மாருதியின் எந்த சிஎன்ஜி கார் அதிகம் மைலேஜ் தரும்? அடேயப்பா பெட்ரோல் காரெல்லாம் இதுக்கு முன்னாடி வேஸ்ட் போலையே!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஒன்பது வகையான சிஎன்ஜி கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றில் எந்த மாடல் அதிகம் மைலேஜ் தரும் என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு மிக சூப்பரான டிமாண்ட் நிலவி வருகின்றது. இந்த பிரிவிலும் மாருதி சுஸுகி நிறுவனமே தலைவனைப் போல் செயல்பட்டு வருகின்றது. ஆமாங்க, இந்தியர்கள் அதிகம் மாருதி சுஸுகியின் சிஎன்ஜி கார்களையே அதிகம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழல் நிலவுவதனாலேயே மாருதி சுஸுகி நிறுவனம் இந்த ஆண்டிற்குள் 4 லட்சம் யூனிட் சிஎன்ஜி கார்களை தங்களின் நிறுவனம் விற்பனைச் செய்யும் என உறுதியாக தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் இந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்பவே ஒவ்வொரு மாதமும் மிக அமோகமான விற்பனை வளர்ச்சியை மாருதி சிஎன்ஜி கார்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேவேலையில் நிறுவனமும் தங்களின் சார்பில் பன்முக சிஎன்ஜி கார்களை விற்பனைக்குக் களமிறக்கி வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், நிறுவனம் தற்போதைய நிலவரப்படி ஒன்பது வகையான சிஎன்ஜி கார் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆல்டோ 800, எஸ் பிரஸ்ஸோ,செலிரியோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட், பலினோ, டிசையர், எர்டிகா, எக்ஸ்எல்6 ஆகிய ஒன்பது கார் மாடல்களிலேயே மாருதி சுஸுகி சிஎன்ஜி தேர்வுகளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவற்றில் அதிகம் ரேஞ்ஜ் தரக் கூடியதாக நிறுவனத்தின் செலிரியோ சிஎன்ஜி தேர்வு இருக்கின்றது. இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு அதிகபட்சமாக 35.6 கிமீ மைலேஜை தரும். இதன் விலையும் சற்று குறைவாகவே உள்ளது. ரூ. 6.69 லட்சம் எனும் விலையிலேயே இவ்வாகனம் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. செலிரியோவின் விஎக்ஸ்ஐ எனும் ஒற்றை தேர்வில் மட்டுமே சிஎன்ஜி ஆப்ஷன் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது.

இதற்கு அடுத்தபடியாக அதிக ரேஞ்ஜ் தரும் மாருதி சுஸுகி சிஎன்ஜி காராக வேகன்ஆர் இருக்கின்றது. இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 34.05 கிமீ வரை மைலேஜ் தரும். இரு வேரியண்டுகளில் வேகன்ஆர் சிஎன்ஜி விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆரம்ப விலை தேர்வின் விலை ரூ. 6.42 லட்சம் ஆகும். இந்த காரை அடுத்து நிறுவனத்தின் மூன்றாவது அதிகம் ரேஞ்ஜ் தரும் காராக எஸ்-பிரஸ்ஸோ இருக்கின்றது.

இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 32.73 கிமீ ரேஞ்ஜை வழங்கும். எஸ்-பிரஸ்ஸோ சிஎன்ஜி ரூ. 5.90 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. மாருதி சுஸுகியின் அதிகம் மைலேஜ் தரும் சிஎன்ஜி கார்களின் பட்டியலில் நான்காவது இடத்தை ஆல்டோ 800 பிடித்துள்ளது. இதுவே நிறுவனத்தின் மிக மிக விலைக் குறைவான சிஎன்ஜி காராகும்.

இது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 31.59 கிமீ மைலேஜை வழங்கும். இந்த சூப்பரான மைலேஜை வழங்கும் ஆல்டோ 800 எல்எக்ஸ்ஐ ரூ. 5.03 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காருக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தில் டிசையர் சிஎன்ஜியும், ஆறாவது இடத்தில் ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரும் உள்ளன.

இந்த கார்கள் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 31.12 கிமீ முதல் 30.9 கிமீ மைலேஜையும் வழங்கும். இந்த கார்களுக்கு அடுத்தபடியாக அதிகம் மைலேஜ் தரும் சிஎன்ஜி கார்களின் பட்டியலில் ஏழாவது இடத்தை பலினோவும், எட்டாவது இடத்தை எர்டிகாவும், ஒன்பதாவது இடத்தை எக்ஸ்எல்6 காரும் பிடித்திருக்கின்றது. இந்த கார்கள் 30.61 கிமீ, 26.11 கிமீ மற்றும் 20.97 கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறன் கொண்டவை.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரும்பாலான சிஎன்ஜி கார் மாடல்கள் அதிகம் ரேஞ்ஜ் தரக் கூடியவையாக இருக்கின்றன. இதன் காரணத்தினாலேயே இந்தியர்கள் மத்தியில் நிறுவனத்தின் சிஎன்ஜி வாகன மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மிக துள்ளியமாகக் கூற வேண்டுமானால் 1.14 மில்லியன் சிஎன்ஜி கார்களை நிறுவனம் இதுவரை விற்பனைச் செய்திருக்கின்றது. நிறுவனம் 2010ம் ஆண்டிலேயே சிஎன்ஜி கார்கள் விற்பனையில் களமிறங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications