Just In
- 13 hrs ago
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- 15 hrs ago
வீலிங், சேஸிங்னு எதுவுமே பண்ண வேண்டாம்... இத ஓட்டிட்டு போனாலே உங்கள வச்ச கண்ணு வாங்காம பாப்பாங்க!
- 15 hrs ago
காத்தையே கிழிக்க போகுது நம்ம வந்தே பாரத் ரயில்கள்... இனி ஒக்காந்துட்டு மட்டுமல்ல படுத்துட்டு போகலாம்..
- 17 hrs ago
120வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஹார்லிடேவிட்சன்! 7 லிமிடெட் எடிசன் பைக்குகளை தயாரிக்க முடிவு!
Don't Miss!
- Movies
மீண்டும் இணையும் ராட்சசன் கூட்டணி
- News
அடிக்கடி தேர்தல் நடப்பதே ஊழலுக்கு முக்கிய காரணம்.. 'ஒரே தேர்தல்' வந்தால் கறுப்பு பணம் ஒழியும் : பாஜக
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Lifestyle
வார ராசிபலன் 22.01.2023-28.01.2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- Sports
"யார்பா அது முரட்டு ஆளா ஓடுற" ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
ஒரு கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! போட்டியாளர்களை கதற விடும் மாருதியின் புதிய மாடல்! ஆட்டம் சூடுபிடிச்சிருச்சு!
மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய கார் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara). கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதிதான் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கையோடு, க்ராண்ட் விட்டாரா காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளையும் மாருதி சுஸுகி நிறுவனம் உடனடியாக தொடங்கியுள்ளது. இதன் மூலம் முதல் மாதத்திலேயே மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் 4,770 க்ராண்ட் விட்டாரா கார்களை விற்பனை செய்துள்ளது. முதல் மாதம் என்பதை கணக்கில் கொண்டு பார்க்கும்போது, இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கைதான். இத்தனைக்கும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் கடந்த செப்டம்பர் மாத இறுதியில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இன்னும் தெளிவாக சொல்வதென்றால், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் விற்பனைக்கு வந்த 5 நாட்களில் செப்டம்பர் மாதம் முடிவடைந்து விட்டது. எனவே வரும் மாதங்களில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் இந்திய சந்தையை ஒரு கலக்கு கலக்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.

ஏனெனில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரை 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இது நமக்கு கடைசியாக கிடைத்த முன்பதிவு எண்ணிக்கையாகும். தற்போது இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்திருக்கலாம். எனவே வரும் மாதங்களில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் பிரம்மாண்டமானதாக இருக்க கூடும்.

இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), எம்ஜி அஸ்டர் (MG Astor), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களுடன் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் போட்டியிட்டு வருகிறது.

அத்துடன் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) காருக்கும் இது விற்பனையில் சவால் அளிக்கும். டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரும் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கும், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும். இதில், 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு சுமார் 28 கிலோ மீட்டர்கள் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே மைலேஜிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க கூடிய வாடிக்கையாளர்கள் மத்தியில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் உடனடியாக பிரபலமடைவதற்கு இந்த 28 கிலோ மீட்டர்கள் என்ற அம்சம் மிகப்பெரிய அளவில் உதவி செய்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்ததாக ஜிம்னி காரின் 5 டோர் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வெகு விரைவில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில், மாருதி சுஸுகி நிறுவனம் ஜிம்னி காரின் 5 டோர் வெர்ஷனை விற்பனைக்கு கொண்டு வரும் என கூறப்படுகிறது.

ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஆட்டோ எக்ஸ்போ வாகன திருவிழா வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதில் மாருதி சுஸுகி ஜிம்னி மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு புதிய கார்களின் அறிமுகத்தையும் நாம் எதிர்பார்க்கலாம்.
-
இனி புதுசா வரப்போற கார் எதுலயும் இந்த பிரேக் இருக்காது! சென்னை நிறுவனம் வேற லெவல்ல ஒன்ன தயாரிச்சிருக்காங்க!
-
கப்பல் போன்ற சொகுசு காரை வாங்கிய டிரைவர் மகன்! எப்படி சாம்பாதிச்சார்னு தெரிஞ்சதும் வாயை பிளக்கும் மக்கள்!
-
பெட்ரோல் பைக்குகளை தூக்கி போடுவதற்கான நேரம் வந்தாச்சு! ஃபுல் சார்ஜில் 200 கிமீ ரேஞ்ஜ் தரும்!