நிறுவனத்தின் கார்கள் எல்லாம் கிராஷ் டெஸ்டில் குறைவான ஸ்டார் ரேட்டிங் வாங்கிய கார்கள் எனப் பேசத் துவங்கினர். இந்நிலையில் இதற்குப் பதிலடி தரும் வருகையில் மாருதி நிறுவனத்தின் சேர்மன் சமீபத்தில் பேசியுள்ளார்.

சமீபத்தில் நடந்த ஒரு சந்திப்பில் ஊடகத்தினர் மாருதி நிறுவனத்தின் சேர்மன் ஆர்சி பார்கவா கிராஷ் டெஸ்ட்டில் மாருதி நிறுவனத்தின் கார்கள் 1 ஸ்டார் ரேட்டிங் வாங்கியது குறித்து கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் : "என்கேப் ஸ்டாண்ட்டைகளின் படி கார்களை தயாரித்தால் சாலைகளில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை குறையப்போவதில்லை. இதற்கும் விபத்திற்கும் சம்பந்தமேயில்லை. உலகம் முழுவதும் உள்ள ரெகுலேட்டர்களுக்கு அவர்களது வேலை தெரியவில்லை.

இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான விபத்துக்கள் காரில் ஏற்படும் ஏதாவது பிரச்சனை காரணமாகத் தான் நடக்கிறது. இந்தியாவில் ஃபேக்டரியில் தயாரிக்கப்படும் வாகனம் சாலையில் பயன்பாட்டில் இருக்கும் போது ஃபேக்டரியில் என்ன பிட்டிங்கில் இருக்கிறதோ அதே ஃபிட்டிங்கில் தான் இருக்கிறது என்பதற்குச் சான்றும் கிடையாது. இதற்கான சட்டமும் கிடையாது, இதைக் கண்காணிக்க என் முறையும் இல்லை. பெரும்பாலான விபத்துக்கள் ஏதாவது ஃபெயிலியர் காரணமாகவே நடக்கிறது.

என்கேப் கிரஷ் டெஸ்டில் நடக்கும் ரேட்டிங்கை வைத்துக் கிடைக்கும் ஸ்டார்களை வைத்து தங்கள் கார் பாதுகாப்பானது என கார் தயாரிப்பு நிறுவனங்கள் சொல்லி விடுகின்றன. ஆனால் சாலையில் விபத்துக்களை அது தடுக்க எந்த விதத்திலும் உதவுவது கிடையாது. இந்தியாவில் டிரைவர்களுக்கு முறையான பயிற்சியோ அல்லது சோதனையோ மற்ற நாடுகளில் இருப்பது போலக் கடினமாக இல்லை. இந்தியாவில் சாலைகளும் மிக மோசமான சாலைகளாக உள்ளது. இவை தான் விபத்திற்கு மூல காரணம்.

இதைச் சரி செய்தால் தான் விபத்தைத் தடுக்க முடியும் என்கேப்பில் நல்ல ஸ்டார் ரேட்டிங் வாங்குவதால் விபத்தைத் தடுக்க முடியாது. குலோபல் என்கேப் அமைப்பிற்கு ஆட்டோமொபைல்களுக்கான உதிரிப் பாகங்கள் அதாவது பாதுகாப்பு சம்மந்தப்பட்ட ஏர்பேக் உள்ளிட்ட உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பண்ட் செய்கின்றன." எனக் கூறியுள்ளார்.

கிராஷ் டெஸ்டில் சிறப்பான ரேட்டிங் கொண்ட கார்களை தான் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவலாகப் பரவி வரும் நேரத்தில் மாருதி நிறுவனத்தின் சேர்மன் பார்கவா எழுப்பியுள்ள இந்த கேள்வி பலரை யோசிக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. விபத்து நடந்தால் பாதுகாப்பான காரில் இருப்பதை விட விபத்தே ஏற்படாமல் தடுப்பது தானே சிறந்த வழி அதைச் செய்ய என்ன செய்ய வேண்டும் எனப் பலரை யோசிக்க வைத்துள்ளது. இவரது இந்த பேச்சு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 20, 2022, 17:05 [IST]
English summary
Maruti chairman RC Bhargava comments on gncap star rating
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+