2022 மாருதி பலேனோ காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! காருடன் இவற்றையும் வாங்கலாமாம்..!

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2022 மாருதி பலேனோ காருக்கான அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 மாருதி பலேனோ காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! காருடன் இவற்றையும் வாங்கலாமாம்..!

மாருதி சுஸுகி நிறுவனம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரினை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதன்படி பலேனோவின் தோற்றம் முந்தைய மாடலில் இருந்து கவனிக்கத்தக்க அளவில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆக்ஸஸரீகளின் மூலம் 2022 பலேனோ காரை மேலும் மெருக்கேற்றப்பட்ட தோற்றத்தில் பெறலாம்.

2022 மாருதி பலேனோ காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! காருடன் இவற்றையும் வாங்கலாமாம்..!

வெளிப்புறத்திற்கான ஆக்ஸஸரீகள்

தற்போதைய மாடர்ன் கார்களுக்கு க்ரோம் ஹைலைட்கள் ஆக்ஸஸரீகளாக வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதன்படி புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரிலும் முன்பக்க பம்பர் மற்றும் க்ரில் அமைப்பின் மேற்பகுதி உள்ளிட்ட பகுதிகளை க்ரோம் தொடுதல்களுடன் பெறலாம்.

2022 மாருதி பலேனோ காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! காருடன் இவற்றையும் வாங்கலாமாம்..!

அதேநேரம் கருப்பு நிற பேனல்களையும், பம்பர் கார்னர் பாதுகாப்பான்களாக, முன்பக்க ஃபெண்டர் கார்னிஷாக மற்றும் முன் பம்பர் கார்னிஷாகவும் புதிய பலேனோ காரில் பொருத்தி கொள்ளலாம். காரின் பக்கவாட்டு மோல்டிங்களை கருப்பு உள்ளீடுகளுடன் க்ரோம் மற்றும் க்ரோம் உள்ளீடுகளுடன் கருப்பு என்கிற இரு விதமான தேர்வுகளில் பெறலாம். இவ்வளவு ஏன், கதவு விஸர்ஸுக்கு கூட க்ரோம் கார்னிஷ் ஆக்ஸஸரீயாக வழங்கப்பட்டுள்ளது.

2022 மாருதி பலேனோ காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! காருடன் இவற்றையும் வாங்கலாமாம்..!

அப்படியே பின்பக்கத்திற்கு வந்தோமேயானால், பின் பம்பரை க்ரோம் கார்னிஷிலும், மோதல் தடுப்பு தட்டினை சில்வர் கார்னிஷிலும் பெறலாம். அத்துடன் பின்கதவின் கீழ்பகுதியில் பளபளக்கும் க்ரோம் ஸ்ட்ரிப்-ஐயும் பொருத்தி கொள்ளலாம். மேலும் பின்பக்க விலக்கிகளுக்கு (Deflectors) க்ரோம் மற்றும் கருப்பு கார்னிஷ் தேர்வு வழங்கப்பட்டுள்ளது.

2022 மாருதி பலேனோ காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! காருடன் இவற்றையும் வாங்கலாமாம்..!

உட்புறத்திற்கான ஆக்ஸஸரீகள்

வெளிப்புறத்திற்கு இணையாக, 2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புற கேபினிற்கும் ஏகப்பட்ட ஆக்ஸஸரீகள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய பலேனோவில் டேஸ்போர்டு இரட்டை-நிறத்தில் வழங்கப்பட்டிருக்க, தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆக்ஸஸரீகளின்படி இருக்கை கவர்களை மொத்தம் 11 விதமான டிசைன் தேர்வுகளில் பெறலாமாம்.

2022 மாருதி பலேனோ காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! காருடன் இவற்றையும் வாங்கலாமாம்..!

அதேபோல் தரைப்பாய்களுக்கும் அதிக எண்ணிக்கையில் டிசைன் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தரைப்பாய்கள் எந்தவொரு தட்ப வெப்பநிலையையும் தாங்கி கொள்ளக்கூடியதாக வழங்கப்பட்டுள்ளது. காருக்கு உள்ளே நுழையும்முன் வரவேற்பு 'NEXA' அடித்தட்டினை பல்வேறு விதமான ஒளியினை வெளிப்படுத்தக்கூடியதாக தேர்வு செய்யலாம்.

2022 மாருதி பலேனோ காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! காருடன் இவற்றையும் வாங்கலாமாம்..!

இவற்றுடன் உட்புற கேபினிற்கான ஸ்டைலிங் தொகுப்பும் ஆக்ஸஸரீயாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பினை வாங்குவதன் மூலமாக புதிய பலேனோவின் உட்புறத்தில் மைய கன்சோல், டேஸ்போர்டின் இரு முனைகளில் உள்ள ஏசி துளைகள் மற்றும் கதவு கை தலையணைகள் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரிம் ஃபினிஷிங்கை பெற முடியும். ஆனால் இந்த ட்ரிம் ஃபினிஷிங் பலேனோவின் ஸீட்டா மற்றும் டெல்டா வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்படுமாம்.

2022 மாருதி பலேனோ காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! காருடன் இவற்றையும் வாங்கலாமாம்..!

தற்போதைக்கு ஆக்ஸஸரீகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதே தவிர்த்து, இன்னும் இவற்றிற்கான அதிகாரப்பூர்வ விலைகள் அறிவிக்கப்படவில்லை. ஆதலால் பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரினை முன்பதிவு செய்ய உள்ளோர் இந்த ஆக்ஸஸரீகளின் விலைகள் குறித்து தெரிந்துக்கொள்ள அருகில் உள்ள மாருதி சுஸுகியின் நெக்ஸா டீலர்ஷிப் மையத்தினை அணுகவும்.

2022 மாருதி பலேனோ காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! காருடன் இவற்றையும் வாங்கலாமாம்..!

மாருதி சுஸுகி நிறுவனம் சற்று விலைமிக்க தனது பிரீமியம் தர கார்களை விற்பனை செய்ய நெக்ஸா டீலர்ஷிப் மையங்களை பயன்படுத்தி வருகிறது. மாருதி சுஸுகியின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோ அதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் டிசைன், வசதிகள் மற்றும் பாதுகாப்பு போன்ற பிரிவுகளில் குறிப்பிடத்தக்க அப்டேட்டை பெற்று வந்துள்ளது.

2022 மாருதி பலேனோ காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! காருடன் இவற்றையும் வாங்கலாமாம்..!

அறிமுகத்திற்கு முன்னதாக கடந்த 2022 ஜனவரி மாதத்திலேயே இந்த காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுவிட்டன. இந்தியாவில் பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார்கள் குஜராத்தில் உள்ள மாருதி சுஸுகியின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் மாருதி பலேனோ கார்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

2022 மாருதி பலேனோ காருக்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! காருடன் இவற்றையும் வாங்கலாமாம்..!

இதை ஏன் நான் இங்கு கூறுகிறேன் என்றால், சமீபத்தில்தான் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் 2022 பலேனோ தென்னாப்பிரிக்க நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த காரின் விற்பனை தென்னாப்பிரிக்காவில் வருகிற ஜூன் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளது. தென்னாப்பிரிக்காவில் 1.5 லிட்டர் என்ஜின் உடன் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்திய சந்தையில் சற்று குறைவான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினே வழங்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, February 28, 2022, 13:38 [IST]
English summary
2022 Maruti Baleno Accessories Detailed.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+