மாருதியின் பாதுகாப்பு தரத்தை கிண்டல் பண்ணாதீங்க ப்ளீஸ்! அவங்க புது கார் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்க போகுதா?

மாருதி நிறுவனம் சி-செக்மெண்டில் முற்றிலும் புதிய எம்பிவி காரை களம் இறக்கப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னோவா இடத்தை பிடிக்க இந்த கார் வடிவமைக்கப்படுகிறது.

இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் மாருதி தான். இந்நிறுவனம் அனைத்து செக்மெண்டிலும் கார்களை களம் இறக்கி வருகிறது. இந்தாண்டு துவக்கத்தில் தான் எர்டிகா மற்றும் எக்ஸ்எல் 6 ஆகிய கார்களின் புதிய அப்டேட்களை மாருதி நிறுவனம் செய்திருந்தது.

மாருதியின் பாதுகாப்பு தரத்தை கிண்டல் பண்ணாதீங்க ப்ளீஸ்! அவங்க புது கார் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்க போகுதா?

இந்நிலையில் மாருதி நிறுவனம் இந்த எர்டிகா மற்றும் எக்ஸ்6 காருக்கு மேலாக சி-செக்மெண்டிலேயே புதிய எம்பிவி காரை களம் இறக்கத் தயாராகி வருகிறது. இந்த கார் டொயோட்டா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காருக்கு போட்டியாகக் களம் இறங்கும் என என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைகிராஸ் கார் வெளியான சில மாதங்களிலேயே இந்த காரின் வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.

டொயோட்டா நிறுவனம் தனது இன்னோவா ஹைகிராஸ் காரை வரும் நவம்பர் மாதம் 25ம் தேதி அறிமுகப்படுத்தவும், இந்த காரின் விலை விபரங்களை 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடவும் முடிவு செய்துள்ளது. அதன்பின் இந்த காருக்கான புக்கிங் துவங்கி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிலிருந்து ஓரிரு மாதங்களிலேயே மாருதியின் இந்த புதிய சி-செக்மெண்ட் எம்பிவி கார் வெளியாகும் என கூறப்படுகிறது.

மாருதியின் இந்த புதிய எம்பிவிகார் 6 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. முக்கியமாக இந்த காரில் கிராண்ட் விட்டாரா ஹைபிரிட் காரின் பயன்படுத்திய அதே இன்ஜினை கொண்டு ஹைபிரிட் ஆப்ஷன் கொண்ட காராக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் இன்ஜின் ஆப்ஷன்களை பொருத்தவரை 2.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு 4 சிலிண்டர் மற்றும் 2.0 லிட்டர் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரம் என எதிர்பார்க்கலாம். ஹைபிரிட் இன்ஜின் வேரியன்டில் பிரத்தியேகமாக இவி மோட் தனியாக இருக்கும் என்றும், இந்த கார் மார்கெட்டில் சிறப்பான மைலேஜை வழங்கும் ஒரு காராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

இந்த காரின் வெளிப்புற தோற்றம் இன்னோவா ஹைகிராஸ் போல இல்லாமல் வேறு மாதிரியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது போக மிக முக்கிய அப்டேட்டாக மாருதி சுஸூகி நிறுவனத்தின் முதன் ஏடிஏஎஸ் தொழிற்நுட்ப வசதி கொண்ட காராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் எமர்ஜென்ஸி பிரேக்கிங், லேன், டிபரேச்சர் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், ரியர் கிராஸ் டிராஃபிக் அலார்ட், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் ஆகிய வசதிகள் இதில் இருக்கும். இது எல்லாம் டொயோட்டா சென்ஸ் சூட்டில் உள்ள வசதிகளாகும்.

பொதுவாக மாருதி நிறுவனத்தின் கார்கள் தரமில்லாமல் இருக்கும். கிராஷ் டெஸ்டில் சிறப்பான அளவில் ரேட்டிங் பெறாது. சாலையில் மாருதி கார்கள் விபத்தில் சிக்கினால் அப்பளமாக நொறுங்கிப் போகும் என்ற அவப்பெயர் இருக்கிறது. இதை மாற்றும் விதமாக இப்படியாகச் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட காராக இந்த புதிய எம்பிவி காரை தயாரித்துள்ளது. இந்த காரின் கட்டுமானத்தைப் பொருத்து இது கிராஷ் டெஸ்டில் 5ஸ்டார் ரேட்டிங்கை பெறக் கூட அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, November 14, 2022, 14:45 [IST]
English summary
Maruti likely to launch c mpv equipped with adas rival to innova hycross
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+