மாருதி டிசையர் சிஎன்ஜி காருக்கு புக்கிங் தொடக்கம்! ரொம்ப சீக்கிரமே விற்பனைக்கு வர இருப்பதால் டீலர்கள் அதிரடி!

மாருதி சுசுகி டிசையர் சிஎன்ஜி (Maruti Suzuki Dzire CNG) காருக்கு இந்தியாவில் புக்கிங் பணிகள் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

மாருதி டிசையர் சிஎன்ஜி காருக்கு புக்கிங் தொடக்கம்... ரொம்ப சீக்கிரமே விற்பனைக்கு வர இருப்பதால் சம்பவம் செய்த டீலர்கள்!

இந்தியாவின் சிஎன்ஜி கார் தாகத்தை தீர்க்கும் வகையில் மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிறுவனம், தனது முக்கியமான கார் மாடல்கள் பலவற்றில் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்கு வழங்குகின்றது. அந்தவகையில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பலேனோ கார் மாடலில் சிஎன்ஜி தேர்வை விற்பனைக்குக் களமிறக்கியது.

மாருதி டிசையர் சிஎன்ஜி காருக்கு புக்கிங் தொடக்கம்... ரொம்ப சீக்கிரமே விற்பனைக்கு வர இருப்பதால் சம்பவம் செய்த டீலர்கள்!

இதன் வரிசையில் மிக விரைவில் 2022 டிசையர் இணைய இருக்கின்றது. இதன் விற்பனைக்கான அறிமுகம் மிக மிக விரைவில் அரங்கேற இருக்கின்றது. இந்த நிலையில், மாருதி கார் விற்பனையாளர்கள் 2022 மாருதி டிசையர் சிஎன்ஜி (Dzire CNG) காருக்கான புக்கிங் பணிகளை இந்தியாவில் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாருதி டிசையர் சிஎன்ஜி காருக்கு புக்கிங் தொடக்கம்... ரொம்ப சீக்கிரமே விற்பனைக்கு வர இருப்பதால் சம்பவம் செய்த டீலர்கள்!

இது அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் செயல்பாடு ஆகும். ஆம், மாருதி சுசுகி நிறுவனம் தற்போது வரை இக்காருக்கான புக்கிங்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், டீலர்கள் நிலையில் 2022 டிசையர் சிஎன்ஜிக்கான புக்கிங் பணிகள் தொடங்கியுள்ளன. சிஎன்ஜி கிட் கொண்ட டிசையர் சோதனையோட்டத்தின்போது பலமுறை கேமிராவின் கண்களில் சிக்கியது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி டிசையர் சிஎன்ஜி காருக்கு புக்கிங் தொடக்கம்... ரொம்ப சீக்கிரமே விற்பனைக்கு வர இருப்பதால் சம்பவம் செய்த டீலர்கள்!

இந்த கார் விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு சோதனையோட்டப் பணிகள் கடந்த காலங்களில் அதி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே வெகு விரைவில் இக்கார் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கேப் சர்வீஸுக்காக டிசையர் டூர் எஸ் கார் சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி டிசையர் சிஎன்ஜி காருக்கு புக்கிங் தொடக்கம்... ரொம்ப சீக்கிரமே விற்பனைக்கு வர இருப்பதால் சம்பவம் செய்த டீலர்கள்!

புதிய சிஎன்ஜி டிசையர் 1.2 லிட்டர் கே12எம் விவிடி பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி மற்றும் 95 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதே எஞ்ஜின் சிஎன்ஜி கிட் அல்லாத நிலையில் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

மாருதி டிசையர் சிஎன்ஜி காருக்கு புக்கிங் தொடக்கம்... ரொம்ப சீக்கிரமே விற்பனைக்கு வர இருப்பதால் சம்பவம் செய்த டீலர்கள்!

புதிய 2022 மாருதி டிசையர் சிஎன்ஜியின் வருகை இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டாடா டிகோர் மற்றும் ஹூண்டாய் அவுரா ஆகிய சிஎன்ஜி கார்களுக்கு போட்டியாக அமைய இருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் வழக்கமான டிசையர் கார் மாடலைக் காட்டிலும் 70 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை அதிக விலையில் சிஎன்ஜி டிசையர் எதிர்பார்க்கப்படுகின்றது.

மாருதி டிசையர் சிஎன்ஜி காருக்கு புக்கிங் தொடக்கம்... ரொம்ப சீக்கிரமே விற்பனைக்கு வர இருப்பதால் சம்பவம் செய்த டீலர்கள்!

தற்போது விற்பனையில் இருக்கும் டிசையர் கார் மாடல் ரூ. 6.09 லட்சத்தில் இருந்து ரூ. 9.13 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மாருதி சுசுகி நிறுவனம் அதன் டிசையர் கார் மாடலைத் தொடர்ந்து இன்னும் சில பிரபல கார் மாடல்களையும் சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாருதி டிசையர் சிஎன்ஜி காருக்கு புக்கிங் தொடக்கம்... ரொம்ப சீக்கிரமே விற்பனைக்கு வர இருப்பதால் சம்பவம் செய்த டீலர்கள்!

அந்தவகையில், அடுத்ததாக ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மற்றும் விட்டாரா ப்ரெஸ்ஸா ஆகிய கார் மாடல்களில் சிஎன்ஜி தேர்வு எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, சில புதுப்பிக்கப்பட்ட மாடல்களையும் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது.

Source: MotorArenaIndia

More from DriveSpark

Article Published On: Monday, March 7, 2022, 18:30 [IST]
English summary
Maruti suzuki dealers started unofficial booking for dzire cng
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+