குறைவான விலை! மாருதி களமிறக்கிய புதிய காருக்கு செம டிமாண்ட்! எவ்ளோ மைலேஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மைலேஜை வாரி வழங்கும் காரை மாருதி சுஸுகி நிறுவனம் குறைவான விலையில் அறிமுகம் செய்ததால், விற்பனை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குறைவான விலை! மாருதி களமிறக்கிய புதிய காருக்கு செம டிமாண்ட்! எவ்ளோ மைலேஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 6,442 செலிரியோ (Maruti Suzuki Celerio) கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 36.48 சதவீத வளர்ச்சியாகும். ஏனெனில் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 4,720 செலிரியோ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

குறைவான விலை! மாருதி களமிறக்கிய புதிய காருக்கு செம டிமாண்ட்! எவ்ளோ மைலேஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

தற்போதைய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ கார் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய தலைமுறை மாடலின் வருகையே, விற்பனையில் ஏற்பட்டுள்ள இந்த சிறப்பான வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. முந்தைய தலைமுறை மாடலை காட்டிலும், புதிய தலைமுறை மாடல் விற்பனையில் தலைசிறந்து விளங்குகிறது.

குறைவான விலை! மாருதி களமிறக்கிய புதிய காருக்கு செம டிமாண்ட்! எவ்ளோ மைலேஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

முந்தைய தலைமுறை மாடலை காட்டிலும், புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ காரின் டிசைன் அட்டகாசமாக உள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் மைலேஜ் விஷயத்திலும், புதிய தலைமுறை மாருதி சுஸுகி செலிரியோ தலைசிறந்து விளங்குகிறது. அத்துடன் கேபின் இடவசதி, வசதிகள் ஆகிய அம்சங்களிலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது.

குறைவான விலை! மாருதி களமிறக்கிய புதிய காருக்கு செம டிமாண்ட்! எவ்ளோ மைலேஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதன் காரணமாகவே மாருதி சுஸுகி செலிரியோ தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் வேகமாக பிரபலமாகி வருகிறது. மாருதி சுஸுகி செலிரியோ காரில், 1.0 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், இன்லைன்-3 பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 66.6 பிஎஸ் பவரையும், 89 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

குறைவான விலை! மாருதி களமிறக்கிய புதிய காருக்கு செம டிமாண்ட்! எவ்ளோ மைலேஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர மாருதி சுஸுகி செலிரியோ காரில் சிஎன்ஜி தேர்வும் (56.7 பிஎஸ் பவர் மற்றும் 82.1 என்எம் டார்க்) வழங்கப்படுகிறது. ஆனால் சிஎன்ஜி மாடலில், மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது.

குறைவான விலை! மாருதி களமிறக்கிய புதிய காருக்கு செம டிமாண்ட்! எவ்ளோ மைலேஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

செலிரியோ காரின் பெட்ரோல் ஏஎம்டி வேரியண்ட்கள், ஒரு லிட்டருக்கு 26.68 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 26 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் மாருதி சுஸுகி செலிரியோ காரின் சிஎன்ஜி மேனுவல் மாடல் ஒரு கிலோவிற்கு 35.60 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும்.

குறைவான விலை! மாருதி களமிறக்கிய புதிய காருக்கு செம டிமாண்ட்! எவ்ளோ மைலேஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இவை உண்மையிலேயே மிகவும் சிறப்பான மைலேஜ் எண்கள் ஆகும். இந்தியாவில் தற்போது எரிபொருள் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. எனவே வாகனங்கள் வழங்கும் மைலேஜிற்கு, முன்பை காட்டிலும் வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளனர். நீங்கள் மைலேஜிற்கு அதிக முக்கியத்துவம் வழங்குபவர் என்றால், மாருதி சுஸுகி செலிரியோ மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

குறைவான விலை! மாருதி களமிறக்கிய புதிய காருக்கு செம டிமாண்ட்! எவ்ளோ மைலேஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மிகவும் குறைவான விலையில், இயக்குவதற்கு அதிகம் செலவு வைக்காத, அதாவது அதிக மைலேஜை வழங்க கூடிய புதிய காரை தேடி கொண்டிருப்பவர்களுக்கு மாருதி சுஸுகி செலிரியோ நிச்சயம் மிகச்சிறந்த தேர்வு என்பதில் சந்தேகம் இல்லை. மாருதி சுஸுகி செலிரியோ கார் அதிக மைலேஜை வழங்கும் அதே நேரத்தில், குறைவான விலையில் கிடைக்கிறது.

குறைவான விலை! மாருதி களமிறக்கிய புதிய காருக்கு செம டிமாண்ட்! எவ்ளோ மைலேஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

எனவேதான் குறைவான விலையில், அதிக மைலேஜ் வழங்கும் காரை தேடி கொண்டிருப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த தேர்வு என கூறினோம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி செலிரியோ காரின் ஆரம்ப விலை வெறும் 5.15 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 6.94 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

குறைவான விலை! மாருதி களமிறக்கிய புதிய காருக்கு செம டிமாண்ட்! எவ்ளோ மைலேஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்திய சந்தையில் டாடா டியாகோ (Tata Tiago), ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) மற்றும் ஹூண்டாய் சாண்ட்ரோ (Hyundai Santro) உள்ளிட்ட கார்களுடன் மாருதி சுஸுகி செலிரியோ போட்டியிட்டு வருகிறது. அத்துடன் தனது சொந்த உடன்பிறப்புகளான மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon-R) மற்றும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso) ஆகிய கார்களுக்கும் செலிரியோ விற்பனையில் சவால் அளித்து வருகிறது.

குறைவான விலை! மாருதி களமிறக்கிய புதிய காருக்கு செம டிமாண்ட்! எவ்ளோ மைலேஜ் தரும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்ததாக எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய கார்களின் புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இவை இரண்டும் நடப்பு ஏப்ரல் மாதத்திலேயே விற்பனைக்கு வரவுள்ளன. அதை தொடர்ந்து பலேனோ காரின் சிஎன்ஜி மாடல், விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடல் ஆகியவற்றை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 13, 2022, 11:49 [IST]
English summary
Maruti suzuki celerio sales increased by 36 per cent in march 2022 here is the reason why
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+