வெறும் 2 ஆண்டுகளில் 70லட்ச வாடிக்கையாளர்கள்... ‘ரீவார்ட்ஸ் பிரோகிராம்’-இன் 2ஆம் ஆண்டை கொண்டாடும் மாருதி சுஸுகி

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி 'மாருதி சுஸுகி வெகுமதிகள்' (Maruti Suzuki Rewards) என்ற பெயரிலான அதன் விரிவான & நேர்த்தியான லாயலிட்டி பிரோகிராமின் 2ஆம் ஆண்டு நிறைவை விமர்சையாக கொண்டாடி வருகிறது.

வெறும் 2 ஆண்டுகளில் 70லட்ச வாடிக்கையாளர்கள்... ‘ரீவார்ட்ஸ் பிரோகிராம்’-இன் 2ஆம் ஆண்டை கொண்டாடும் மாருதி சுஸுகி

மாருதி சுஸுகியின் இந்த லாயலிட்டி பிரோகிராம் ஆனது வாடிக்கையாளர்களை சிறந்த சேவை உடன் தொடர்ந்து நெருங்கிய பிணைப்பில் வைத்திருக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து கிடைத்த நல்ல வரவேற்பால் தற்போது 2 ஆண்டுகளை மாருதி சுஸுகியால் நிறைவு செய்ய முடிந்துள்ளது.

வெறும் 2 ஆண்டுகளில் 70லட்ச வாடிக்கையாளர்கள்... ‘ரீவார்ட்ஸ் பிரோகிராம்’-இன் 2ஆம் ஆண்டை கொண்டாடும் மாருதி சுஸுகி

இந்த பிரோகிராமின் மூலம் கிடைக்க பெறும் சலுகைகளை பெற வேண்டுமென்றால், ஏற்கனவே மாருதி சுஸுகி வாடிக்கையாளராக இருக்கும் நீங்கள் மாருதி சுஸுகி கார்கள், சேவை, இன்ஸ்சூரன்ஸ், ஆக்ஸஸரீஸ், வாடிக்கையாளர் பரிந்துரைகள் மற்றும் மற்ற சில கூட்டமைப்பு சலுகைகளை கூடுதலாக வாங்க வேண்டும்.

வெறும் 2 ஆண்டுகளில் 70லட்ச வாடிக்கையாளர்கள்... ‘ரீவார்ட்ஸ் பிரோகிராம்’-இன் 2ஆம் ஆண்டை கொண்டாடும் மாருதி சுஸுகி

ஏற்கனவே கூறியதுபோல், இந்த பிரோகிராமின் மூலம் வாடிக்கையாளர்களுடனான பிணைப்பை மேலும் மாருதி சுஸுகி வலுப்படுத்தி கொண்டுள்ளது மட்டுமில்லாமல், வாடிக்கையாளர்களுடனான நட்புறவை கொண்டாடும் விதமாகவும் பயன்படுத்தி கொண்டுள்ளது. மாருதி சுஸுகி பிராண்டை மீண்டும் நம்பி சென்றவர்கள் இந்த பிரோகிராமின் மூலம் சலுகைகளை கண்டுள்ளனர்.

வெறும் 2 ஆண்டுகளில் 70லட்ச வாடிக்கையாளர்கள்... ‘ரீவார்ட்ஸ் பிரோகிராம்’-இன் 2ஆம் ஆண்டை கொண்டாடும் மாருதி சுஸுகி

மேலும், இந்த பிரோகிராம் ஆனது வாடிக்கையாளர்களுக்கு அதிகப்பட்ச மதிப்பெண்களுடன் வாழ்நாள் முழுவதற்குமான உறுப்பினர் தகுதியை வழங்குகிறது. இதில், அதிகப்பட்ச மதிப்பெண்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு செல்லுப்படியாகும். உறுப்பினர், சில்வர், கோல்டு மற்றும் பிளாட்டினம் என மொத்தம் 4 வகைக்களாக இந்த வெகுமதிகள் பிரோகிராம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வெறும் 2 ஆண்டுகளில் 70லட்ச வாடிக்கையாளர்கள்... ‘ரீவார்ட்ஸ் பிரோகிராம்’-இன் 2ஆம் ஆண்டை கொண்டாடும் மாருதி சுஸுகி

மாருதி சுஸுகியின் விற்பனை & சேவை டீலர்ஷிப் மையங்கள் மற்றும் இணையத்தளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. எந்தவொரு அட்டை வழங்கலும் இன்றி இந்த லாயலிட்டி பிரோகிராம் முழுக்க முழுக்க இணைய வாயிலாக செயல்படுகிறது.

வெறும் 2 ஆண்டுகளில் 70லட்ச வாடிக்கையாளர்கள்... ‘ரீவார்ட்ஸ் பிரோகிராம்’-இன் 2ஆம் ஆண்டை கொண்டாடும் மாருதி சுஸுகி

அதாவது, தகவல்கள் மற்றும் பரிவர்த்தனைகள் அறிவிப்புகள் அனைத்தும் வாடிக்கையாளர் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு நேரடியாக அனுப்பப்படுகிறது. மாருதி சுஸுகியின் வெகுமதிகள் பிரோகிராமை வாடிக்கையாளர்கள் மாருதி சுஸுகி மொபைல் செயலி வாயிலாகவும், மாருதி சுஸுகி வெகுமதிகள் பிரத்யேக இணையத்தள பக்கத்தின் வாயிலாகவும் பயன்படுத்தலாம்.

வெறும் 2 ஆண்டுகளில் 70லட்ச வாடிக்கையாளர்கள்... ‘ரீவார்ட்ஸ் பிரோகிராம்’-இன் 2ஆம் ஆண்டை கொண்டாடும் மாருதி சுஸுகி

இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தாவா கூறுகையில், "7 மில்லியனுக்கும் அதிகமான ‘மாருதி சுஸுகி வெகுமதிகள்' வாடிக்கையாளர்களை கொண்ட எங்கள் குடும்பத்துடன் மாருதி சுஸுகி வெகுமதிகள் பிரோகிராம்-இன் 2ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.

வெறும் 2 ஆண்டுகளில் 70லட்ச வாடிக்கையாளர்கள்... ‘ரீவார்ட்ஸ் பிரோகிராம்’-இன் 2ஆம் ஆண்டை கொண்டாடும் மாருதி சுஸுகி

இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் மீதுள்ள நம்பிக்கைக்கும், அவர்களுடனான எங்களின் பிரிக்க முடியாத பந்தத்துக்கும் பொருத்தமான சான்றாகும். இந்த திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மாருதி சுஸுகியின் வெகுமதிகள் திட்டம் ஆனது 4-சக்கர பயணிகள் வாகன துறையில் இந்தியாவின் முதன்மையான & அதிக வெகுமதி அளிக்கும் விசுவாசத் திட்டங்களில் ஒன்று என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

வெறும் 2 ஆண்டுகளில் 70லட்ச வாடிக்கையாளர்கள்... ‘ரீவார்ட்ஸ் பிரோகிராம்’-இன் 2ஆம் ஆண்டை கொண்டாடும் மாருதி சுஸுகி

இங்கு வாடிக்கையாளர்கள் பரவலான பலன்களை அனுபவிக்கின்றனர். மாருதி சுஸுகி வெகுமதிகள் திட்டம் என்பது கார்டு-இல்லாத & நகரம் அடிப்படையிலான லாயல்டி திட்டமாகும். இந்த திட்டம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக சிறந்த பலன்களை வழங்குகிறது. மேலும் அவர்களின் கார் வாங்கும் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதிலும், அவர்களது அனைத்து விற்பனை தேவைகளையும் பூர்த்தி செய்கிறோம் என்பதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 3, 2022, 20:12 [IST]
English summary
Maruti suzuki celebrates 2 years of reward program read to find more details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+