2022 பலேனோ காரின் ஆச்சரியமளிக்கும் மைலேஜ் திறன்... அடேங்கப்பா இவ்ளோ தருதா!

2022 பலேனோ காரின் மைலேஜ் விபரம் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

2022 பலேனோ காரின் ஆச்சரியமளிக்கும் மைலேஜ் திறன்... அடேங்கப்பா இவ்ளோ தருதா!

மாருதி சுசுகி நிறுவனம் நேற்றைய (பிப்ரவரி 23) தினம் 2022 பலேனோ காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பீரிமியம் கார் விரும்பிகள் மத்தியில் இக்காருக்கு பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் விற்பனைக்கான அறிமுகத்தை நிறுவனம் அரங்கேற்றியது.

2022 பலேனோ காரின் ஆச்சரியமளிக்கும் மைலேஜ் திறன்... அடேங்கப்பா இவ்ளோ தருதா!

இந்த நிலையில் இக்காரின் மைலேஜ் விபரங்கள் வெளியாகியுள்ளன. பிரீமியம் ஹேட்ச்பேக் கார் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் எந்தவொரு வாகனமும் வழங்காத ஓர் சூப்பரான மைலேஜை இக்கார் வழங்கும் என அந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022 பலேனோ காரின் ஆச்சரியமளிக்கும் மைலேஜ் திறன்... அடேங்கப்பா இவ்ளோ தருதா!

இதுகுறித்து அராய் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, புதிய 2022 பலினோ 22.35 கிமீ முதல் 22.94 கிமீ வரை ஒரு லிட்டருக்கு மைலேஜ் வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. 22.35 கிமீ மைலேஜை பலேனோவின் மேனுவல் வேரியண்டும், 22.94 கிமீ மைலேஜை தானியங்கி வேரியண்டும் வழங்குகின்றது. மிகவும் கணிசமான மைலேஜ் திறன் இதுவாகும்.

2022 பலேனோ காரின் ஆச்சரியமளிக்கும் மைலேஜ் திறன்... அடேங்கப்பா இவ்ளோ தருதா!

தற்போது விற்பனையில் இருக்கும் ஹைபிரிட் அல்லாத மற்றும் மைல்டு ஹைபிரிட் வசதிக் கொண்ட பலேனோவின் மேனுவல் வேரியண்ட் 21.01 கிமீ முதல் 23.87 கிமீ வரை ஒரு லிட்டருக்கு மைலேஜ் வழங்குகின்றன. சிவிடி வேரியண்ட் 19.56 கிமீ வரை மட்டுமே மைலேஜை வழங்குகின்றது.

2022 பலேனோ காரின் ஆச்சரியமளிக்கும் மைலேஜ் திறன்... அடேங்கப்பா இவ்ளோ தருதா!

சில ஏற்ற தாழ்வான மைலேஜ் திறனை புதிய பலேனோ பெற்றிருக்கின்றது. புதிய பலேனோ காரில் 90 பிஎச்பி பவரை வெளியேற்றக் கூடிய 1.2 லிட்டர் ட்யூவல் ஜெட் கே12என் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும்.

2022 பலேனோ காரின் ஆச்சரியமளிக்கும் மைலேஜ் திறன்... அடேங்கப்பா இவ்ளோ தருதா!

இத்துடன், இந்த எஞ்ஜினில் 12 வோல்ட் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு பதிலாக எஞ்ஜின் ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது எரிபொருள் சிக்கனத்தை வழங்க உதவும். 12 வோல்ட் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் நீக்கப்பட்ட காரணத்தினாலேயே விற்பனையில் இருக்கும் பலேனோவிற்கும், புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் பலேனோவிற்கும் இடையில் ஏற்றத் தாழ்வான மைலேஜ் வித்தியாசம் நிலவுகின்றது.

2022 பலேனோ காரின் ஆச்சரியமளிக்கும் மைலேஜ் திறன்... அடேங்கப்பா இவ்ளோ தருதா!

அதேவேலையில் வேறு நிறுவனங்களின் போட்டி தயாரிப்புகள் வழங்கும் மைலேஜைக் காட்டிலும் இது அதிக மைலேஜ் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. புதிய பலேனோவிற்கு போட்டியாக சந்தையில் ஹூண்டாய் ஐ20, டாடா அல்ட்ராஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகிய பிரீமியம் தர கார்கள் விற்பனையில் இருக்கின்றன.

2022 பலேனோ காரின் ஆச்சரியமளிக்கும் மைலேஜ் திறன்... அடேங்கப்பா இவ்ளோ தருதா!

இவை அனைத்தைக் காட்டிலும் அதிக மைலேஜை வழங்கக் கூடிய பிரீமியம் தர ஹேட்ச்பேக்காக பலேனோவே இருக்கின்றது. இதுகுறித்த தகவலை பட்டியலாகக் கீழே பார்க்கலாம்.

புதிய பலேனோ vs போட்டி கார்கள்
Fuel Efficiency (ARAi) New Baleno Hyundai i20 (NA/Turbo) Tata Altroz (NA/Turbo) VW Polo TSI Honda Jazz
Manual 22.34 kmpl 20.35 / 20.25 kmpl 19.05 / 18.13 kmpl 18.24 kmpl 16.6 kmpl
Automatic 22.94 kmpl 19.65 / 20.25 kmpl - 16.47 kmpl 17.1 kmpl
2022 பலேனோ காரின் ஆச்சரியமளிக்கும் மைலேஜ் திறன்... அடேங்கப்பா இவ்ளோ தருதா!

மாருதி சுசுகி நிறுவனம் புதிய 2022 பலேனோ காருக்கு ரூ. 6.35 லட்சம் விலையை நிர்ணயித்துள்ளது. இதன் உயர்நிலை தேர்வு ரூ. 9.49 லட்சம் விலையில் விற்கப்படும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்காருக்கு ஏற்கனவே மாருதி நிறுவனம் புக்கிங் பணிகளை தொடங்கிவிட்டது. ரூ. 11 ஆயிரம் முன் தொகையில் இந்த பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2022 பலேனோ காரின் ஆச்சரியமளிக்கும் மைலேஜ் திறன்... அடேங்கப்பா இவ்ளோ தருதா!

அதேநேரத்தில் ஏற்கனவே இந்த காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய (பிப்ரவரி 23) தேதி நிலவரப்படி இக்காருக்கு 25 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 பலேனோ காரின் ஆச்சரியமளிக்கும் மைலேஜ் திறன்... அடேங்கப்பா இவ்ளோ தருதா!

உண்மையில் இது மிக சிறப்பான வரவேற்பாகும். இது போட்டி நிறுவனங்களின் போட்டி மாடல்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் 2022 பலேனோவை ரூ. 13,999 என்ற மாத சந்தாக் கட்டணத்திலும் இக்காரை வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 24, 2022, 18:44 [IST]
English summary
Maruti suzuki baleno fuel efficiency details revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+