மாருதியோட புதிய கிராஸ் ஓவர் காருக்கு இதான் பெயரா? வேற லெவல்ல இருக்குதே!
மாருதி நிறுவனம் வரும் 2023 ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்போகும் புதிய பலேனோ கிராஸ் ஓவர் காரின் பெயர் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்
இந்தியாவில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் என்றால் மாருதி தான். விற்பனையில் மிக அதிகமான எண்ணிக்கையிலான கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துவருகிறது. ஒவ்வொரு மாதம் 1-1.5 லட்சம் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மிடில் கிளாஸ் மக்கள் பலரது கார் கனவு மாருதி நிறுவனத்தால் தான் நிறைவேறியது. இப்படியான மாருதி நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றியடைந்த கார் பலேனோ கார் தான். இந்த கார் பிரிமியம் ஹேட்ச் பேக் கார்.

இந்த கார் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகிற வருகிறது. கடந்த நவம்பர் மாதம் மட்டும் மொத்தம் 20945 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு நவம்பர் மாத விற்பனையை ஒப்பிடும் போது 111 சதவீதம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் தற்போது மாருதி நிறுவனம் இந்த பலேனோ காரில் புதிய கிராஸ் ஓவர் காரை அறிமுகப்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா மற்றும் பலேனோ ஆகிய கார்களின் வடிவமைப்பை இணைத்து புதிய கிராஸ் ஓவர் கார் ஒன்றை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.
தற்போது இந்த காருக்கு அந்நிறுவனம் ஒய்டிபி என கோட் பெயரை வைத்துள்ளது. இந்த காரை மாருதி நிறுவனம் 2023 ஆட்டோ எக்ஸ்போ அதாவது ஜனவரி மாதம் நடக்கவுள்ளன நிகழ்ச்சியில் முதன் முறையாக காட்சிப்படுத்தப்போவதாக அறிிவித்துள்ளது. இந்நிலையில் இந்த காரின் பெயர் என்ன என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் கிளம்பியுள்ளது. ஒய்டிபி என்பது கோட் பெயர் தான் என்பதால் மாருதி நிறுவனம் இந்த காருக்க புதிய பெயர் வைக்கும்.
ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் முதல் பலர் இந்த பெயரை எதிர்பார்த்து வரும் சூழ்நிலையில் மாருதி நிறுவனம் இந்த காருக்கு ஃபிளாஷ் அல்லது பிளேஸ் என இரண்டு பெயர்களில் எதை வைக்கலாம் என ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கார் சப்-காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் விற்பனைக்கு வரும். இந்த கார் மார்கெட்டில் விற்பனைக்கு வரும் போது டாடா நெக்ஸான் காருக்கு போட்டியாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியவாில் கிராஸ் மாடல் கார்கள் ஒன்றும் புதிதல்ல ஏற்கனவே மார்கெட்டில் டொயோட்டா எட்டியோஸ் கிராஸ், ஃபோக்ஸ்வேகன் ஃபோலோ கிராஸ், ஃபியட் அவென்ட்சூரா, டொயோட்டா அர்பன் கிராஸ், மற்றும் ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஆகிய கார்கள் எல்லாம் கிராஸ் மாடல் கார்கள்தான். எஸ்யூவி ஸ்டைலில் மாற்றியமைக்கப்பட்ட கார்கள் இவை. தற்போது மாருதி கொண்டு வரும்கிராஸ் ஓவர் காருக்கு ஃபிளாஷ் அல்லது பிளேஸ் என பெயர் வைக்கப்படும் என எதிர்பார்கப்படுகறது.
இந்த கார் மாருதி கார்களின் லைன் அப்பில் பிரெஸ்ஸாவை விட குறைவான காராக இருக்கிறது. இந்த கார் கிராண்ட் விட்டாராக காரில் உள்ள பல டிசைன் அம்சங்களை பெப்போகிறது. இது போக பலேனோ காரில் உள்ள அம்சங்களும் இந்த காரில் இடம்பெறப்போகிறது. இந்த காரில் 9.0 இன்ச் ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் இலவச ஸ்டாண்டிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சுஸூகி கனெக்ட், கனெக்டெட் கார் தொழிற்நுட்பங்கள், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, 360 டிகிரி கேமரா, டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டிரயிங் அட்ஜெஸ்ட்மென்ட், ஆட்டோ டிம்மிங், ஐஆர்விஎம், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஆர்கம்மேஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம்ஸ் ஆகியன இடம் பெறவுள்ளது.
பலேனோ காரில் 89 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் 4 -சிலிண்டர் டூயல் ஜெட் கே12என் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. மாருதியின் புதிய கிராஸ் ஓவர் காரிலும் இதே இன்ஜின் தான் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி நிறுவனம் டர்போ பெட்ரோல் இன்ஜினை பொருத்தும் என்றும் பேசப்படுகிறது. அறிமுகமாகும் போது தான் என்ன இன்ஜின் என்பது தெரியவரும்.
மாருதி நிறுவனத்தின் இந்த புதிய கிராஸ் ஓவர் காரின் பெயர் குறித்த உங்கள் கருத்து என்ன? இந்த இரண்டில் எந்த பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள், உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








