அப்டேட்டுகளுடன் உருவாகி இருக்கும் மாருதி எர்டிகா காருக்கு புக்கிங் தொடக்கம்... ரூ. 11 ஆயிரம் இருந்தா போதும்!
மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காருக்கு புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் மிக விரைவில் எர்டிகா (Ertiga) மற்றும் எக்ஸ்எல் 6 (XL6) ஆகிய கார் மாடல்களின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. நிறுவனம், ஏற்கனவே புதிய பலேனோ, டிசையர் சிஎன்ஜி மற்றும் அப்டேட் செய்யப்பட்ட வேகன்ஆர் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

இவற்றின் வரிசையிலேயே வெகு விரைவில் 2022 எர்டிகா, எக்ஸ்எல்6 ஆகியவை இணைய இருக்கின்றன. இந்த நிலையில், புதிய 2022 எர்டிகா கார் மாடலுக்கு இந்தியாவில் புக்கிங் பணிகள் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் புகழ்வாய்ந்த எம்பிவி ரக கார் மாடல்களில் எர்டிகாவும் ஒன்று.

இந்த கார் மாடலில் சில குறிப்பிட்ட மாற்றங்களை மாருதி சுஸுகி செய்ததிருக்கின்றது. காரின் முன் பக்க க்ரில், ஹெட்லைட், வால் பகுதி மின் விளக்கு உள்ளிட்டவற்றில் லேசான மாற்றங்களை மாருதி செய்திருக்கின்றது. பலேனோ கார் மாடலில் பயன்படுத்தப்பட்டிருப்பதை போல புதிய க்ரில்லும், லேசான ஸ்போர்ட் அம்சம் கொண்ட ஹெட்லைட் உள்ளிட்டவையே 2022 எர்டிகாவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி புதிய ஸ்டைலிலான பம்பர்கள் முன் மற்றும் பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஓர் வெர்ஷனக்கே தற்போது நாட்டில் புக்கிங் பணிகள் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ. 11 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

மேலே பார்த்த புதுப்பித்தல் அம்சங்களுடன் சேர்த்து புதிய நவீன கால சிறப்பு வசதிகளும் 2022 எர்டிகாவில் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, அப்கிரேட் செய்யப்பட்ட பவர்டிரெயின், 6 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்டவை அதில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, இந்த கார் அதிக எரிபொருள் சிக்கனம், சிறந்த திறன் வெளிப்பாடு உள்ளிட்டவையும் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

இதுபோன்று இன்னும் பல அம்சங்கள் 2022 எர்டிகாவில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், காரின் இருக்கை அமைப்பில் பெரியளவிலான மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதைதவிர வேறு எந்த பெரிய மாற்றமும் காரின் உட்பக்கத்தில் இடம் பெற இருப்பதாக தற்போது வரை தகவல்கள் வெளியாகவில்லை.

தற்போதைய எர்டிகாவில் இடம் பெற்றிருப்பதை போலவே சுஸுகி இணைப்பு வசதிக் கொண்ட 7 அங்குல ஸ்மார்ட் பிளே திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட அம்சங்கள் இக்காரில் இடம் பெற இருக்கின்றன.

இத்துடன், 12 வோல்ட் சார்ஜிங் போர்ட் அனைத்து மூன்று வரிசை இருக்கைகள் அமைப்புகளுக்கும் வழங்கப்பட இருக்கின்றது. மேலும், அட்ஜஸ்டபிள் மற்றும் முன் பக்கத்தில் மடிக்கும் வசதிக் கொண்ட விங் ரக கண்ணாடிகள் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார் மற்றும் ஸ்டாப் அம்சமும் 2022 எர்டிகாவில் இடம் பெற உள்ளது.

பாதுகாப்பு அம்சங்களாக பார்க்கிங் சென்சார்கள், கேமிரா, சென்ட்ரல் லாக்கிங், ட்யூவல் ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், ஹில்ட் ஹோல்டு வசதிக் கொண்ட ஏபிஎஸ், இபிடி மற்றும் ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை மவுண்டுகள் என பல அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றது.

இத்தகைய சிறப்பு வசதிகளுடனேயே 2022 வெகு விரைவில் மாருதி சுஸுகி எர்டிகா இந்திய சந்தையை வந்தடைய இருக்கின்றது. இக்காரின் அறிமுகம் வரும் 15ம் தேதி அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையிலேயே தற்போது புக்கிங் பணிகள் தொடங்கியிருக்கின்றன.
குறிப்பு: படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








