இன்னோவாக்கு ஆப்பு வைக்க புதுசா காரை களம் இறக்கப் போகும் மாருதி... இன்ஜின் யாரோடது தெரியுமா?

மாருதி நிறுவனம் இன்னோவாவிற்கு போட்டியாக புதிய எம்பிவி காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இன்னோவாக்கு ஆப்பு வைக்க புதுசா காரை களம் இறக்கப் போகும் மாருதி . . . இன்ஜின் யாரோடது தெரியுமா . . .

மாருதி இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நம்பர் 1 நிறுவனம் என்று சொல்லலாம். கார்களின் விற்பனை எண்ணிக்கையில் பல ஆண்டுகளாக மாருதி தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. இந்தாண்டு மாருதி மிகசிறப்பான ஒரு ஆண்டு தான். இந்தாண்டு மாருதி நிறுவனம் எர்டிகா, எக்ஸ்எல்6, புதிய தலைமுறை பிரெஸ்ஸா, முற்றிலும் மாற்றியமைப்பட்ட ஆல்டோ கே10, புத்தம் புதிய காராக உருவாக்கப்பட்ட கிராண்ட் விட்டாரா மிட் சைஸ் எஸ்யூவி என பல புதிய கார்களை இந்தாண்டு அறிமுகப்படுத்தியது.

இன்னோவாக்கு ஆப்பு வைக்க புதுசா காரை களம் இறக்கப் போகும் மாருதி . . . இன்ஜின் யாரோடது தெரியுமா . . .

கிராண்ட் விட்டாரா கார் மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது. இந்நிலையில் மாருதி சுஸூகி நிறுவனம் எஸ்யூவி காரில் கூபே வடிவ காரை தற்போது தயாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார் பலேனோ பிரிமியம் ஹேட்ச் பேக்கின் ஹார்ட்டெக்ட் பிளாட்ஃபார்மில் அறிமுகமாகவுள்ளது.

இன்னோவாக்கு ஆப்பு வைக்க புதுசா காரை களம் இறக்கப் போகும் மாருதி . . . இன்ஜின் யாரோடது தெரியுமா . . .

இந்த காரை அந்நிறுவனம் வரும் 2023 ஜனவரி மாதம் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விற்பனைக்கு வரத் தாமதம் ஏற்படலாம். இது போக மாருதி நிறுவனம் மாருதி சுஸூகி ஜிம்னி காரை இந்தியாவிற்கு விற்பனைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. இதுவும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகி அடுத்த சில மாதங்களிலேயே விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னோவாக்கு ஆப்பு வைக்க புதுசா காரை களம் இறக்கப் போகும் மாருதி . . . இன்ஜின் யாரோடது தெரியுமா . . .

இது எல்லாம் போக மாருதி சுஸூகி நிறுவனம் புதிதாக சி செக்மெண்டில் ஒரு எம்பிவி காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த கார் எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய இரண்டு வாகனங்களை விட அதிகவிலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். இது மாருதி சுஸூகியின் டொயோட்டாவுடனான முதல் கிராஸ் பேட்ஜ் காராகவும் விற்பனைக்கு வருகிறது.

இன்னோவாக்கு ஆப்பு வைக்க புதுசா காரை களம் இறக்கப் போகும் மாருதி . . . இன்ஜின் யாரோடது தெரியுமா . . .

இந்த கார் கிட்டத்தட்ட விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இன்னோவா ஹைகிராஸ் காரின் பேட்ஜ் இன்ஜினியரிங் வெர்ஷன் தான் என சொல்லி விடலாம். இன்னோவா ஹைகிராஸ் கிராஸ் அடுத்த மாதம் இந்தோனேஷியாவில் அறிமுகமாகவுள்ளது. இது அடுத்த ஆண்டு முதல் பாதியிலேயே இந்தியாவில விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஏற்கனவே விற்பனையாகி வரும் இன்னோவா க்ரைஸ்டா இரண்டாம் தலைமுறை காருடனேயே இந்த காரும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

இன்னோவாக்கு ஆப்பு வைக்க புதுசா காரை களம் இறக்கப் போகும் மாருதி . . . இன்ஜின் யாரோடது தெரியுமா . . .

இன்னோவா ஹைகிராஸ் கார் இந்தியாவில் பல இடங்களில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்த கார் இந்தோனேஷியாவில் இன்னோவா சென்னீக்ஸ் என்ற பெயரில் விற்பனைக்கு வருகிறது. மாருதி நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் காரை விட வித்தியாசமாகத் தெரியப் பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது போக பல புதிய அட்வான்ஸ்டு அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

இன்னோவாக்கு ஆப்பு வைக்க புதுசா காரை களம் இறக்கப் போகும் மாருதி . . . இன்ஜின் யாரோடது தெரியுமா . . .

எப்படி கிராண்ட் விட்டாரா மற்றும் டாயோட்டா அர்பன் க்ரூஸர் கார்கள் எப்படி மெக்கானிக்கல் அம்சங்களை ஷேர் செய்ததோ அதன்படியே இன்னோவா ஹைகிராஸ் காருடன் மாருதி நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் அதன் டிஎன்ஜிஏ-சி ஆர்க்கிடெக்ஷர் முன்பக்க வீல் டிரைவ்வில் கான்ஃபிகர் செய்யப்பட்ட ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் பகிரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னோவாக்கு ஆப்பு வைக்க புதுசா காரை களம் இறக்கப் போகும் மாருதி . . . இன்ஜின் யாரோடது தெரியுமா . . .

இந்த காரில் ஃப்ளோட்டிங் டச் ஸ்கிரீன் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ஏடிஏஸ் தொழிற்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு வசதி, பானரோமிக் சன்ரூஃப், பவர் சீட்கள், கனெக்ட்டெட் கார் தொழிற்நுட்பங்கள், கூல்டு கிளவ் பாக்ஸ் உள்ளிட்ட பல வசதிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

இன்னோவாக்கு ஆப்பு வைக்க புதுசா காரை களம் இறக்கப் போகும் மாருதி . . . இன்ஜின் யாரோடது தெரியுமா . . .

மாருதி நிறுவனம் டொயோட்டாவிடம் இன்னோவா காரின் தொழிற்நுட்பத்தையே வாங்கி இன்னோவா காருக்கே போட்டியாக காரை களம் இறக்கத் தயாராகி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, October 21, 2022, 18:02 [IST]
English summary
Maruti prepares for c segment MPV with hybrid engine know full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+