வசியம் பண்றாங்க! மாருதி நிறுவனம் மக்களை இப்படிதான் மயக்குதா! இந்த விஷயத்தை இப்ப வரைக்கும் வேற யாரும் பண்ணல!

சிறப்பான மைலேஜ், குறைவான விலை ஆகிய காரணங்களை தாண்டி மாருதி கார்களை மக்கள் விரும்புவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அது என்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை மாருதி சுஸுகி (Maruti Suzuki) தன்வசம் வைத்துள்ளது. மைலேஜ், டிசைன், வசதிகள், விலை என அனைத்து அம்சங்களிலும் மாருதி சுஸுகி கார்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதுதான் இதற்கு காரணம்.

வசியம் பண்றாங்க! மாருதி நிறுவனம் மக்களை இப்படிதான் மயக்குதா! இந்த விஷயத்தை இப்ப வரைக்கும் வேற யாரும் பண்ணல!

ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை வாடிக்கையாளர்கள் பெரிதாக நம்புவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. பிரம்மாண்டமான சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்தான் அந்த மற்றொரு காரணம். ஆம், இந்தியாவின் சிறிய நகரங்களில் கூட உங்களால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்களை காண முடியும்.

எனவே கார்களை வாங்குவதும், ஏதாவது பிரச்னை என்றால் உடனடியாக சரி செய்வதும் மிகவும் எளிமையாக உள்ளது. இந்த சூழலில், அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தொடர்ச்சியாக தனது ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்து வருகிறது.

இந்த நடவடிக்கைகளின் பலனாக தற்போது மிகப்பெரிய சாதனை ஒன்றை மாருதி சுஸுகி நிறுவனம் படைத்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் 3,500வது ஷோரூம் தற்போது ஐதராபாத் நகரில் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 3,500 ஷோரூம்களை திறந்த முதல் மற்றும் ஒரே நிறுவனம் என்ற பெருமையை மாருதி சுஸுகி தனதாக்கியுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் 3,500வது ஷோரூமாக திறக்கப்பட்டிருப்பது நெக்ஸா (NEXA) ஷோரூம் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனம் 2 வகையான ஷோரூம்களின் மூலம் கார்களை விற்பனை செய்து வருகிறது. ஒன்று அரேனா (Arena). மற்றொன்று நெக்ஸா. இதில், நெக்ஸா ஷோரூம்களின் வாயிலாக விற்பனை செய்யப்படுவது சற்று பிரீமியமான கார்கள் ஆகும்.

அதாவது க்ராண்ட் விட்டாரா (Grand Vitara), எக்ஸ்எல்6 (XL6), சியாஸ் (Ciaz), பலேனோ (Baleno) மற்றும் இக்னிஸ் (Ignis) போன்ற கார்கள் நெக்ஸா ஷோரூம்களின் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. மறுபக்கம் அரேனோ ஷோரூம்களின் மூலமாக விற்பனை செய்யப்படும் கார்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.

இதன்படி ஆல்டோ (Alto), ஆல்டோ கே10 (Alto K10), வேகன் ஆர் (Wagon R), செலிரியோ (Celerio), ஸ்விஃப்ட் (Swift), டிசையர் (Dzire), எஸ்-பிரெஸ்ஸோ (S-Presso), எர்டிகா (Ertiga), பிரெஸ்ஸா (Brezza) மற்றும் ஈக்கோ (Eeco) போன்ற கார்கள் அரேனா ஷோரூம் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதுதவிர ட்ரூ வேல்யூ (True Value) என்ற சேனல் மூலமாக யூஸ்டு கார்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் இந்தியா முழுவதும் சுமார் 2,250 நகரங்களில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெட்வொர்க் பரந்து விரிந்து காணப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருவதற்கு இந்த பிரம்மாண்டமான நெட்வொர்க் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

Article Published On: Friday, November 18, 2022, 21:09 [IST]
English summary
Maruti suzuki arena and nexa cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+