2022 ஃபேஸ்லிஃப்ட் எர்டிகா, எக்ஸ்எல் 6 கார்களின் அறிமுகம் எப்போது? எதிர்பார்ப்புக்கு முற்று புள்ளி வைங்க பாஸ்!
மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் எக்ஸ்எல் 6 ஆகிய கார் மாடல்களின் அறிமுகம் எப்போது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல எம்பிவி கார் மாடல்களான எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகியவற்றின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் மிக விற்பனைக்கு வர இருப்பதாக அண்மைக் காலங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இக்கார்கள் இந்த மாதமே விற்பனைக்கு வரும் என புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் இரு கார் மாடல்களும் விற்பனையாளர்கள் ஷோரூமை வந்தடையத் தொடங்கியிருக்கின்றன. மிக சமீபத்தில் கியா நிறுவனம் அதன் கேரன்ஸ் எனும் புதுமுக எம்பிவி ரக காரை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியது. இந்த புதுமையான ஸ்டைல் மற்றும் பன்முக சிறப்பம்சங்களைக் கொண்ட வாகனமாக இக்கார் காட்சியளிக்கின்றது.

இதன் விளைவாக மக்கள் பலர் கியா கேரன்ஸ் பக்கம் சாய தொடங்கியிருக்கின்றனர். இதன் விளைவாக பிற நிறுவனங்களின் எம்பிவி கார்களுக்கு சற்றே மவுசு குறைய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இருந்து தங்களது வாகனங்களை காப்பாற்றிக் கொள்ளும் விதமாகவே மாருதி சுஸுகி நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய எம்பிவி கார்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட தொடங்கியிருக்கின்றது.

இந்த நிலையிலேயே இக்கார் இம்மாதத்தின் இறுதிக்குள் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளி வந்திருக்கின்றன. எர்டிகா ஏப்ரலின் மைய பகுதியிலும், எக்ஸ்எல்6 ஏப்ரலின் கடைசி வாரத்திலும் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன மாதிரியான புதுப்பித்தல்கள் செய்யப்பட்டுள்ளன?
எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய இரண்டிலும் மிக பெரியளவில் இல்லாமல் கணிசமான மாற்றங்களே வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், வெளிப்புறத்தல் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன் பக்க கிரில்லிலும், பம்பரிலும் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, காஸ்மெட்டிக்கிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுகுறித்த தெளிவான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்த தகவலை மிக மாருதி சுஸுகி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன?
வெளிப்புறத்தில் எதிர்பார்ப்பதை போலவே கேபினுக்குள்ளும் கணிசமான அப்டேட்டுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இரு மாடல்களின் உயர் நிலை வேரியண்டுகளிலும் உட்டன் ஃபினிஷ், குரோம் அக்செண்டுகள் மற்றும் லெதர் விராப்பட் ஸ்டியரிங் வீல் உள்ளிட்டவை இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, 9 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட அம்சங்களும் இக்கார்களில் வழங்கப்பட இருக்கின்றன. இது மட்டுமின்றி 360 டிகிரி கேமிராவும் இக்கார்கள் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமின்றி இவ்விரு எம்பிவி கார்களிலும் ஹெட்லைட், ஏசி வெண்டுகள்,ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், புதிய ஸ்டீரியோ சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா ஆகிய அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இத்துடன், 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஐசோஃபிக்ஸ் சைல்டு இருக்கை ஆங்கர்கள் மற்றும் ரிவிர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவையும் இரு புதுப்பிக்கப்பட்ட கார் மாடல்களிலும் வழங்கப்பட உள்ளன.

எஞ்ஜினில் ஏதாவது மாற்றம் உண்டா?
இரு எம்பிவி கார் மாடல்களிலும் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் அதே எஞ்ஜின்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினே இரு கார் புதுப்பிக்கப்பட்ட எம்பிவி கார்களிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவர் மற்றும் 138 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த எஞ்ஜின் மிக சிறந்த எஞ்ஜின் திறன் கொண்டது. இதுமட்டுமின்றி மிக சிறந்த எரிபொருள் சிக்கனத்தையும் இவை வழங்கும்.

மேலே பார்த்த அம்சங்களுடனேயே எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய கார் மாடல்கள் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இரு கார் மாடல்களும் இன்னும் சில நாட்களில் அறிமுகமாக இருக்கின்றன. இவற்றின் வருகையை எதிர்நோக்கி இந்தியர்கள் பலர் காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், தற்போது அதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications








