இதனாலதான் மாருதியை இந்தியர்கள் அதிகம் நம்புறாங்க... மாருதிக்கு சொந்தமா இவ்ளோ அவுட்லெட்டுகள் இருக்கா!!

இந்திய வாகன உலகின் முன்னணி நிறுவனமான மாருதி சுஸுகிக்கு ஒட்டுமொத்தமாக இந்தியாவில் எத்தனை அவுட்லெட்டுகள் இருக்கு என தெரியுமா?, இதுகுறித்து வெளியாகியிருக்கும் ஆச்சரியமளிக்கும் தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி நிறுவனம் தங்களுக்கு இந்தியாவில் எத்தனை அவுட்லெட்டுகள் ஒட்டுமொத்தமாக உள்ளன என்பது பற்றிய சுவாரஷ்ய தகவலை வெளியிட்டுள்ளது. நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி 3,500 அவுட்லெட்டுகள் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதன் வாயிலாக நிறுவனம் மிகப் பெரிய நெட்வொர்க்குடன் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகின்றது.

மாருதி

உண்மையைக் கூற வேண்டுமானால், நாட்டில் வேறு எந்த நிறுவனமும் இந்தளவு அதிக எண்ணிக்கையில் அவுட்லெட்டுகளைக் கொண்டிருக்கவில்லை. ஆகையால், நாட்டில் 3,500 அவுட்லெட்டுகளுடன் செயல்படும் முதன்முதல் நிறுவனமாக மாருதி சுஸுகி மாறியிருக்கின்றது. மேலும், தங்கள் நிறுவனம் தற்போது இந்தியாவில் 2,250க்கும் அதிகமான நகரங்களில் செயல்பட்டு வருவதாகவும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

இந்தளவு அதிக நகரங்களில் வேறு எந்த நிறுவனமும் செயல்படவில்லை என்பதும் மாருதிக்கு கூடுதல் பிளஸ்ஸாக அமைந்துள்ளது. நிறுவனம் சமீபத்தில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஓர் புதிய நெக்ஸா ஷோரூமை திறந்து வைத்தது. இதுவே, நிறுவனத்தின் 3,500 ஆவது ஷோரூம் ஆகும். 2021 ஆம் ஆண்டு தொடங்கி இப்போது வரையில் மட்டுமே 237 புதிய அவுட்லெட்டுகளை நிறுவனம் திறந்து வைத்திருக்கின்றது.

இந்த அளவு அதிக எண்ணிக்கையில் புதிய அவுட்லெட்டுகளை வேறு எந்த நிறுவனமும் இந்தியாவில் நடப்பாண்டில் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், மாருதி சுஸுகியின் இந்த செயல் ஒட்டுமொத்த இந்திய வாகன உலகையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் அமைந்துள்ளது. நிறுவனம் மேலும் தனது விற்பனை வலை அமைப்பை விரிவாக்கும் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த மாதிரியான செயலின் காரணத்தினாலேயே மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த அளவு அதிக வேகத்தில் விற்பனையகத்தின் எண்ணிக்கையை கூட்டிக் கொண்டிருப்பதன் காரணத்தினாலயே வேறு நிறுவனத்தாலும் மாருதி சுஸுகியிடம் போட்டியிட முடியாத நிலை தென்படுகின்றது.

நிறுவனம் தற்போது மூன்று பிரிவுகளின் கீழ் தன்னுடைய தயாரிப்புகளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அரேனா, நெக்ஸா மற்றும் வர்த்த வாகனங்கள் எனும் மூன்று பிரிவுகளின் அடிப்படையிலேயே தன்னுடைய வாகனங்களை மாருதி சுஸுகி விற்பனைச் செய்து வருகின்றது. வாடிக்கையாளர்களைக் கவரும் நிறுவனம் விற்பனையகத்தின் எண்ணிக்கையை மட்டும் கூட்டவில்லை.

புதுமுக மற்றும் அப்டேட் செய்யப்பட்ட கார் மாடல்களையும் இந்திய சந்தையில் களமிறக்கி வருகின்றது. அந்தவகையில், வெகு விரைவில் 35-40 கி.மீ மைலேஜ் தரக் கூடிய ஹைபிரிட் வசதிக் கொண்ட ஸ்விஃப்ட் காரை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இத்துடன், டிசையர் ஹைபிரிட் காரையும் அது இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இவ்விரு அதிகம் மைலேஜ் தரக் கூடிய கார்களும் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Maruti suzuki announced company crossed 3500 outlets
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X