ரொம்ப அதிக நாட்கள் இல்ல... சிஎன்ஜியால் இயங்கும் செலிரியோ அறிமுகம் எப்போது?.. பெட்ரோலாலையும் இது ஓடும்!

சிஎன்ஜியால் இயங்கும் வசதிக் கொண்ட மாருதி சுசுகி செலிரியோ (Maruti Suzuki Celerio)-வின் அறிமுகம் எப்போது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரொம்ப அதிக நாட்கள் இல்ல... சிஎன்ஜியால் இயங்கும் செலிரியோ அறிமுகம் எப்போது?.. பெட்ரோலாலையும் இது ஓடும்...

மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் கடந்த ஆண்டின் இறுதியில் அதன் புதிய தலைமுறை செலிரியோ (Celerio) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மிகவும் அதிக மைலேஜை வழங்கும் ஓர் வாகனமாக இது இருக்கின்றது. இந்த கார் தற்போது பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ரொம்ப அதிக நாட்கள் இல்ல... சிஎன்ஜியால் இயங்கும் செலிரியோ அறிமுகம் எப்போது?.. பெட்ரோலாலையும் இது ஓடும்...

ஆனால், இந்த நிலை விரைவில் மாற இருக்கின்றது. அதாவது, மாருதி சுசுகி நிறுவனம் மிக விரைவில் சிஎன்ஜி தேர்விலும் செலிரியோவை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதன் அறிமுகம் எப்போது என்கிற தகவலே தற்போது வெளியாகியிருக்கின்றது. இதுகுறித்து ஆட்டோ இடி வெளியிட்டிருக்கும் செய்தியில், சிஎன்ஜி செலிரியோ வரும் 20ம் தேதி அறிமுகமாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

ரொம்ப அதிக நாட்கள் இல்ல... சிஎன்ஜியால் இயங்கும் செலிரியோ அறிமுகம் எப்போது?.. பெட்ரோலாலையும் இது ஓடும்...

சிஎன்ஜி கருவியான ஃபேக்டரிலியே ஃபிட் செய்யப்பட்ட அம்சமாக செலிரியோவில் இடம் பெற இருக்கின்றது. இந்த மாதிரியான வசதிக் கொண்ட சிஎன்ஜி கார்களை மாருதி சுசுகி நிறுவனம் எஸ்-சிஎன்ஜி எனும் தேர்வில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. வேகன்ஆர், ஆல்டோ 800 உள்ளிட்ட கார் மாடல்களை நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

ரொம்ப அதிக நாட்கள் இல்ல... சிஎன்ஜியால் இயங்கும் செலிரியோ அறிமுகம் எப்போது?.. பெட்ரோலாலையும் இது ஓடும்...

Source: ET Auto

இவற்றின் வரிசையிலேயே மிக விரைவில் செலிரியோ சிஎன்ஜியும் இணைய இருக்கின்றது. சிஎன்ஜி தேர்விலான செலிரியோ ஒரு கிலோவிற்கு 30 கிமீ வரை மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிஎன்ஜி தேர்வில் கிடைத்த முந்தைய தலைமுறை செலிரியோ அதிகபட்சமாக 3.47 கிமீ மைலேஜ் தந்தது குறிப்பிடத்தகுந்தது.

ரொம்ப அதிக நாட்கள் இல்ல... சிஎன்ஜியால் இயங்கும் செலிரியோ அறிமுகம் எப்போது?.. பெட்ரோலாலையும் இது ஓடும்...

ஏற்கனவே இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் காராக செலிரியோ இருக்கின்றது. அது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 26.68 கிமீ மைலேஜ் தருகின்றது. இதை மேலும் சிறப்பான மைலேஜ் தரும் வாகனமாக சிஎன்ஜி தேர்வு மாற்ற இருக்கின்றது. சிஎன்ஜி செலிரியோவின் வருகை குறித்து நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி சிவி ராமன் கருத்து தெரிவித்திருக்கின்றார்.

ரொம்ப அதிக நாட்கள் இல்ல... சிஎன்ஜியால் இயங்கும் செலிரியோ அறிமுகம் எப்போது?.. பெட்ரோலாலையும் இது ஓடும்...

அவர் கூறியதாவது, "கே10சி எஞ்ஜினே சிஎன்ஜியால் இயங்கும் மோட்டாராக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த எஞ்ஜின் சிஎன்ஜி மட்டுமின்றி பெட்ரோலாலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும். இதற்காக பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜெக்டர்கள் இதில் பயன்படுத்தப்பட இருக்கின்றது" என்றார்.

ரொம்ப அதிக நாட்கள் இல்ல... சிஎன்ஜியால் இயங்கும் செலிரியோ அறிமுகம் எப்போது?.. பெட்ரோலாலையும் இது ஓடும்...

தொடர்ந்து பேசிய அவர், செலிரியோவில் ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம் வழங்கப்படும். இது எஞ்ஜினை தானாகவே ஆன் மற்றும் ஆஃப் செய்ய உதவும். இதன் வாயிலாக தேவையற்றை எரிபொருள் விரையத்தைக் குறைக்க முடியும். குறிப்பாக, ஓட்டுநர் சிக்னலின்போது க்ளட்சை அழுத்தினால் தானாக இது இயங்கும். ஆகையால், பல மடங்கு எரிபொருளை சிக்கனம் செய்ய முடியும்" என கூறினார்.

ரொம்ப அதிக நாட்கள் இல்ல... சிஎன்ஜியால் இயங்கும் செலிரியோ அறிமுகம் எப்போது?.. பெட்ரோலாலையும் இது ஓடும்...

தற்போது செலிரியோ காரில் பயன்படுத்தப்பட்டு வரும் கே10சி எஞ்ஜின் அதிக பவர்ஃபுல்லானது. இது அதிகபட்சமாக 68 பிஎச்பி மற்றும் 89 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதில், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகின்றது. இதன் சிஎன்ஜி தேர்வில் 5 ஸ்பீடு ஏஎம்டி தேர்வு மட்டுமே வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரொம்ப அதிக நாட்கள் இல்ல... சிஎன்ஜியால் இயங்கும் செலிரியோ அறிமுகம் எப்போது?.. பெட்ரோலாலையும் இது ஓடும்...

புதிய தலைமுறை மாருதி சுசுகி செலிரியோ ரூ. 4.99 லட்சம் தொடங்கி ரூ. 6.94 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதைக் காட்டிலும் ரூ. 60 ஆயிரம் அல்லது ரூ. 80 ஆயிரம் வரை அதிக விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

ரொம்ப அதிக நாட்கள் இல்ல... சிஎன்ஜியால் இயங்கும் செலிரியோ அறிமுகம் எப்போது?.. பெட்ரோலாலையும் இது ஓடும்...

தற்போது செலிரியோ எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ-ப்ளஸ் ஆகிய தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில், விஎக்ஸ்ஐ தேர்விலேயே சிஎன்ஜி வசதி எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகை மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டாடா டியாகோ சிஎன்ஜி, ஹூண்டாய் சேன்ட்ரோ, கிராண்ட் ஐ10 நியாஸ், ரெனால்ட் க்விட் மற்றும் டட்சன் கோ ஆகிய கார் போட்டியாக அமைய இருக்கின்றது.

Most Read Articles
English summary
Maruti suzuki celerio cng launch timeline leaked here is full details
Story first published: Thursday, January 6, 2022, 13:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X