அதிரடியாக விலையைக் குறைத்த மாருதி... உடனே பணத்தை எடுத்துக்கொண்டு கார் வாங்க ஒடுங்க...
மாருதி கார் நிறுவனம் மே மாதம் கோடைக் கால தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் பல கார்களின் விலை குறைந்துள்ளது. இது குறித்த முழு செய்தியைக் காணலாம் வாருங்கள்

மாருதி சுஸூகி நிறுவனம் கோடைக் கால கொண்டாட்டமாகச் சிறப்புத் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன் படி இந்த மே மாதம் முழுவதும் மாருதி கார்களை நெக்ஸா ஷோரூம்களில் வாங்கும் நபர்களுக்குச் சிறப்பான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது அந்த தள்ளுபடிகள் குறித்த முழு விபரத்தைக் கீழே காணலாம் வாருங்கள்

மாருதி சியாஸ் காருக்கு ரூ30 ஆயிரம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதை ரூ25 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாகவும் ரூ5 ஆயிரம் கார்பரேட் தள்ளுபடியாகவும் அறிவித்துள்ளது. அதே தள்ளுபடியை அந்நிறுவனம் சியாஸ் ஆனிவர்சரி எடிசன் என்ற நிறுவனத்திற்கும் வழங்கியுள்ளது.

மாருதி இக்னீஸ் காருக்கு ரூ33 ஆயிரம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளார். இந்த காருக்கு ரூ 20 ஆயிரம் வரை எக்ஸ் சேஞ்ச் தள்ளுபடியாகவும், ரூ10 ஆயிரம் மற்றும் ரூ3 ஆயிரம் கார்பரேட் தள்ளுபடியாகவும் அறிவித்துள்ளது. இதில் இக்னீஸ் ஏஜிஎஸ் வேரியண்ட்டிற்கு எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாக ரூ10 ஆயிரம் மற்றும் கார்பரேட் தள்ளுபடியாக ரூ3 ஆயிரம் அறிவித்துள்ளது.

மேலும் இக்னீஸ் சிக்மா ஆனிவர்சரி எடிசன், டெல்டா, ஸெட்டா கார்களுக்கு ரூ13 ஆயிரம் தள்ளுபடியும், ஆல்ஃபாக ஆனிவர்சரி எடிசன் காருக்கு ரூ18,700 வரை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ10 ஆயிரம் மற்றும் கார்பரேட் டிஸ்கவுண்ட் ரூ3000 அறிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி எஸ்-கிராஸ் காரின் எல்லா வேரியன்ட்களுக்கும் ரூ45,000 வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 12 ஆயிரம் விலையில் தள்ளுபடியாகவும், ரூ25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ5 ஆயிரம் கார்பரேட் டிஸ்கவுண்டாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ் கிராஸ் அனிவர்சரி எடிசன் காருக்கு ரூ25 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ5 ஆயிரம் கார்பரேட் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் XL6 மற்றும் பலேனோ ஆகிய கார்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்படவில்லை. இந்த இரு கார்களுக்கு மார்கெட்டில் பயங்கரமான டிரான்ட் உள்ளது. இதில் சமீபத்தில் அறிமுகமாக மாருதி சுஸூகி XL6 கார் ரூ11.29 லட்சம் முதல் 14.55 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இது ஒரு பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் விற்பனையாகிறது.

இதோ போல மாருதி சுஸூகியின் அரேனா ஷோரூம்களுக்கும் டிஸ்கவுண்ட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆல்டோ 800, வேகன்ஆர், எஸ்-பிரஸ்ஸோ, ஸிவிப்ட், விட்டாரா பிரெஸ்ஸா, ஆகிய கார்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளனர். எந்த காரிலும் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை.

ஆல்டோ 800 பெட்ரோல் காரை பொருத்தவரை ரூ8000 விலையில் தள்ளுபடியாகவும், ரூ15 ஆயிரம் எக்ஸசேஞ்ச் போனஸ் மற்றும் ரூ3 ஆயிரம் கார்பரேட் தள்ளுபடியாகவும் வழங்கப்படுகிறது. எஸ்-பிரஸ் ஓ காரை மேனுவல் டிரான்ஸ்மிஷன் காரை பொருத்தவரை மொத்தம் ரூ28 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ15 ஆயிரம் விலையில் தள்ளுபடி ரூ10 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி ரூ3 ஆயிரம் கார்பரேட் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

| Model | Total Effective Consumer Offer | Exchange Bonus | Special Institutional Sales Offer (Up to) | Total Savings (Up to) |
| Alto 800 (P) excluding Alto 800 Std | ₹8,000 | ₹10,000 | ₹3,000 | ₹21,000 |
| S-Presso Petrol MT | ₹15,000 | ₹10,000 | ₹3,000 | ₹28,000 |
| Eeco (P) excluding Ambulance | ₹10,000 | ₹15,000 | ₹3,000 | ₹28,000 |
| New Celerio | ₹20,000 | ₹10,000 | ₹3,000 | ₹33,000 |
| WagonrR (Petrol) 1.0 ltr Manual | ₹25,000 | ₹10,000 | ₹3,000 | ₹38,000 |
| WagonR (Petrol) 1.2 ltr Manual | ₹5,000 | ₹10,000 | ₹3,000 | ₹18,000 |
| Swift MT | ₹8,000 | ₹10,000 | ₹3,000 | ₹21,000 |
| New Dzire (MT) | ₹10,000 | ₹10,000 | ₹3,000 | ₹23,000 |
| Brezza (P) (MT & AT) | ₹5,000 | ₹10,000 | ₹3,000 | ₹18,000 |
| CNG Variants: Alto, S-Presso, WagonR, Eeco, Ertiga | No Discount Offers, No Exchange Bonus | |||

மாருதி சுஸூகி ஈக்கோ காருக்கு ரூ28 ஆயிரம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ10 ஆயிரம் விலையில் தள்ளுபடி, ரூ15 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ3 ஆயிரம் கார்பரேட் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது, செலிரியோ காரை பொறுத்தவரை ரூ 33 ஆயிரம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ20 ஆயிரம் விலையில் தள்ளுபடி, ரூ10 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ 3 ஆயிரம் கார்பரேட் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேகன்ஆர் 1.0 லிட்டர் காருக்கு ரூ18 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதுபோக மாருதி சுஸூகி ஸிவிப்ட் காருக்கு ரூ21 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ8 ஆயிரம் விலையில் தள்ளுபடி ரூ10 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ3 ஆயிரம் கார்பரேட் தள்ளுபடி அறவிவிக்கப்ட்டுள்ளது. மாருதி சுஸூகி டிசையர் காரை பொருத்தவரை ரூ23 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ10 ஆயிரம் கேஷ் தள்ளுபடி, ரூ10 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ3 ஆயிரம் கார்பரேட் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல பிரெஸ்ஸா காருக்கு ரூ18 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ5 ஆயிரம் விலையில் தள்ளுபடி , ரூ10 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கியுள்ளது. ரூ3 ஆயிரம் கார்பரேட் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மாருதி நிறுவனம் இந்த கோடைக் காலத்தில் விற்பனையை அதிகரிக்க இந்த தள்ளுபடியை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








