சத்தமே இல்லாம செஞ்சுட்டாங்க... 2 சிஎன்ஜி உட்பட 6 தேர்வுகளை பிரபல கார் மாடலில் இருந்து நீக்கியது மாருதி சுஸுகி!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் இரு சிஎன்ஜி உட்பட ஒட்டுமொத்தமாக ஆறு தேர்வுகளை எஸ்-பிரஸ்ஸோ (S-Presso) கார் மாடலில் இருந்து அகற்றியிருக்கின்றது. எந்தெந்த தேர்வுகளை நிறுவனம் விற்பனையில் இருந்து அகற்றியிருக்கின்றது என்பது பற்றிய விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

சத்தமே இல்லாம செஞ்சுட்டாங்க... 2 சிஎன்ஜி உட்பட 6 தேர்வுகளை பிரபல கார் மாடலில் இருந்து நீக்கியது மாருதி சுஸுகி!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் எஸ்-பிரஸ்ஸோ (S-Presso) -sவும் ஒன்று. இந்த கார் மாடலில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்த ஆறு வேரியண்டுகளை சத்தமே இல்லாமல் மாருதி நிறுவனம் சந்தையில் இருந்து அகற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், அகற்றப்பட்ட அனைத்து எஸ்-பிரஸ்ஸோ தேர்வுகளும் இனி நாட்டில் விற்பனைக்கே கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

சத்தமே இல்லாம செஞ்சுட்டாங்க... 2 சிஎன்ஜி உட்பட 6 தேர்வுகளை பிரபல கார் மாடலில் இருந்து நீக்கியது மாருதி சுஸுகி!

எஸ்டிடி (Std), எல்எக்ஸ்ஐ (LXi), எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி (LXi CNG), விஎக்ஸ்ஐ (VXi), விஎக்ஸ்ஐ ஏஎம்டி (VXi AMT), மற்றும் விஎக்ஸ்ஐ சிஎன்ஜி (VXi CNG) இந்த தேர்வுகளையே மாருதி சுஸுகி நிறுவனம் சத்தமே இல்லாமல் விற்பனையில் இருந்து அகற்றியிருக்கின்றது. இந்த வேரியண்டுகளின் வெளியேற்றத்தால் தற்போது எஸ்-பிரஸ்ஸோவின் ஆரம்ப விலை ரூ. 3.99 லட்சமாக மாறியுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

சத்தமே இல்லாம செஞ்சுட்டாங்க... 2 சிஎன்ஜி உட்பட 6 தேர்வுகளை பிரபல கார் மாடலில் இருந்து நீக்கியது மாருதி சுஸுகி!

அதேநேரத்தில், ஆறு வேரியண்டுகளின் அகற்றத்திற்கு பின்னரும் எக்கசக்க தேர்வுகளின்கீழ் எஸ்-பிரஸ்ஸோ விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவற்றின் விபரம் இதோ; எஸ்டிடி (ஓ) Std (O)), எல்எக்ஸ்ஐ (ஓ) (LXi (O)), விஎக்ஸ்ஐ (ஓ) (VXi (O)), விஎக்ஸ்ஐ பிளஸ் (VXi Plus), விஎக்ஸ்ஐ (ஓ) ஏஎம்டி (VXi (O) AMT), எல்எக்ஸ்ஐ (ஓ) சிஎன்ஜி (LXi (O) CNG), விஎக்ஸ்ஐ பிளஸ் ஏஎம்டி (VXi Plus AMT) மற்றும் விஎக்ஸ்ஐ (ஓ) சிஎன்ஜி (VXi (O) CNG) இந்த தேர்வுகளில் மட்டுமே இனி எஸ்-பிரஸ்ஸோ காரை நம்மால் விற்பனைக்கு வாங்கிக் கொள்ள முடியும்.

சத்தமே இல்லாம செஞ்சுட்டாங்க... 2 சிஎன்ஜி உட்பட 6 தேர்வுகளை பிரபல கார் மாடலில் இருந்து நீக்கியது மாருதி சுஸுகி!

நிறுவனத்தின் வெளியேற்ற நடவடிக்கை முன்னர் வரை எஸ்-பிரஸ்ஸோவில் நான்கு விதமான சிஎன்ஜி தேர்வுகள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இப்போது அதன் எண்ணிக்கை இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, எஸ்-பிரஸ்ஸோ சிஎன்ஜியை ரூ. 5.38 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

சத்தமே இல்லாம செஞ்சுட்டாங்க... 2 சிஎன்ஜி உட்பட 6 தேர்வுகளை பிரபல கார் மாடலில் இருந்து நீக்கியது மாருதி சுஸுகி!

இதேபோல் இக்காரில் ஏஎம்டி வெர்ஷனை ரூ. 5.19 லட்சத்தில் இருந்து வாங்கிக் கொள்ள முடியும். மாருதி சுஸுகி திடீரென எஸ்-பிரஸ்ஸோ காரின் வேரியண்டுகள் சிலவற்றை திடீரெந வெளியேற்றியதற்கான அதிகாரப்பூர்வ காரணம் என்னவென்று தெரியவில்லை. இதற்கு, விரைவில் அமல்படுத்தப்பட இருக்கும் புதிய பாதுகாப்பு விதிகளே காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

சத்தமே இல்லாம செஞ்சுட்டாங்க... 2 சிஎன்ஜி உட்பட 6 தேர்வுகளை பிரபல கார் மாடலில் இருந்து நீக்கியது மாருதி சுஸுகி!

நிறுவனத்தின் மிக மிக குறைவான விலைக் கொண்ட வாகனமாக எஸ்-பிரஸ்ஸோ உள்ளது. இந்த விலைக் குறைவான காருக்கு இந்திய பட்ஜெட் கார் விரும்பிகள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மைக்ரோ எஸ்யூவி கார் தோற்றம், அதிக மைலேஜ் உள்ளிட்ட திறன்களுக்கு இக்கார் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துக் காணப்படுகின்றது.

சத்தமே இல்லாம செஞ்சுட்டாங்க... 2 சிஎன்ஜி உட்பட 6 தேர்வுகளை பிரபல கார் மாடலில் இருந்து நீக்கியது மாருதி சுஸுகி!

அதேநேரத்தில், அதிக சிறப்பம்சங்களையும் இந்த வாகனம் தாங்கியிருக்கின்றது. அந்தவகையில், மிக முக்கியமான அம்சங்களாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டியரிங் வீலில் பன்முக கன்ட்ரோல்கள், டேஷ்போர்டு மவுண்டட் பவர் விண்டோ பொத்தான்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

சத்தமே இல்லாம செஞ்சுட்டாங்க... 2 சிஎன்ஜி உட்பட 6 தேர்வுகளை பிரபல கார் மாடலில் இருந்து நீக்கியது மாருதி சுஸுகி!

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் அனைத்து வேரியண்டுகளிலும் 1.0 லிட்டர் பெட்ரோல் மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 67 பிஎச்பி மற்றும் 90 என்எம் டார்க்கை வெளியேற்றும். சிஎன்ஜி தேர்வில் மட்டுமே இதைவிட சற்று லேசான திறனையே இந்த மோட்டார் வெளியேற்றும்.

சத்தமே இல்லாம செஞ்சுட்டாங்க... 2 சிஎன்ஜி உட்பட 6 தேர்வுகளை பிரபல கார் மாடலில் இருந்து நீக்கியது மாருதி சுஸுகி!

இம்மோட்டாருடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆகிய இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. இத்தகைய சூப்பரான அம்சங்களுடனேயே மாருதி சுஸுகியின் இந்த மலிவு விலை விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Article Published On: Saturday, July 9, 2022, 10:56 [IST]
English summary
Maruti suzuki discontinued some of variants from s presso
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+