மாருதியின் புதிய கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! பெட்ரோல், டீசல் விலை எவ்ளோ உயர்ந்தாலும் கவலைப்பட வேண்டியதே இல்ல

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் வெகு சமீபத்தில் க்ராண்ட் விட்டாரா (Grand Vitara) என்ற புத்தம் புதிய காரை இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

இந்த காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இதன் சிஎன்ஜி (CNG) வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா சிஎன்ஜி காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் நடப்பு டிசம்பர் மாதத்தில் இந்த கார் ஷோரூம்களை வந்தடைந்து விடும் என மாருதி சுஸுகி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாருதியின் புதிய கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! பெட்ரோல், டீசல் விலை எவ்ளோ உயர்ந்தாலும் கவலைப்பட வேண்டியதே இல்ல!
Image used for representation purpose only

தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் உடன் விற்பனைக்கு வரும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எஸ்யூவி கார் என்ற பெருமையை இது பெறவுள்ளது. மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா சிஎன்ஜி காரில், 1.5 லிட்டர் K15C பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் வழக்கமான பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் செட்-அப் உடன் ஒப்பிடும்போது, சிஎன்ஜி வெர்ஷனின் பவர் அவுட்புட் சற்று குறைவாக இருக்கலாம்.

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 26.10 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கும். இந்த சிறப்பான மைலேஜ் வாடிக்கையாளர்களை கவரக்கூடிய விஷயமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை கவரும் வகையில், நிறைய வேரியண்ட்களில், இந்த கார் விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

வழக்கமான பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் வேரியண்ட்களுடன் ஒப்பிடும்போது, சிஎன்ஜி வெர்ஷனின் விலை (Price) 75 ஆயிரம் ரூபாய் முதல் 95 ஆயிரம் ரூபாய் வரை அதிகமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும். தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மிட்-சைஸ் எஸ்யூவி கார் மொத்தம் 9 கலர் ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவை ஆர்டிக் ஒயிட், ஒபுலெண்ட் ரெட், செலஸ்டியல் ப்ளூ, ஸ்பிளெண்டிட் சில்வர், மிட் நைட் ப்ளாக், செஸ்ட்நட் ப்ரோன்ஸ், க்ராண்டியூர் க்ரே, மிட் நைட் ப்ளாக் உடன் ஸ்பிளெண்டிட் சில்வர் மற்றும் மிட் நைட் ப்ளாக் உடன் ஆர்டிக் ஒயிட் ஆகும். அத்துடன் வாடிக்கையாளர்களின் பயணத்தை சொகுசாகவும், இனிமையானதாகவும் மாற்றக்கூடிய வகையில் ஏராளமான வசதிகளும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில்தான் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் சிஎன்ஜி வெர்ஷன் விற்பனைக்கு வரவுள்ளது. சிஎன்ஜி வெர்ஷனின் வருகைக்கு பின்னர், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது சிஎன்ஜி கார்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அரேனா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படும் கார்கள் மட்டுமல்லாது, நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் பிரீமியம் கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை அறிமுகம் செய்வதிலும் மாருதி சுஸுகி தீவிரமாக உள்ளது.

க்ராண்ட் விட்டாரா சிஎன்ஜி காருக்கு அடுத்தபடியாக பிரெஸ்ஸா சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் சிஎன்ஜி (Maruti Suzuki Brezza CNG) வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டு இறுதிக்குள்ளாகவோ அல்லது அடுத்த 2023ம் ஆண்டின் தொடக்கத்திலோ, மாருதி சுஸுகி ப்ரெஸ்ஸா சிஎன்ஜி கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்து விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
Maruti suzuki grand vitara cng all details you need to know
Story first published: Saturday, December 3, 2022, 22:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X