மிக அமோக வரவேற்பில் செலிரியோ... புதிய ஜெனரேஷனுக்கு இப்படி ஒரு வரவேற்பா! மக்கள் குவிஞ்சிட்டு இருக்காங்க!
புதிய ஜெனரேஷன் செலிரியோ (Maruti Celerio)-விற்கு மிக அமோகமான வரவேற்பு இந்தியாவில் குவிந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

மாருதி சுசுகி நிறுவனம் மிக சமீபத்தில் புதிய தலைமுறை செலிரியோ (Maruti Celerio) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு தற்போது இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விற்பனைக்கு வந்து சில மாதங்களே ஆகின்ற நிலையில் 60 சதவீதம் விற்பனை வளர்ச்சியை கடந்த பிப்ரவரி மாதத்தில் அக்கார் பெற்றிருக்கின்றது.

இதற்கு பழைய தலைமுறையைக் காட்டிலும் மிக சிறப்பான உபகரணங்கள், திறன் வாய்ந்த எஞ்ஜின் மற்றும் முற்றிலும் மாறுபட்ட டிசைன் உள்ளிட்டவற்றை புதிய தலைமுறை செலிரியேக் கொண்டிருப்பதே காரணமாக அமைந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி புதிய தலைமுறை செலிரியோ அதிக மைலேஜை தரும் காராகவும் இருக்கின்றது.

லிட்டர் ஒன்றிற்கு செலிரியோவின் தானியங்கி வேரியண்ட் 26 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்குகின்றது. இதுபோன்று பன்முக வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இக்காரை வாங்குவோரின் எண்ணிக்கை உயர்ந்திருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், முந்தைய தலைமுறை செலிரியோவிற்குக் கிடைத்ததைக் காட்டிலும் மிக மிக சிறப்பான வரவேற்பு புதிய தலைமுறைக்குக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது.

கடந்த மாதம் மட்டும் இந்தியாவில் 9,896 செலிரியோ ஹேட்ச்பேக் கார்கள் இந்தியாவில் விற்பனையாகி இருக்கின்றன. இதே பிப்ரவரி மாதம் 2021ம் ஆண்டில் பழைய தலைமுறை செலிரியோ 6,214 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இதைக் காட்டிலும் 59.25 சதவீதம் அதிக வளர்ச்சியை புதிய தலைமுறை செலிரியோ பெற்றிருப்பது.

இதன் வாயிலாகவே இந்தியர்கள் மத்தியில் பழைய செலிரியோவைக் காட்டிலும் புதிய செலிரியோவிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைப்பது உறுதியாகியுள்ளது. மாருதி சுசுகி செலிரியோ பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதன் பெட்ரோல் வெர்ஷனில் 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பயர்டு இன்லைன்-3 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 66 பிஎஸ் பவர் மற்றும் 89 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி தேர்வு வழங்கப்படுகின்றது.

சிஎன்ஜி தேர்வானது செலிரியோவின் விஎக்ஸ்ஐ எனும் ட்ரிம்மிலேயே வழங்கப்படுகின்றது. பெட்ரோல் வெர்ஷனில் பயன்படுத்தப்பட்டுள்ள மோட்டாரே சில மாற்றங்களுடன் சிஎன்ஜி கிட்டுடன் இந்த வெர்ஷனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 56.7 பிஎஸ் மற்றும் 82.1 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

பெட்ரோல் வெர்ஷன் அதிகபட்சமாக 26.68 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி வெர்ஷன் அதிகபட்சமாக 35.60 கிமீ மைலேஜையும் வழங்கும். இத்தகைய அதிகபட்ச மைலேஜ் திறனினால் இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் காராக செலிரியோ மாறியிருக்கின்றது. மாருதி சுசுகி செலிரியோ இந்தியாவில் ரூ. 5.15 லட்சம் தொடங்கி ரூ. 6.94 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இதன் சிஎன்ஜி வெர்ஷன் ரூ. 6.58 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








