எல்லாத்தையும் தூக்கி சாப்பிட போகுது! லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் கொடுக்கும் ஸ்விஃப்ட் கார் ரெடியாகிட்டிருக்கு

மாருதி நிறுவனம் ஸ்விஃப்ட் (Maruti Swift), டிசையர் (Maruti Dzire) கார்களில் ஹைபிரிட் வெர்ஷனை தயார் செய்கிறது. இது 35-40 கி.மீ மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி நிறுவனம் ஹைபிரிட் கார்களை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கிறது. இந்நிறுவனம் ஏற்கனவே கிராண்ட் விட்டாரா என்ற தனது முதல் ஹைபிரிட் காரை வெளியிட்டுள்ளது. இது லிட்டருக்கு 27.97 கி.மீ மைலேஜை வழங்கி வருகிறது.

எல்லாத்தையும் தூக்கி சாப்பிட போகுது! லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் கொடுக்கும் ஸ்விஃப்ட் கார் ரெடியாகிட்டிருக்கு

இந்நிலையில் மாருதி நிறுவனம் தற்போது தனது ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் ஹைபிரிட் வேரியன்டை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார்கள் 2023ம் ஆண்டு முதல் காலாண்டிலேயே இந்த கார்களின் அப்டேட்டட் வெர்ஷனாக அறிமுகம் செய்யப்படும் என்றும், இந்த கார்கள் 2024ம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரை மாருதி நிறுவனம் YED என்ற கோட் பெயருடன் மைல்டு மற்றும் ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜின்களுடன் உருவாக்கி வருகிறது.

இதில் ஸ்டிராங்க் ஹைபிரிட்டை (Strong Hybrid Car) பொருத்தவரை பழைய கே12சி இன்ஜின் (K12C engine) இல்லாமல் முற்றிலுமாக புதிய 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜினை பொருத்த முடிவு செய்துள்ளது. இந்த இன்ஜின் தான் டொயோட்டா நிறுவனத்தின் தொழிற்நுட்பத்திற்கு ஒத்துப் போகும் இன்ஜின் இந்த இன்ஜின் தான் தற்போது கிராண்ட் விட்டாரா மற்றும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்களின் ஸ்டிராங் ஹைபிரிட் வேரியன்டில் இருக்கிறது.

டொயோட்டா நிறுவனம் இந்த இன்ஜினை முற்றிலுமாக இந்தியாவிலேயே தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது நடந்தால் இந்த இன்ஜினின் விலை மிகவும் குறையும். இதனால் காரின் விலையும் குறையும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் மாருதியில் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகிய கார்கள் இந்தியாவிலேயே அதிக மைலேஜ் தரும் ஹேட்ச் பேக் மற்றும் செடான் கார்களாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது ஸ்விஃப்ட் கார் லிட்டருக்கு 22.56 கி.மீ மைலேஜூம் (Swift Mileage), டிசையர் கார் லிட்டருக்கு 24.1 கி.மீ மைலேஜையும் வழங்கி வருகிறது. டொயோட்டா நிறுவனம் தற்போது வெளியிட்ட கிராண்ட் விட்டாரா ஸ்டிராங்க் வேரியன்ட் கார் லிட்டருக்கு 27.97 கி.மீ மைலேஜை வழங்கி வருகிறது. இது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் விதமாக ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஹைபிரிட் கார் லிட்டருக்கு 35-40 கி.மீ மைலேஜை (Swift Hybrid Mileage) வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

அதே நேரம் ஹைபிரிட் தொழிற்நுட்பம் இருப்பதால் இந்த கார்களின் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போது கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) காரில் மைல்டு ஹைபிரிட் வேரியன்டிற்கும், ஸ்டிராங்க் ஹைபிரிட் வேரியன்டிற்கும் ரூ2.6 லட்சம் வித்தியாசம் இருக்கிறது. இதை மாருதி ரூ1 லட்சமாகக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிக மைலேஜ் கொண்ட வாகனங்களைத் தயாரித்தால் மாருதி நிறுவனத்திற்கு CAFE (Corporate Average Fuel Economy)-ல் சிறப்பான ரேட்டிங் கிடைக்கும்.

ஆனால் இதற்கெல்லாம் முன்னதாக மாருதி நிறுவனம் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் பலேனோ கிராஸ் ஓவர், ஜிம்னி 5 டோர் கார், மற்றும் புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் ஆகியவற்றை அறிமுகப்படுத்தவுள்ளது.இந்த அறிமுகத்திற்கு பிறகுதான் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஹைபிரிட் வெர்ஷனில் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

Article Published On: Friday, November 11, 2022, 16:54 [IST]
English summary
Maruti plans to launch swift and dzire hybrid varient
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+