முதல் நாளிலேயே 4,500 புக்கிங்... போட்டியாளர்களை இப்பவே நடுங்க வைக்கும் புதிய மாருதி ப்ரெஸ்ஸா!

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய ப்ரெஸ்ஸா (Maruti Suzuki Brezza)-விற்கு புக்கிங் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 4,500 புக்கிங்குகள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

முதல் நாளிலேயே 4,500 புக்கிங்... போட்டியாளர்களை இப்பவே நடுங்க வைக்கும் புதிய மாருதி ப்ரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் ஹெவி போட்டி!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் அதன் புதிய தலைமுறை விட்டாரா ப்ரெஸ்ஸா (Vitara Brezza) -வை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஸ்டைல், சிறப்பம் மற்றும் தொழில்நுட்பம் என பலவற்றில் மாற்றங்களைப் பெற்ற நிலையில் இக்கார் உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் நாளிலேயே 4,500 புக்கிங்... போட்டியாளர்களை இப்பவே நடுங்க வைக்கும் புதிய மாருதி ப்ரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் ஹெவி போட்டி!

இதேபோல் விட்டாரா ப்ரெஸ்ஸா பெயருக்கு பதிலாக ப்ரெஸ்ஸா (Brezza) என்கிற பெயரில் மட்டுமே அது விற்பனைக்கு வர இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சூப்பரான வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் காரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள்குறித்து தகவல்கள் இன்னும் கூடுதலான ஈர்ப்பை பெறும் வகையில் அமைந்துள்ளது.

முதல் நாளிலேயே 4,500 புக்கிங்... போட்டியாளர்களை இப்பவே நடுங்க வைக்கும் புதிய மாருதி ப்ரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் ஹெவி போட்டி!

இந்த நிலையிலேயே, ஏற்கனவே இக்கார் பலரின் வரவேற்பை பெறத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய தலைமுறை ப்ரெஸ்ஸா இந்தியர்கள் மத்தியில் இப்போதே புக்கிங்குகளை வாரி சுருட்ட ஆரம்பித்திருப்பதாகவே அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் நாளிலேயே 4,500 புக்கிங்... போட்டியாளர்களை இப்பவே நடுங்க வைக்கும் புதிய மாருதி ப்ரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் ஹெவி போட்டி!

சமீபத்தில் டைம்ஸ் டிரைவ் தளத்திற்கு பேட்டியளித்த மாருதி சுஸுகி நிறுவனத்தின் முக்கிய அதிகாரியான சஷாங்க் ஸ்ரீவஸ்தவா, மாருதி ப்ரெஸ்ஸாவிற்கு முன் பதிவு பணிகள் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 4,500 பேர் புக் செய்திருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவலை தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை (ஜூன் 20) அன்றே இக்காருக்கான புக்கிங் பணிகள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் தொடங்கின.

முதல் நாளிலேயே 4,500 புக்கிங்... போட்டியாளர்களை இப்பவே நடுங்க வைக்கும் புதிய மாருதி ப்ரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் ஹெவி போட்டி!

அதேநேரத்தில் சில மாருதி கார் விற்பனையாளர்கள் இக்காருக்கான புக்கிங் பணிகளை மே 30ம் தேதியில் இருந்தே தொடங்கிவிட்டனர். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே அதிகாரப்பூர்வமாக புக்கிங் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே மாருதி சுஸுகி ப்ரெஸ்ஸாவிற்கு 4,500 புக்கிங்குகள் குவிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் நாளிலேயே 4,500 புக்கிங்... போட்டியாளர்களை இப்பவே நடுங்க வைக்கும் புதிய மாருதி ப்ரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் ஹெவி போட்டி!

இதுமட்டுமின்றி, ஏற்கனவே இக்கார் மாடலுக்கு 20 ஆயிரம் புக்கிங்குகள் நிலுவையில் இருப்பதாகவும் சஷாங்க் தெரிவித்துள்ளார். இந்த நிலையிலேயே கூடுதலாக புதிய தலைமுறைக்கு 4,500 புக்கிங்குகள் கிடைத்துள்ளன. ஆகையால், தற்போதே ப்ரெஸ்ஸாவிற்கு காத்திருப்பு காலம் இரண்டு மாதங்களாக அதிகரித்திருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி மாருதி சுஸுகி நிறுவனம் இக்காரை மாதத்திற்கு 10 ஆயிரம் யூனிட்டுகள் வீதம் உற்பத்தி செய்து டெலிவரிக்காக வெளியேற்றிக் கொண்டிருக்கின்றது.

முதல் நாளிலேயே 4,500 புக்கிங்... போட்டியாளர்களை இப்பவே நடுங்க வைக்கும் புதிய மாருதி ப்ரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் ஹெவி போட்டி!

புதிய தலைமுறை ப்ரெஸ்ஸாவிற்கு ரூ. 11 ஆயிரம் முன் தொகையில் புக்கிங் ஏற்கப்பட்டு வருகின்றது. அரேனா ஷோரூம் மற்றும் ஆன்லைன் வாயிலாக காருக்கான முன்பதிவு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இக்காரின் அதிகாரப்பூர்வ வருகை வரும் ஜூன் 30ம் தேதி அரங்கேற இருக்கின்றது.

முதல் நாளிலேயே 4,500 புக்கிங்... போட்டியாளர்களை இப்பவே நடுங்க வைக்கும் புதிய மாருதி ப்ரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் ஹெவி போட்டி!

புதிய சிறப்பம்சங்கள், அதிக பாதுகாப்பு அம்சங்கள், கேபினில் கூடுதல் சிறப்பு வசதிகள் மற்றும் மாற்றப்பட்ட முன்-பின் பகுதிகள் ஆகியவற்றுடனேயே இக்கார் அறிமுகத்தைப் பெற இருக்கின்றது. ஆனால், எஞ்ஜின் விஷயத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பது தெரிகின்றது. நிறுவனம் கே15பி சீரிஸ் 1.5 லிட்டர் 4 சிலிண்டரை பெட்ரோல் எஞ்ஜினையே பயன்படுத்த இருக்கின்றது.

முதல் நாளிலேயே 4,500 புக்கிங்... போட்டியாளர்களை இப்பவே நடுங்க வைக்கும் புதிய மாருதி ப்ரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் ஹெவி போட்டி!

இந்த மோட்டாரே எக்ஸ்எல்6 எம்பிவி ரக காரில் பயன்படுத்தப்படுகின்றது. 5 ஸ்பீடு மேனுவல் - 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ப்ரெஸ்ஸா தற்போது சந்தையில் ரூ. 7.84 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதைவிட சற்று அதிக விலையில் புதிய தலைமுறை ப்ரெஸ்ஸா விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதல் நாளிலேயே 4,500 புக்கிங்... போட்டியாளர்களை இப்பவே நடுங்க வைக்கும் புதிய மாருதி ப்ரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் ஹெவி போட்டி!

இக்காரின் விலை குறித்த விபரம் அறிமுக நாளின்போதே அறிவிக்கப்பட இருக்கின்றது. புதிய சிறப்பு வசதிகளாக ப்ரெஸ்ஸாவில் ஹெட்ஸ் அப் திரை, எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா என எக்கசக்க அம்சங்கள் இடம் பெற இருப்பதாக கூறப்படுகின்றது.

முதல் நாளிலேயே 4,500 புக்கிங்... போட்டியாளர்களை இப்பவே நடுங்க வைக்கும் புதிய மாருதி ப்ரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் ஹெவி போட்டி!

எனவேதான் இந்த கார் பலரின் கவனத்தை இப்போதே வெகுவாக ஈர்க்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, மாருதி சுஸுகியின் எந்தவொரு தயாரிப்பிலும் இடம் பெறாத எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதி ப்ரெஸ்ஸாவில் வழங்கப்பட்டிருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இளைஞர்கள் மற்றும் வாகன ஆர்வலர்கள் மத்தியில் இந்த அம்சத்திற்கு அதிக வரவேற்புக் கிடைத்து வருவதன் காரணத்தினால் மாருதி சுஸுகி நிறுவனம் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதியை ப்ரெஸ்ஸாவில் வழங்கியிருக்கின்றது.

முதல் நாளிலேயே 4,500 புக்கிங்... போட்டியாளர்களை இப்பவே நடுங்க வைக்கும் புதிய மாருதி ப்ரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் ஹெவி போட்டி!

தொடர்ந்து பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவதற்காக புதிய ப்ரெஸ்ஸாவில் 6 ஏர்பேக்குகள், இஎஸ்பி உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட இருக்கின்றன. இத்தகைய அம்சங்களால் மிக சூப்பரான தயாரிப்பாக மாருதி சுஸுகி ப்ரெஸ்ஸா விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

முதல் நாளிலேயே 4,500 புக்கிங்... போட்டியாளர்களை இப்பவே நடுங்க வைக்கும் புதிய மாருதி ப்ரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் ஹெவி போட்டி!

இந்த கார் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டாடா நெக்ஸான் மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகிய கார் மாடல்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த இருக்கின்றது. குறிப்பாக சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் விற்பனையில் தரமான சம்பவத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் டாடா நெக்ஸானுக்கு இது கூடுதல் டஃப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதல் நாளிலேயே 4,500 புக்கிங்... போட்டியாளர்களை இப்பவே நடுங்க வைக்கும் புதிய மாருதி ப்ரெஸ்ஸா... டாடா நெக்ஸானின் ஹெவி போட்டி!

இந்த காருக்கு ஆட்டாம் காட்ட வேண்டும் என்பதற்காகவே சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட வென்யூ காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இத்துடனேயே தற்போது மாருதி சுஸுகியும் கைகோர்த்திருக்கின்றது. ஆகையால், நிச்சயம் இந்த நிறுவனங்களின் செயல்கள் நெக்ஸானுக்கு தலை வலியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Maruti suzuki brezza received 4500 bookings on 1st day
Story first published: Wednesday, June 22, 2022, 13:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X