மக்கள் மாருதி ஷோரூமை தேடி அலைய போறாங்க... 33.85 கிமீ மைலேஜ் தரும் ஆல்டோ கே10 விற்பனைக்கு அறிமுகம்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் ஆல்டோ கே10 சிஎன்ஜி (Alto K10 CNG) காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த காரின் விலை மற்றும் மைலேஜ் திறன் பற்றிய முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் ஆல்டோ கே10 சிஎன்ஜி (Alto K10 CNG) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஏற்கனவே, இந்நிறுவனம் ஒன்பது சிஎன்ஜி கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கி வரும் நிலையில், தற்போது பத்தாவது மாடலாக புதிய ஆல்டோ கே10 சிஎன்ஜி-யை அதன் சிஎன்ஜி கார்களின் பட்டியலில் இணைத்துள்ளது.
அறிமுகமாக இக்காருக்கு ரூ. 5.94 லட்சம் விலையை மாருதி சுஸுகி நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அனைவரும் நுகர வேண்டும் என்ற நோக்கில் பட்ஜெட் விலையில் இக்காரை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த காரின் மைலேஜ் திறன் 33.85 கிமீ ஆகும்.
ஆமாங்க, ஒரு கிலோ சிஎன்ஜியை நிரப்பினால் போதும் இந்த சூப்பரான மைலேஜை நம்மால் ஆல்டோ கே10 சிஎன்ஜியில் பெற்றுக் கொள்ள முடியும். இக்காரின் பெட்ரோல் வெர்ஷன் ரூ. 4.83 லட்சம் தொடங்கி ரூ. 7.06 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. ஆல்டோ கே10 மாடலின் விஎக்ஸ்ஐ வேரியண்டிலேயே சிஎன்ஜி ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆல்டோ கே10 சிஎன்ஜி காரில் 1.0 லிட்டர் கே10சி டூயல்ஜெட் டூயல் விவிடி மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் பெட்ரோலிலும் இயங்கும். அவ்வாறு பெட்ரோலில் இயங்கும்போது இந்த மோட்டார் அதிகபட்சமாக 65.26 பிஎஸ் பவரை 5,500 ஆர்பிஎம்மிலும், 89 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். அதுவே சிஎன்ஜியில் இயங்கும்போது சற்று குறைவான பவரையே இந்த மோட்டார் வெளியேற்றும்.
56.69 பிஎஸ் பவரையும், 82.1 என்எம் டார்க்கையுமே அது வெளியேற்றும். திறன் வெளிப்பாடு குறைவாக இருந்தாலும் இதன் மைலேஜ் திறன் பெட்ரோல் வெர்ஷனைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருக்கின்றது. மேலே குறிப்பிட்டதைப் போல் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 33.85 கிமீ மைலேஜை வழங்கும். இது மைலேஜை அதிகம் விரும்பும் இந்தியர்களைக் குஷிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்தியர்கள் மத்தியில் சிஎன்ஜி கார்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஃபேக்டரியிலேயே ஃபிட் செய்யப்பட்ட சிஎன்ஜி கிட்டுடன் ஆல்டோ கே10 காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த காருக்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே சிஎன்ஜி கார்கள் விற்பனையில் கொடிக்கட்டி பறக்கும் நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கு வலுசேர்க்கும் வகையிலேயே இந்த பட்ஜெட் விலைக் கொண்ட ஆல்டோ கே10 சிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் இதுவரை 1 மில்லியன் சிஎன்ஜி கார்களை விற்பனைச் செய்திருப்பதாக அண்மையில் அறிவித்தது. இவற்றின் வாயிலாக பல மடங்கு மாசுபாடு குறைந்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் மிகக் குறைவான மாசை வெளியேற்றக் கூடிய வாகனங்களாக சிஎன்ஜி வாகனங்கள் இருக்கின்றன. எனவேதான் அரசும் இம்மாதிரியான வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ஐசிஇ எஞ்ஜின் கொண்ட வாகனங்களை சிஎன்ஜி வாகனமாக கன்வெர்ட் செய்யவும் அரசு அனுமதித்து வருகின்றது.


Click it and Unblock the Notifications