எர்டிகா காரின் பாதுகாப்பு தரத்தை உயர்த்திய மாருதி! ரெண்டுமே பயணிகளை பாதுகாப்பதில் கில்லி! சேல்ஸ் பிச்சுக்கபோது

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் புகழ்பெற்ற எர்டிகா (Ertiga) காரின் பாதுகாப்பு தரத்தை மேலும் சில மடங்கு உயர்த்தியிருக்கின்றது. அதாவது, அக்காரில் புதிதாக இரு பாதுகாப்பு அம்சங்களை சேர்த்திருக்கின்றது. என்னென்ன அம்சங்களை அது சேர்த்துள்ளது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

எர்டிகா காரின் பாதுகாப்பு தரத்தை உயர்த்திய மாருதி... ரெண்டுமே பயணிகளை பாதுகாப்பதில் கில்லி! சேல்ஸ் இன்னும் பிச்சுக்கபோகுது!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார் மாடலான எர்டிகா (Ertiga)வில் இருக்கும் சிறப்பம்சங்களை அப்டேட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காரின் பாதுகாப்பு விஷயத்திலேயே மாருதி சுஸுகி அப்டேட் செய்திருக்கின்றது. அதாவது, எர்டிகா காரில் இரு பாதுகாப்பு கருவிகளை அது புதிதாக சேர்த்துள்ளது.

எர்டிகா காரின் பாதுகாப்பு தரத்தை உயர்த்திய மாருதி... ரெண்டுமே பயணிகளை பாதுகாப்பதில் கில்லி! சேல்ஸ் இன்னும் பிச்சுக்கபோகுது!

புகழ்பெற்ற கார் மாடலின் பாதுகாப்பு தரத்தை அதிகப்படுத்தும் விதமாக இரு புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்ப்பை மாருதி சுஸுகி செய்திருக்கின்றது. இஎஸ்பி எனப்படும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி சிஸ்டம் (Electronic Stability Program) மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் (Hill-Hold Assist) ஆகிய இரு அம்சங்களையே எர்டிகாவில் புதிதாக மாருதி சுஸுகி சேர்த்திருக்கின்றது.

எர்டிகா காரின் பாதுகாப்பு தரத்தை உயர்த்திய மாருதி... ரெண்டுமே பயணிகளை பாதுகாப்பதில் கில்லி! சேல்ஸ் இன்னும் பிச்சுக்கபோகுது!

இந்த பாதுகாப்பு அம்சங்கள் எர்டிகாவின் அனைத்து வேரியண்டுகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த அம்சம் இல்லாமல் எர்டிகாவை வாங்க முடியாது. இந்த கட்டாய பாதுகாப்பு அம்சம் சேர்ப்பினால் அக்காரின் விலை சற்றே உயர்ந்திருக்கின்றது. அதாவது, மாருதி சுஸுகி எர்டிகா காரின் எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ. 6 ஆயிரம் வரை உயர்ந்திருக்கின்றது.

எர்டிகா காரின் பாதுகாப்பு தரத்தை உயர்த்திய மாருதி... ரெண்டுமே பயணிகளை பாதுகாப்பதில் கில்லி! சேல்ஸ் இன்னும் பிச்சுக்கபோகுது!

இரு புதிய பாதுகாப்பு அம்சங்களை சேர்த்ததன் காரணத்தினாலேயே இந்த விலையுயர்வு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த விலை உயர்வால் 2022 மாருதி சுஸுகி எர்டிகாவின் ஆரம்ப விலையே ரூ. 8.41 லட்சமாக மாறியுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

எர்டிகா காரின் பாதுகாப்பு தரத்தை உயர்த்திய மாருதி... ரெண்டுமே பயணிகளை பாதுகாப்பதில் கில்லி! சேல்ஸ் இன்னும் பிச்சுக்கபோகுது!

முன்னதாக மாருதி சுஸுகி நிறுவனம் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் சிஸ்டம் ஆகியவற்றை எர்டிகாவின் தானியங்கி மற்றும் இசட்எக்ஸ்ஐ பிளஸ் மேனுவல் ஆகிய வேரியண்டுகளில் மட்டுமே வழங்கி வந்தது. தற்போது நாட்டில் வாகனங்கள் சார்ந்து பாதுகாப்பு விதிகள் பலப்படுத்தப்பட்டு வருவதால் எர்டிகாவின் அனைத்து வேரியண்டுகளிலும் இவ்விரு பாதுகாப்பு அம்சத்தையும் மாருதி கட்டாயப்படுத்தியிருக்கின்றது.

எர்டிகா காரின் பாதுகாப்பு தரத்தை உயர்த்திய மாருதி... ரெண்டுமே பயணிகளை பாதுகாப்பதில் கில்லி! சேல்ஸ் இன்னும் பிச்சுக்கபோகுது!

விரைவில் அனைத்து கார் மாடல்களிலும் ஆறு ஏர் பேக்குகள் எனும் விதி கட்டாயப்படுத்தப்பட இருக்கின்றது. இன்னும் பல பாதுகாப்பு கருவிகளை இந்திய அரசு வாகனங்களில் கட்டாயமாக்க இருப்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போதைய நிலவரப்படி மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

எர்டிகா காரின் பாதுகாப்பு தரத்தை உயர்த்திய மாருதி... ரெண்டுமே பயணிகளை பாதுகாப்பதில் கில்லி! சேல்ஸ் இன்னும் பிச்சுக்கபோகுது!

அவை எல்எக்ஸ்ஐ (LXi), விஎக்ஸ் (VXi), இசட்எக்ஸ்ஐ (ZXi) மற்றும் இசட்எக்ஸ்ஐ பிளஸ் (ZXi Plus) ஆகிய வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 2022 மாருதி சுஸுகி எர்டிகாவில் புதிய குரோம் பூச்சுக் கொண்ட க்ரில் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ட்யூவல் டோன் அலாய் வீல்கள், 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், குரோம் இன்செர்ட்டுகள் கொண்ட கருப்பு நிற டூர் கார்னிஷ் ஆகியவையும் அதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

எர்டிகா காரின் பாதுகாப்பு தரத்தை உயர்த்திய மாருதி... ரெண்டுமே பயணிகளை பாதுகாப்பதில் கில்லி! சேல்ஸ் இன்னும் பிச்சுக்கபோகுது!

எர்டிகாவில் 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 102 பிஎச்பி பவரையும், 136.8 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

எர்டிகா காரின் பாதுகாப்பு தரத்தை உயர்த்திய மாருதி... ரெண்டுமே பயணிகளை பாதுகாப்பதில் கில்லி! சேல்ஸ் இன்னும் பிச்சுக்கபோகுது!

இந்த தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வில் பேடிஷ் ஷிஃப்டர் வசதியும் வழங்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது. மாருதி சுஸுகி நிறுவனம் எர்டிகா காரை சிஎன்ஜி தேர்விலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த தேர்வில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெட்ரோல் மோட்டார் 87 பிஎச்பி பவரையும், 121.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், அது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.11 கிமீ ரேஞ்ஜை வழங்கும்.

Article Published On: Saturday, July 23, 2022, 20:12 [IST]
English summary
Maruti suzuki added two new safety features into ertiga mpv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+