மாருதியின் இந்த கார் டப்பாதான் போலிருக்கே... தயவு செய்து யோசித்து பாத்து வாங்குங்க ப்ரோ!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த கார் மாடல் உண்மையிலேயே டப்பாதான் போலிருக்கே என கூறுமளவிற்கு மோதல் ஆய்வில் மிக மோசமான மதிப்பெண்ணை புகழ்பெற்ற கார் மாடல் ஒன்று பெற்றிருக்கின்றது. இந்த தகவலால் அதன் வாடிக்கையாளர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் இக்னிஸ்-ம் ஒன்று. மலிவான விலையில் பிரீமியம் அம்சங்களுடன் கிடைக்கும் காம்பேக்ட் அர்பன் எஸ்யூவி ரக காராக இது இருக்கின்றது. இந்த காரே பாதுகாப்பு தரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மிக மிகக் குறைவான புள்ளிகளைப் பெற்று அனைவரையம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. ஐந்து ஸ்டார்களுக்காக மேற்கொள்ளப்பட்ட கிராஷ் டெஸ்டில் இந்த கார் வெறும் ஒற்றை ஸ்டாரை பெற்றிருக்கின்றது.

இக்னிஸ்

மாருதி சுஸுகியின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக இக்னிஸ் இருக்கின்றது. இந்த கார் பாதுகாப்பு தரத்தில் இவ்வளவு குறைவான ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கின்ற காரணத்தினாலேயே அனைவரும் ஷாக்காகியிருக்கின்றனர். நிறுவனத்தின் இந்த கார் மாடல் மட்டுமல்லைங்க. ஸ்விஃப்ட் மற்றும் எஸ்-பிரஸ்ஸோ கார் மாடலும் மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த கார் மாடல்களும் இக்னிஸைப் போலவே மண்ணைக் கவ்வியிருக்கின்றன. ஆம், இந்த இரண்டும் ஐந்துக்கு ஒற்றை ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே பெற்றிருக்கின்றன.

குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேயே இந்த அளவு குறைவான பாதுகாப்பு ரேட்டிங்கை மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதே குளோபல் என்சிஏபி இந்திய நிறுவனமான மஹிந்திராவின் ஸ்கார்பியோ என் காரை மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இந்த கார் கிராஷ் டெஸ்டில் மிக சிறப்பாக செயல்பட்டு ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்று அந்நிறுவனத்திற்கு பெருமிதம் சேர்த்திருக்கின்றது.

இக்னிஸ்

ஆனால், மாருதி சுஸுகியின் தயாரிப்புகளோ ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் அவ பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மிக மிக குறைவான ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றன. குளோபல் என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்திய இக்னிஸ் கார் மாடலில் பயணிகளின் பாதுகாப்பிற்காக டூயல் ஏர் பேக்குகள், சீட் பெல்ட் ப்ரீ டென்ஷனர், சீட் பெல்ட் லோட் லிமிட்டர் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இருப்பினும் தரக் குறைவான கட்டமைப்பால் இந்த கார் மிகக் குறைவான புள்ளிகளை பாதுகாப்பு டெஸ்டில் பெற்றிருக்கின்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்ட மோதல் ஆய்வில் 16.48 புள்ளிகளை மட்டுமே இந்த கார் பெற்றது. 34 பாயிண்டுகளின்கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இத்தகைய குறைவான புள்ளிகளை அது பெற்றிருக்கின்றது. மிக தெளிவாக கூற வேண்டுமானால் பாதிக்கு பாதிகூட அது பெறவில்லை. இதேபோல் சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கார் மிகக் குறைவான புள்ளிகளையே அது பெற்றிருக்கின்றது.

இக்னிஸ்

49 பாயிண்டுகளின்கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெறும் 3.86 புள்ளிகளை மட்டுமே அது பெற்றது. இது மிக மிக குறைவான புள்ளிகள் ஆகும். குழந்தை பயணிகளுக்கு துளியளவும் பாதுகாப்பே இல்லாத சூழலை இக்னிஸ் கொண்டிருப்பதையே இந்த புள்ளிகள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. குறிப்பாக, விபத்து போன்ற அசம்பாவிதத்தின்போது டிரைவருக்கு துளியளவும் பாதுகாப்பே இல்லாத சூழலே இந்த காரில் உள்ளது. மார்பகம், கால் பகுதி போன்றவற்றிற்கு மிகுந்த ஆபத்து இருப்பதாக குளோபல் என்சிஏபி தெரிவித்துள்ளது.

இந்த காரின் உடற்கூடு நிலையற்றதாகவும், மோதலின்போது ஏற்படும் தாக்கங்களைத் துளியளவும் தாங்கும் திறனற்றதாகவும் இது இருக்கின்றது. இந்த தகவல்கள் அனைத்தும் இக்னிஸ் கார் பயன்பட்டாளர்களை கவலையில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த கார் மட்டுமின்றி குளோபல் என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்திய ஸ்விஃப்ட் மற்றும் எஸ்-பிரஸ்ஸோ ஆகிய இரண்டும்கூட இதேபோல் மிக மிக மோசமாகவே செயல்பட்டிருக்கின்றது. குறிப்பாக, ஸ்விஃப்ட் கார் மிக மோசமாக இந்த மோதல் ஆய்வில் செயல்பட்டிருப்பது ஒட்டுமொத்த இந்தியர்களையும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.

இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. மாருதி சுஸுகி இக்னிஸ் இந்திய சந்தையில் ரூ. 5.32 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். நெக்ஸா ஷோரூம் வாயிலாக இந்த கார் விற்கப்படுகின்றது. வெறும் பெட்ரோல் மோட்டார் தேர்வில் மட்டுமே இந்த கார் விற்கப்படுகின்றது. 1.2 லிட்டர் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 82 எச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 13, 2022, 6:29 [IST]
English summary
Maruti ignis 1 star gncap
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+