நம்ம நாட்டுல இப்படி ஒரு காரா! மாருதியின் ரகசிய திட்டம் வெளியே கசிந்தது! போட்டி நிறுவனங்களை காலி பண்ண போறாங்க!

மாருதி நிறுவனத்தின் ரகசிய திட்டம் தொடர்பாக வெளிவந்துள்ள தகவல்கள், போட்டி நிறுவனங்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளன.

நம்ம நாட்டுல இப்படி ஒரு காரா! மாருதியின் ரகசிய திட்டம் வெளியே கசிந்தது! போட்டி நிறுவனங்களை காலி பண்ண போறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 போன்ற கார்களுடன், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா போட்டியிட்டு வருகிறது.

நம்ம நாட்டுல இப்படி ஒரு காரா! மாருதியின் ரகசிய திட்டம் வெளியே கசிந்தது! போட்டி நிறுவனங்களை காலி பண்ண போறாங்க!

இந்த செக்மெண்ட்டில் சமீப காலமாக டாடா நெக்ஸான் காரின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதை சமாளிக்கும் வகையில், பிரெஸ்ஸா காரின் அப்டேட் செய்யப்பட்ட 2022 மாடலை கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பழைய மாடலுடன் ஒப்பிடும்போது, புதிய மாடல் பல்வேறு விதங்களிலும் மெருகேற்றப்பட்டுள்ளது.

நம்ம நாட்டுல இப்படி ஒரு காரா! மாருதியின் ரகசிய திட்டம் வெளியே கசிந்தது! போட்டி நிறுவனங்களை காலி பண்ண போறாங்க!

2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில், எலெக்ட்ரிக் சன்ரூஃப், அப்டேட் செய்யப்பட்ட எம்ஐடி டிஸ்ப்ளே, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் உடன் 9.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, கனெக்டட் கார் தொழில்நுட்பம், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ரியர் ஏசி வெண்ட்கள் என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

நம்ம நாட்டுல இப்படி ஒரு காரா! மாருதியின் ரகசிய திட்டம் வெளியே கசிந்தது! போட்டி நிறுவனங்களை காலி பண்ண போறாங்க!

அத்துடன் பாதுகாப்பிலும் 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் தலைசிறந்து விளங்குகிறது. 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், 360 டிகிரி கேமரா மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் போன்ற வசதிகள் இந்த புதிய மாடலில் வழங்கப்பட்டிருப்பதுதான் இதற்கு காரணம். அத்துடன் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.

நம்ம நாட்டுல இப்படி ஒரு காரா! மாருதியின் ரகசிய திட்டம் வெளியே கசிந்தது! போட்டி நிறுவனங்களை காலி பண்ண போறாங்க!

சௌகரியமான பயணத்திற்கு தேவையான வசதிகள், பாதுகாப்பு வசதிகள், டிசைன், சரியான விலை மற்றும் மைலேஜ் என அனைத்து அம்சங்களிலும் 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் தலைசிறந்து விளங்குவதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே டாடா நெக்ஸான் காருக்கு புதிய பிரெஸ்ஸா கார் கடுமையான போட்டியை வழங்க தொடங்கியுள்ளது.

நம்ம நாட்டுல இப்படி ஒரு காரா! மாருதியின் ரகசிய திட்டம் வெளியே கசிந்தது! போட்டி நிறுவனங்களை காலி பண்ண போறாங்க!

இந்த சூழலில், டாடா நெக்ஸான் உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு மற்றொரு வகையிலும் செக் வைக்க மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சிஎன்ஜி கார் சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த ஆதிக்கத்தை அதிகரித்து கொள்வதற்காக அதிரடியான காரியம் ஒன்றை மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் செய்யவுள்ளது.

நம்ம நாட்டுல இப்படி ஒரு காரா! மாருதியின் ரகசிய திட்டம் வெளியே கசிந்தது! போட்டி நிறுவனங்களை காலி பண்ண போறாங்க!

மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்கனவே தனது பல்வேறு கார்களில் சிஎன்ஜி ஆப்ஷனை வழங்கி வருகிறது. இந்த வரிசையில், பிரெஸ்ஸா காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம்ம நாட்டுல இப்படி ஒரு காரா! மாருதியின் ரகசிய திட்டம் வெளியே கசிந்தது! போட்டி நிறுவனங்களை காலி பண்ண போறாங்க!

இங்கே குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இது நடக்கும்பட்சத்தில், புதிய மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் 2 மிகப்பெரிய பெருமைகளை தன்வசப்படுத்தும்.

நம்ம நாட்டுல இப்படி ஒரு காரா! மாருதியின் ரகசிய திட்டம் வெளியே கசிந்தது! போட்டி நிறுவனங்களை காலி பண்ண போறாங்க!

இந்தியாவின் முதல் சிஎன்ஜி எஸ்யூவி கார் மற்றும் இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி கார் ஆகிய இரண்டும்தான் அந்த பெருமைகள். இந்தியாவில் தற்போதைய நிலையில் எந்தவொரு எஸ்யூவி காரிலும் சிஎன்ஜி ஆப்ஷன் கிடையாது. அதேபோன்று இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எந்தவொரு சிஎன்ஜி காரிலும் தற்போதைய நிலையில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் இல்லை.

நம்ம நாட்டுல இப்படி ஒரு காரா! மாருதியின் ரகசிய திட்டம் வெளியே கசிந்தது! போட்டி நிறுவனங்களை காலி பண்ண போறாங்க!

எனவே மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஎன்ஜி வெர்ஷனின் அறிமுகத்திற்கு பின், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் விற்பனை மேலும் உயரலாம்.

நம்ம நாட்டுல இப்படி ஒரு காரா! மாருதியின் ரகசிய திட்டம் வெளியே கசிந்தது! போட்டி நிறுவனங்களை காலி பண்ண போறாங்க!

இது டாடா நெக்ஸான் போன்ற முக்கியமான போட்டியாளர்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி எர்டிகா சிஎன்ஜி காரில் பொருத்தப்பட்டுள்ள அதே 1.5 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் ஆப்ஷன்தான், புதிய மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்ம நாட்டுல இப்படி ஒரு காரா! மாருதியின் ரகசிய திட்டம் வெளியே கசிந்தது! போட்டி நிறுவனங்களை காலி பண்ண போறாங்க!

ஆனால் மாருதி சுஸுகி எர்டிகா சிஎன்ஜி காரை காட்டிலும், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி காரில் இந்த இன்ஜின் அதிக மைலேஜை வழங்க கூடியதாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருக்க கூடிய காரணத்தால், சிஎன்ஜி கார்களுக்கு தற்போது உற்சாகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

நம்ம நாட்டுல இப்படி ஒரு காரா! மாருதியின் ரகசிய திட்டம் வெளியே கசிந்தது! போட்டி நிறுவனங்களை காலி பண்ண போறாங்க!

எனவேதான் மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு புதிய சிஎன்ஜி கார்களை அறிமுகம் செய்து வருகிறது. வெகு சமீபத்தில் ஸ்விஃப்ட் மற்றும் செலிரியோ ஆகிய கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த வரிசையில் வரவுள்ள பிரெஸ்ஸா சிஎன்ஜி காரும் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 26, 2022, 17:40 [IST]
English summary
Maruti suzuki brezza cng india launch details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+