மாருதி ரசிகர்களே... இது கொண்டாடுவதற்கான நேரம்... இப்ப என்ன நடந்துருக்குன்னு தெரியுமா?

மாருதி நிறுவனம் தங்களுக்கான காத்திருப்பு காலத்தில் உள்ள கார்களின் டெலிவரியை விரைவில் துரிதப்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் உற்பத்தி அதிகமாகியுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

மாருதி ரசிகர்களே . . . இது கொண்டாடுவதற்கான நேரம் . . . இப்ப என்ன நடந்துருக்குன்னு தெரியுமா . . .

இந்தாண்டு துவக்கத்தில் வெடித்த ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் துறைக்கான செமி கண்டெக்டர் சிப் தட்டுப்பாடு நிலவியது. இதனால் உலகம் முழுவதும் உள்ள ஒட்டு மொத்த ஆட்டோமொபைல் துறையே கார்களை தயாரிப்பில் சுணக்கம் ஏற்பட்டது. இந்தியாவில் ஹீரோ எலெக்டரிக் நிறுவனம் உற்பத்தியையே நிறுத்த வேண்டிய நிலை வந்தது.

மாருதி ரசிகர்களே . . . இது கொண்டாடுவதற்கான நேரம் . . . இப்ப என்ன நடந்துருக்குன்னு தெரியுமா . . .

சில நிறுவனம் செமி கண்டெக்டர்களின் தேவையைக் குறைத்து கார்களின் வடிவமைப்புகளையே மாற்றி விற்பனை செய்தனர். இப்படியெல்லாம் உலகத்தைச் செமி கண்டெக்டர் தட்டுப்பாடு ஆட்டிப்படைத்தது. தற்போது இந்த நிலை சற்று சரியாகியுள்ளது. தற்போது மீண்டும் செமி கண்டெக்டர் தயாரிப்பு சூடி பிடிக்க துவங்கிவிட்டது.

மாருதி ரசிகர்களே . . . இது கொண்டாடுவதற்கான நேரம் . . . இப்ப என்ன நடந்துருக்குன்னு தெரியுமா . . .

இந்நிலையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை அதிகரித்துவிட்டனர். மாருதி சுஸூகி நிறுவனம் தற்போது தனது காத்திருப்பு ஆர்டர்களை வேகமாக முடிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் மார்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் ஆஃபீர் கூறும் போது "செமி கண்டெக்டர் சிப் தட்டுப்பாடு வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் கார்களின் உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளோம். இதனால் மாருதி கார்களை புக் செய்து விட்டுக் காத்திருப்பவர்களுக்கு கார் விரைவில் கிடைக்கும்.

மாருதி ரசிகர்களே . . . இது கொண்டாடுவதற்கான நேரம் . . . இப்ப என்ன நடந்துருக்குன்னு தெரியுமா . . .

மாருதி நிறுவனத்திடம் மட்டும் 4.18 லட்சம் கார்களுக்கான ஆர்டர் காத்திருப்பில் உள்ளது. இது போக அடுத்த அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் 10 லட்சம் கார்களை உற்பத்தி செய்தால் மாருதி நிறுவனம் 3.8 முதல் 3.9 மில்லியன் கார் உற்பத்தியைத் தொடும். இந்தியாவின் வாகன விற்பனைக்கும் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. " என கூறினார்

மாருதி ரசிகர்களே . . . இது கொண்டாடுவதற்கான நேரம் . . . இப்ப என்ன நடந்துருக்குன்னு தெரியுமா . . .

இதற்கு முன்னர் மாருதி நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு தான் மொத்தம் 33,94,712 வாகனங்களைத் தயாரித்து சாதனையைப் படைத்தது. அதன் பின்னர் 2020ல் கொரோனா பரவலால் மிகப்பெரிய விற்பனை சரிவு ஏற்பட்ட நிலையில் அதிலிருந்து மீண்டு வரவே 2 ஆண்டுகள் ஆகிவிட்டு தற்போது மீண்டும் வளர்ச்சிப் பாதையை நோக்கி வளர்ந்துள்ளது.

மாருதி ரசிகர்களே . . . இது கொண்டாடுவதற்கான நேரம் . . . இப்ப என்ன நடந்துருக்குன்னு தெரியுமா . . .

இது மட்டுமல்ல கொரோனாவின் போது நிறுத்தி வைக்கப்பட்ட பல செக்மெண்ட்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டாக்ஸி செக்மெண்ட்கள் கொரோனாவிற்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மாருதி நிறுவனம் தனது முழு கொள்ளவில் 94-95 சதவீதம் தயாரிப்பை எட்டிவிட்டன. தொடர்ந்து இன்னும் சிறிய அளவில் செமி கண்டெக்டர்களின் தேவை இருப்பதால் மீதம் பாக்கி இருக்கிறது.

மாருதி ரசிகர்களே . . . இது கொண்டாடுவதற்கான நேரம் . . . இப்ப என்ன நடந்துருக்குன்னு தெரியுமா . . .

இதனால் அடுத்தடுத்து காத்திருப்பவர்களுக்கு கார்கள் சென்று சேர துவங்கிவிடும் என எதிர்பார்க்கலாம். மாருதி நிறுவனத்தை பொருத்தவரை எர்டிகா, பிரெஸ்ஸா, எக்ஸ்எல்6 ஆகிய கார்களுக்கு அதிகமான காத்திருப்பு காலம் இருக்கிறது. அதிகபட்சமாக 6 மாதம் வரை காத்திருப்பு காலத்தை இந்நிறுவனம் வைத்திருக்கிறது.

மாருதி ரசிகர்களே . . . இது கொண்டாடுவதற்கான நேரம் . . . இப்ப என்ன நடந்துருக்குன்னு தெரியுமா . . .

இந்நிலையில் சமீபத்தில் இந்நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா மிட் சைஸ் எஸ்யூவிகாரை அறிமுகப்படுத்தியது. இந்த காரின் விலைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த காருக்கான புக்கிங் ரூ25 ஆயிரம் முன்பணத்துடன் துவங்கியுள்ளது. இதுவரை இந்தக் காரை 52 ஆயிரம் பேர் புக்கிங் செய்துள்ளனர். இந்த காருக்கான காத்திருப்பு காலம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வரவில்லை.

Article Published On: Wednesday, September 14, 2022, 10:34 [IST]
English summary
Maruti plans to clear pending orders as semiconductor issue sortedout
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+