லிட்டருக்கு 40கி.மீ மைலேஜ் கொடுக்கும் புதிய ஸ்விஃப்ட் கார்! எப்ப வரப்போகுது தெரியுமா?
மாருதி நிறுவனம் 2023ம் ஆண்டு தனது ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் காரில் ஸ்டிராங்க் ஹைபிரிட் வேரியன்ட் காரையும், டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் மாருதி வெர்ஷன் எம்பிவி காரையும் ஸ்டிராங் ஹைபிரிட் வேரியன்டில் வெளியிடவுள்ளது. இந்த கார் குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்
மாருதி நிறுவனத்தின் கார்கள் மீது இந்தியர்களுக்கு மவுசு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக அந்நிறுவனம் தான் இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்து வருகிறது. மாருதி நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் இந்த காரின் குறைந்த விலை மற்றும் சிறந்த மைலேஜ் தான். மாருதி கார்களின் மைலேஜ் அந்நிறுவனத்தின் கார்களின் விற்பனைக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மைலேஜை பொருத்தவரை பெட்ரோலை விட டீசல் கார்கள் தான் சிறப்பான மைலேஜை வழங்கும்.

ஆனால் மாசு கட்டுப்பாடுகள் வந்த போது பல நிறுவனங்கள் தங்கள் டீசல்கள் இன்ஜின் கார்களை நிறுத்திவிட்டனர். இதில் இந்தியாவில் முதன் முதலாக டீசல் இன்ஜின் கார்களை தயாரிப்பை நிறுத்தியது மாருதி நிறுவனம் தான். தனது பரம்மாஸ்திரத்தையே நிறுத்தியதால் மாருதி கார்களுக்கு மவுசு குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாருதி நிறுவனம் டீசல் இன்ஜின்களுக்க மாற்றாக சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் கார்களை தயாரிக்கத் துவங்கியது.
மாருதி நிறுவனம் இந்தியாவில் தனது பெட்ரோல் கார்களில் இன்ஜினில் சிஎன்ஜி வெர்ஷன் மற்றும் ஹைபிரிட் வெர்ஷன்கள் மூலம் சிறப்பான மைலேஜ் தரும் கார்களை அறிமுகப்படுத்தியது. முதன் முதலில் மைல்டு ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் கார்களை அறிமுகப்படுத்தி மைலேஜை அதிகப்படுத்தினாலும் பின்னர் டொயோட்டா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து டொயோட்டாவின் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த அடிப்படையில் சமீபத்தில் மாருதி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரில் டொயோட்டாவின் 1.5 லிட்டர் பெட்ரோல் ஸ்டிராங் ஹைபிரிட் இன்ஜினை அறிமுகப்படுத்தியது. இந்த கார் லிட்டருகஅக 27.84 கி.மீ மைலேஜை வாரி வழங்கி வருகிறது. இந்நிலையில் 2023ம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில் மாருதி நிறுவனம் அடுத்தடுத்து தனது தயாரிப்புகளில் ஸ்டிராங்க் ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதைப் பற்றித் தான் இங்கே காணப்போகிறோம்.
மாருதி நிறுவனம் வரும் 2023ம் ஆண்டு 3 ஸ்டிராங் ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் மாருதி வெர்ஷன் எம்பிவி கார், அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் மற்றும் அடுத்த தலைமுறை டிசையர் ஆகிய கார்களில் ஸ்டிராங்க் வெர்ஷனை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி மாருதி நிறுவனம் 2023ம் ஆண்டு தீபாவளியை ஒட்டி தனது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் மாருதி வெர்ஷன் எம்பிவி காரை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் டொயோட்டாவின் குலோபல் டிஎன்ஜிஏ-சி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் முன் வீல் டிரைவ் லேஅவுட்டில் உருவாக்கப்படவுள்ளது. இந்த காரில் டுயல் பேன் பானரோமிக் சன்ரூஃப், டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 10 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, வென்டிலேட்டட் மற்றும் பவர்டு சீட்கள், டுயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், ஓட்டோமேன் ஃபங்சனை கொண்டது வரிசை பவர்டு சீட்ககள் ஆகியவை இடம் பெறவுள்ளன.
மேலும் இந்த காரில் முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக மாருதி கார்களில் முதன் முறையாக ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் அசிஸ்ட் ஆகிய அம்சங்களைக் கொண்ட ஏடிஏஎஸ் தொழிற்நுட்பம் இடம்பெறவுள்ளது. இந்த கார் 2.0 லிட்டர் நேச்சுரல் அஸ்பயர்டு பெட்ரோ மற்றும் 2.0 லிட்டர் ஸ்டிராங் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. இந்த காரின் பவரை பொருத்தவரை 174 பிஎஸ் பவர் மற்றும் 205 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இந்த இன்ஜின் சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹைபிரிட் உடன் இணையும் போது 186 பிஎஸ் பவர் மற்றும்206 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின் இசிவிடி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்தாக மாருதி நிறுவனம் தனது அடுத்த தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மற்றும் டிசையர் செடான் ஆகிய கார்களை 2024ம் ஆண்டு ஹைபிரிட் தொழிற்நுட்பத்துடன் வெளியிடவுள்ளது. இந்த இரண்டு கார்களும் ஸ்டிராங்க் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தால் இந்தியாவிலேயே அதிக மைலேஜ் கொண்ட கார்களாக மாறப்போகிறது. தற்போது வரை வந்துள்ள தகவலின் படி மாருதி ஸ்விஃப்ட் புதிய தலைமுறை காரில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்டொயோட்டாவின் ஸ்டிராங்க் ஹைபிரிட் தொழிற்நுட்பத்துடன் பொருத்தப்படவுள்ளது. இந்த இன்ஜின் 35-40 கி.மீ மைலேஜ்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் CAFE II தரத்தை ஈடு செய்யும் என எதிர்பார்க்கலாம்.
40 கி.மீ மைலேஜ் கொடுக்கும் கார் மட்டும் மார்கெட்டிற்கு அறிமுகமாகிவிட்டால் இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் பார்வையையும் இந்த கார் மீது தான் இருக்கும். இந்த காரை மக்கள் அதிகம் விரும்பி வாங்கத் துவங்கிவிடுவார்கள். இந்த கார் விற்பனைக்கு வரும் போது மார்கெட்டிலேயே பெரும் விற்பனை புரட்சியே ஏற்பட்டாலும் ஆச்சரியப்படவேண்டியதில்லை.


Click it and Unblock the Notifications








