செக் வைக்க ரெடியாகும் மாருதி சுஸுகி... டாடாவின் பாதுகாப்பான காருக்கு சிக்கல்... இனி போட்டி அனல் பறக்க போகுது!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனோ சிஎன்ஜி மற்றும் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் பற்றிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

செக் வைக்க ரெடியாகும் மாருதி சுஸுகி... டாடாவின் பாதுகாப்பான காருக்கு சிக்கல்... இனி போட்டி அனல் பறக்க போகுது!

மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது தொடர்ச்சியாக பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. சமீபகால அளவில், 2022 பலேனோ, 2022 வேகன் ஆர் மற்றும் 2022 டிசையர் சிஎன்ஜி என பல்வேறு புதிய கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. வரும் மாதங்களிலும் மாருதி சுஸுகி நிறுவனம் நிறைய கார்களை அறிமுகம் செய்யவுள்ளது.

செக் வைக்க ரெடியாகும் மாருதி சுஸுகி... டாடாவின் பாதுகாப்பான காருக்கு சிக்கல்... இனி போட்டி அனல் பறக்க போகுது!

இதில், மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி (Maruti Suzuki Baleno CNG) மிகவும் முக்கியமானது. மாருதி சுஸுகி நிறுவனம் தனது அதிகப்படியான நெக்ஸா (Nexa) கார்களிலும், சிஎன்ஜி தேர்வை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி பலேனோ காரின் சிஎன்ஜி மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செக் வைக்க ரெடியாகும் மாருதி சுஸுகி... டாடாவின் பாதுகாப்பான காருக்கு சிக்கல்... இனி போட்டி அனல் பறக்க போகுது!

மாருதி சுஸுகி பலேனோ காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜினுடன் சிஎன்ஜி தேர்வு வழங்கப்படலாம். இந்த இன்ஜின் தற்போதைய நிலையில் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 90 பிஎஸ் பவரையும், 4,400 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் தற்போதைய நிலையில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

செக் வைக்க ரெடியாகும் மாருதி சுஸுகி... டாடாவின் பாதுகாப்பான காருக்கு சிக்கல்... இனி போட்டி அனல் பறக்க போகுது!

ஆனால் சிஎன்ஜி வேரியண்ட்டில், ஒரே ஒரு கியர் பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது அனேகமாக 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸாக இருக்கலாம். அதேபோல் பெட்ரோல் வேரியண்ட்டின் செயல்திறனை விட சிஎன்ஜி வேரியண்ட்டின் செயல்திறன் குறைவாக இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

செக் வைக்க ரெடியாகும் மாருதி சுஸுகி... டாடாவின் பாதுகாப்பான காருக்கு சிக்கல்... இனி போட்டி அனல் பறக்க போகுது!

ஆனால் வெளிப்புறத்தில் எந்த மாற்றமும் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. சிஎன்ஜி என்பதை குறிக்கும் பேட்ஜ்கள் வேண்டுமானால் வழங்கப்படலாம். அதேபோல் வசதிகளின் பட்டியலிலும் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. பெட்ரோல் வேரியண்ட்டில் என்ன வசதிகள் வழங்கப்படுகிறதோ, அது அப்படியே சிஎன்ஜி வேரியண்ட்டிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செக் வைக்க ரெடியாகும் மாருதி சுஸுகி... டாடாவின் பாதுகாப்பான காருக்கு சிக்கல்... இனி போட்டி அனல் பறக்க போகுது!

மாருதி சுஸுகி சிஎன்ஜி கார்களின் விற்பனை தற்போது மிகவும் சிறப்பாக உள்ளது. 10 லட்சம் (1 மில்லியன்) சிஎன்ஜி கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில்தான் கடந்தது. இந்த சூழலில் பலேனோ சிஎன்ஜி காரின் வருகை, மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செக் வைக்க ரெடியாகும் மாருதி சுஸுகி... டாடாவின் பாதுகாப்பான காருக்கு சிக்கல்... இனி போட்டி அனல் பறக்க போகுது!

பலேனோ சிஎன்ஜி தவிர மாருதி சுஸுகி நிறுவனம் வரும் மாதங்களில் இன்னும் பல்வேறு கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்த மாதம் எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 எம்பிவி கார்களின் 2022 மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செக் வைக்க ரெடியாகும் மாருதி சுஸுகி... டாடாவின் பாதுகாப்பான காருக்கு சிக்கல்... இனி போட்டி அனல் பறக்க போகுது!

இந்த 2 கார்களும் நடப்பு மார்ச் மாதமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டாலும், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இதை தொடர்ந்து விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடலை நடப்பாண்டு மத்தியில், அதாவது ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செக் வைக்க ரெடியாகும் மாருதி சுஸுகி... டாடாவின் பாதுகாப்பான காருக்கு சிக்கல்... இனி போட்டி அனல் பறக்க போகுது!

விட்டாரா பிரெஸ்ஸா காரானது, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். தற்போது இந்த செக்மெண்ட்டில் டாடா நெக்ஸான் காரின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு, குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் இந்த கார் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றிருப்பதும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

செக் வைக்க ரெடியாகும் மாருதி சுஸுகி... டாடாவின் பாதுகாப்பான காருக்கு சிக்கல்... இனி போட்டி அனல் பறக்க போகுது!

விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடல் மூலம் டாடா நெக்ஸான் காருக்கு கடுமையான போட்டியை வழங்க மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. டாடா நெக்ஸான் மட்டுமின்றி, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் உள்ளிட்ட கார்களுடனும் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா போட்டியிடும்.

செக் வைக்க ரெடியாகும் மாருதி சுஸுகி... டாடாவின் பாதுகாப்பான காருக்கு சிக்கல்... இனி போட்டி அனல் பறக்க போகுது!

இதற்கிடையே 2022 பலேனோ காரை தொடர்ந்து, டொயோட்டா நிறுவனம் 2022 க்ளான்சா காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதேபோல் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா காரை தொடர்ந்து, புதிய தலைமுறை அர்பன் க்ரூஸர் காரையும் டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செக் வைக்க ரெடியாகும் மாருதி சுஸுகி... டாடாவின் பாதுகாப்பான காருக்கு சிக்கல்... இனி போட்டி அனல் பறக்க போகுது!

மாருதி சுஸுகி பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்களைதான் டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து முறையே க்ளான்சா மற்றும் அர்பன் க்ரூஸர் என்ற பெயர்களில் விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்காக சுஸுகி நிறுவனத்துடன் டொயோட்டா கூட்டணி அமைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 17, 2022, 12:34 [IST]
English summary
Maruti suzuki baleno cng what we know so far
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+