எஸ்-பிரஸ்ஸோ கார் மாடலின் 6 தேர்வுகளை விற்பனையில் இருந்து அதிரடியாக தூக்கிய மாருதி... ஆல்டோவையும் விட்டு வக்கல!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் ஆல்டோ (Alto) மற்றும் எஸ் பிரஸ்ஸோ (S Presso) ஆகிய கார் மாடல்களின் குறிப்பிட்ட சில தேர்வுகளை அதிரடியாக விற்பனையில் இருந்து வெளியேற்றியிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த செயல் ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே வழங்கியுள்ளோம். வாருங்கள் அதுகுறித்து பார்க்கலாம்.

எஸ்-பிரஸ்ஸோ கார் மாடலின் 6 தேர்வுகளை விற்பனையில் இருந்து அதிரடியாக தூக்கிய மாருதி... ஆல்டோவையும் விட்டு வக்கல!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் விலை குறைவான கார் மாடல்களாக ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ இருக்கின்றன. இவற்றில் இருந்து குறிப்பிட்ட சில தேர்வுகளை நிறுவனம் தற்போது விற்பனையில் இருந்து நீக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாருதி சுஸுகியின் இந்த நடவடிக்கையால் இனி அத்தேர்வுகள் மட்டும் விற்பனைக்குக் கிடைக்காது என்கிற நிலை உருவாகியுள்ளது.

எஸ்-பிரஸ்ஸோ கார் மாடலின் 6 தேர்வுகளை விற்பனையில் இருந்து அதிரடியாக தூக்கிய மாருதி... ஆல்டோவையும் விட்டு வக்கல!

மாருதி சுஸுகி நிறுவனம் மிக சமீபத்தில் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இதன் அதிர்ச்சியில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டும் வராத நிலையில், விலை குறைவான கார் மாடல்களின் குறிற்ப்பிட்ட சில வேரியண்டுகளை மாருதி சுஸுகி நீக்கியுள்ளது. இது மேலும் பல மடங்கு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

எஸ்-பிரஸ்ஸோ கார் மாடலின் 6 தேர்வுகளை விற்பனையில் இருந்து அதிரடியாக தூக்கிய மாருதி... ஆல்டோவையும் விட்டு வக்கல!

எஸ்-பிரஸ்ஸோ மாடலில் ஆறு வேரியண்டுகளையும், ஆல்டோவில் மூன்று வேரியண்டுகளையும் மாருதி சுஸுகி அதிரடி நீக்கியிருக்கின்றது. எஸ்டிடி (Std), எல்எக்ஸ்ஐ (LXi), விஎக்ஸ்ஐ (VXi), விஎக்ஸ்ஐ ஏஎம்டி (VXi AMT), எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி (LXi CNG), மற்றும் (VXi CNG) ஆகிய தேர்வுகள் இனி எஸ்-பிரஸ்ஸோவில் விற்பனைக்குக் கிடைக்காது.

எஸ்-பிரஸ்ஸோ கார் மாடலின் 6 தேர்வுகளை விற்பனையில் இருந்து அதிரடியாக தூக்கிய மாருதி... ஆல்டோவையும் விட்டு வக்கல!

இதேபோல், ஆல்டோவில் கிடைத்து வந்த எஸ்டிடி (Std), எல்எக்ஸ்ஐ (LXi), மற்றும் எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி (LXi CNG) ஆகிய தேர்வுகளும் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் இத்தனை தேர்வுகளை மாருதி சுஸுகி விற்பனையில் இருந்து அகற்றியிருப்பது ஒட்டுமொத்த இந்திய வாகன சந்தைக்கே பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

எஸ்-பிரஸ்ஸோ கார் மாடலின் 6 தேர்வுகளை விற்பனையில் இருந்து அதிரடியாக தூக்கிய மாருதி... ஆல்டோவையும் விட்டு வக்கல!

மாருதி சுஸுகி ஆல்டோ ரூ. 4 லட்சத்து 8 ஆயிரம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. தேர்வுகள் குறைப்பின் காரணத்தினால் தற்போது நான்கு விதமான வேரியண்டுகளில் மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. எல்எக்ஸ்ஐ(ஓ), விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ ப்ளஸ் மற்றும் எல்எக்ஸ்ஐ(ஓ) சிஎன்ஜி ஆகிய தேர்வுகளில் மட்டுமே தற்போது விற்பனையில் உள்ளது.

எஸ்-பிரஸ்ஸோ கார் மாடலின் 6 தேர்வுகளை விற்பனையில் இருந்து அதிரடியாக தூக்கிய மாருதி... ஆல்டோவையும் விட்டு வக்கல!

மேலே பார்த்தது ஆல்டோவின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதன் சிஎன்ஜி தேர்வு ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 31.59 கிமீ மைலேஜை வழங்கும். இதேபோல், அதன் பெட்ரோல் வெர்ஷன் 22.05 கிமீ வரை மைலேஜை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. இத்தகைய சூப்பரான மைலேஜை வழங்கும் திறனை ஆல்டோ கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் ஏழைகளின் விருப்பமான காராக அது இருக்கின்றது.

எஸ்-பிரஸ்ஸோ கார் மாடலின் 6 தேர்வுகளை விற்பனையில் இருந்து அதிரடியாக தூக்கிய மாருதி... ஆல்டோவையும் விட்டு வக்கல!

இதேபோல் நடுத்தர மக்களின் விருப்பமான கார் மாடலாக எஸ்-பிரஸ்ஸோ காட்சியளிக்கின்றது. இது இந்தியாவில் ரூ. 3 .99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுவும், சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இக்கார் தற்போது இந்தியாவில் எட்டுவிதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

எஸ்-பிரஸ்ஸோ கார் மாடலின் 6 தேர்வுகளை விற்பனையில் இருந்து அதிரடியாக தூக்கிய மாருதி... ஆல்டோவையும் விட்டு வக்கல!

ஆறு வேரியண்டுகள் நீக்கப்பட்ட நிலையிலும் இத்தகைய அதிகபட்ச தேர்வுகளில் எஸ்-பிரஸ்ஸோ நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரும் ஆல்டோவைப் போல் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

எஸ்-பிரஸ்ஸோ கார் மாடலின் 6 தேர்வுகளை விற்பனையில் இருந்து அதிரடியாக தூக்கிய மாருதி... ஆல்டோவையும் விட்டு வக்கல!

இதன் சிஎன்ஜி தேர்வு ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 31.2 கிமீ மைலேஜையும், பெட்ரோல் தேர்வு 21.4 கிமீ தொடங்கி 21.7 கிமீ வரையிலும் மைலேஜை வழங்குகின்றன. இத்தகைய சிறப்பான மைலேஜை மட்டுமில்லைங்க அதிக சிறப்பு வசதிகளைக் கொண்ட வாகனமாகவும் எஸ்-பிரஸ்ஸோ காட்சியளிக்கின்றது.

எஸ்-பிரஸ்ஸோ கார் மாடலின் 6 தேர்வுகளை விற்பனையில் இருந்து அதிரடியாக தூக்கிய மாருதி... ஆல்டோவையும் விட்டு வக்கல!

எனவேதான் மக்கள் மத்தியில் அக்காருக்கு சிறப்பான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த நிலையிலேயே குறிப்பிட்ட சில தேர்வுகளை எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ஆல்டோ ஆகியவற்றில் இருந்து மாருதி நீக்கியுள்ளது. இதற்கான உறுதியான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 20, 2022, 15:46 [IST]
English summary
Maruti suzuki discontinued some of variants from alto and s presso
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+