ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் புக் செய்யுறாங்க! 2022 மாருதி பலேனோ காருக்கு குவியும் புக்கிங்!
2022 மாருதி சுஸுகி பலேனே காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பு கிடைத்து வருவது தெரிய வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவல்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

புதிய மாருதி சுஸுகி பலேனோ கார் மாடலுக்கு இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இக்காருக்கு புக்கிங் 50 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மிக சிறப்பான புக்கிங் மைல் கல்லானது வெறும் 44 நாட்களில் கிடைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆகையால், இந்தியாவின் மிக சிறப்பாக விற்பனையாகும் ஹேட்ச்பேக் காராக பலேனோ மாறியிருக்கின்றது. புதிய பலேனோ முந்தைய வெர்ஷன் பலேனோவைக் காட்டிலும் அதிக சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட வாகனமாக உருவாகியிருக்கின்றது. ஆகையால், இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் பேராதரவு கிடைக்கத் தொடங்கியுள்ளது.

2022 பலேனோ காரின் வெளிப்புறத் தோற்றம் அப்டேட்டின் காரணத்தினால் அதிக ஸ்போர்ட்டியான வடிவமைப்பைப் பெற்றிருக்கின்றது. குரோம் அக்செண்டுகள், எல் வடிவ பகல்நேர மின் விளக்குடன் கூடிய ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல்-கள் உள்ளிட்டவை அப்கிரேடின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, சில முக்கிய பேனல்கள் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இதுவரை இல்லாத வகையில் காரின் உட்புறத்திற்கு மூன்று விதமான நிறங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கருப்பு மற்றும் அடர் நீல நிறங்களால் டேஷ்போர்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சில தொழில்நுட்ப கருவிகளும் மறு-சீரமைப்புகளுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் க்ளைமேட் கனட்ரோல் பேனல் உள்ளிட்டவையே ரிவைஸ்ட் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற பன்முக சிறப்புகளை 2022 பலேனோ பெற்றிருக்கின்றது. எனவேதான் தற்போது இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பை அது பெற தொடங்கியிருக்கின்றது. கடந்த பிப்ரவரி 7ம் தேதி அன்றே இக்காருக்கு புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையிலேயே ஒட்டுமொத்தமாக 50 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகளுக்கான முன்பதிவுகள் பலேனோவிற்குக் கிடைத்திருக்கின்றது. மாருதி பலேனோ காரில் 9 இன்ச் அளவுள்ள ஸ்மார்ட் ப்ளே ப்ரோ ஃப்ரீ ஸ்டாண்டிங் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்டது), ஆர்கேமிஸ் ட்யூன்ட் சவுண்ட் சிஸ்டம், சுசுகியின் கார் இணைப்பு அம்சம் (அலெக்ஸா சப்போர்ட்டும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது), 60:40 ஸ்பிளிட் ரக பின் பக்க இருக்கை உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, ஹெட்-அப் திரை, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, பின் பக்க பயணிகளுக்கான ஏசி வெண்ட், மழை பொழிந்தால் தானாக இயங்கும் வைப்பர் மற்றும் ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்-கள் உள்ளிட்ட அம்சங்களும் 2022 பலேனோவில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஏற்கனவே நாங்கள் கூறியதைப் போல் இக்கார் அதிக பாதுகாப்பான வாகனமாகவும் காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், அதிக உறுதியான ஸ்டீல் காரின் கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹை ஸ்பீடு அலர்ட், டிரைவர் மற்றும் கோ டிரைவர் பயணிக்கான சீட் பெல்ட் ரிமைண்டர், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்களும் பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டுள்ளன.

மேலே பார்த்ததைப் போல் 20க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் 2022 பலேனோ காரில் மாருதி வழங்கியிருக்கின்றது. மாருதி கார்கள் என்னதான் இந்தியர்கள் அதிகம் விரும்பும் வாகனங்களாக காட்சியளித்தாலும், அவை பாதுகாப்பு விஷயத்தில் சற்றே குறைந்த வாகனமாகவே காட்சியளிக்கின்றன. இதனை கருத்தை உடைத்தெறியும் வகையில் 2022 பலேனோ உருவாக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் தற்போது 1.2 லிட்டர் ட்யூவல் ஜெட் விவிடி பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. மிக விரைவில் இத்துடன் சேர்த்து சிஎன்ஜி தேர்வையும் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் வருகை அடுத்த மாதம் அரங்கேற இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








