மாருதி கிராண்ட் விட்டாரா இவ்ளோ குறைவான விலையில் விற்பனைக்கு வரபோகுதா! க்ரெட்டா இருக்க இடம் தெரியாம போகபோகுது!

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) காரின் விலை விபரம் இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி கிராண்ட் விட்டாரா இவ்ளோ குறைவான விலையில் விற்பனைக்கு வரபோகுதா! க்ரெட்டா இருக்க இடம் தெரியாம போகு போது!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா (Grand Vitara) காருக்கு இந்தியாவில் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இக்காருக்கு இப்போதைக்கு புக்கிங் மட்டுமே தொடங்கப்பட்டிருக்கின்றது. ரூ. 11 ஆயிரம் முன்தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மற்றும் விற்பனையாளர்கள் ஷோரூம் வாயிலாக புக்கிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மாருதி கிராண்ட் விட்டாரா இவ்ளோ குறைவான விலையில் விற்பனைக்கு வரபோகுதா! க்ரெட்டா இருக்க இடம் தெரியாம போகு போது!

இக்காரின் விலை குறித்த விபரத்தை நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இக்காருக்கு மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நிறுவனத்தின் பிற தயாரிப்புகளுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே மிக சூப்பரான வரவேற்பு கிராண்ட் விட்டாரா காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

மாருதி கிராண்ட் விட்டாரா இவ்ளோ குறைவான விலையில் விற்பனைக்கு வரபோகுதா! க்ரெட்டா இருக்க இடம் தெரியாம போகு போது!

இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் சில முக்கிய தகவல்கள் வெளியாகின. அதாவது, கிராண்ட் விட்டாரா காருக்கு புக்கிங் பணிகள் தொடங்கப்பட்ட வெறும் ஆறு நாட்களிலேயே 13 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்குகளை அது பெற்றதாக கூறப்படுகின்றது. இந்த எண்ணிக்கை 15வது நாளில் 20 ஆயிரம் யூனிட்டுகளாக அதிகரித்திருக்கின்றது. இதில், 50 சதவீதம் புக்கிங் கிராண்ட் விட்டாராவின் உயர்நிலை தேர்வான ஜெட்டா மற்றும் ஆல்ஃபா-விற்கே கிடைத்திருக்கின்றது.

மாருதி கிராண்ட் விட்டாரா இவ்ளோ குறைவான விலையில் விற்பனைக்கு வரபோகுதா! க்ரெட்டா இருக்க இடம் தெரியாம போகு போது!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா காரின் விலைகள்குறித்த தகவல்கள் தற்போது இணையத்தின் வாயிலாக கசிந்திருக்கின்றன. இக்கார் ரூ. 9.5 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் வாயிலாக, மைல்டு ஹைபிரிட் வசதிக் கொண்ட கிராண்ட் விட்டாரா ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிய வருகின்றது.

மாருதி கிராண்ட் விட்டாரா இவ்ளோ குறைவான விலையில் விற்பனைக்கு வரபோகுதா! க்ரெட்டா இருக்க இடம் தெரியாம போகு போது!

மாருதி சுஸுகி நிறுவனம் இக்காரை வரும் பண்டிகைக் காலத்தை சிறப்பிக்கும் பொருட்டு செப்டம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வ விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே காரின் விலை விபரங்கள் கசிந்திருக்கின்றது.

இதுகுறித்து ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில், கிராண்டா விட்டாரா ரூ. 9.50 லட்சம் தொடங்கி ரூ. 15.50 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

மாருதி கிராண்ட் விட்டாரா இவ்ளோ குறைவான விலையில் விற்பனைக்கு வரபோகுதா! க்ரெட்டா இருக்க இடம் தெரியாம போகு போது!

கிராண்ட் விட்டாரா காரின் முழு விலை விபரம் வேரியண்ட் வாரியாக:

  • சிக்மா மேனுவல் வேரியண்டின் விலை ரூ. 9.50 லட்சம்.
  • டெல்டா ட்ரிம்மின் மேனுவல் ரூ. 11 லட்சத்திற்கும், தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வு ரூ. 12.50 லட்சத்திற்கும் கிடைக்கும்.
  • ஜெட்டா ட்ரிம்மின் மேனுவல் தேர்வு ரூ. 12 லட்சத்திற்கும், தானியங்கி தேர்வு ரூ. 13.50 லட்சத்திற்கும் கிடைக்கும்.
  • ஆல்ஃபா ட்ரிம்மின் மேனுவல் ரூ. 13.50 லட்சத்திற்கும், தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வு ரூ. 15 லட்சத்திற்கும் கிடைக்கும்.
  • ஆல்ஃபா ஆல் வீல் டிரைவ் தேர்வு ரூ. 15.50 லட்சத்திற்கு கிடைக்க இருக்கின்றது.
  • மேலே பார்த்த அனைத்தும் மைல்டு ஹைபிரிட் வசதிக் கொண்ட கிராண்ட் விட்டாரா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

    மாருதி கிராண்ட் விட்டாரா இவ்ளோ குறைவான விலையில் விற்பனைக்கு வரபோகுதா! க்ரெட்டா இருக்க இடம் தெரியாம போகு போது!

    இதே கார் மாடலில் மாருதி சுஸுகி ஸ்ட்ராங் ஹைபிரிட் ஆப்ஷனையும் வழங்க இருக்கின்றது. அது ஜெட்டா பிளஸ் மற்றும் ஆல்ஃபா பிளஸ் ஆகிய இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த தேர்வு ரூ. 17 லட்சம் தொடங்கி ரூ. 18 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைகளே என்பது குறிப்பிடத்தகுந்தது.

    மாருதி கிராண்ட் விட்டாரா இவ்ளோ குறைவான விலையில் விற்பனைக்கு வரபோகுதா! க்ரெட்டா இருக்க இடம் தெரியாம போகு போது!

    இந்த புதிய கிராண்ட் விட்டாரா கார் ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா எஸ்யூவி காருக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த இருக்கின்றது. அது, க்ரெட்டாவைவிட ரூ. 94 ஆயிரம் வரை குறைவான விலையில் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஆகையால், விலை விஷயத்தில் கடுமையான போட்டியை இக்கார் க்ரெட்டாவிற்கு வழங்கும் என தெரிகின்றது.

    மாருதி கிராண்ட் விட்டாரா இவ்ளோ குறைவான விலையில் விற்பனைக்கு வரபோகுதா! க்ரெட்டா இருக்க இடம் தெரியாம போகு போது!

    விலையில் மட்டுமின்றி சிறப்பு தொழில்நுட்ப விஷயத்திலும் தரமான போட்டியாளராக க்ரெட்டாவிற்கு கிராண்ட் விட்டாரா அமைய இருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக கிராண்ட் விட்டாராவின் அதிக மைலேஜ் திறன் இருக்கின்றது. ஸ்ட்ராங் ஹைபிரிட் வசதிக் கொண்ட கிராண்ட் விட்டாரா எஸ்யூவி ஒரு லிட்டருக்கு 27.9 கிமீ வரை மைலேஜ் தரும் என நிறுவனத்தால் கூறப்பட்டுள்ளது.

    மாருதி கிராண்ட் விட்டாரா இவ்ளோ குறைவான விலையில் விற்பனைக்கு வரபோகுதா! க்ரெட்டா இருக்க இடம் தெரியாம போகு போது!

    இந்த விஷயத்திற்காகவே இந்தியர்கள் பலர் இக்காரை வாங்குவார்கள் யூகிக்க முடிகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் புக்கிங் தொடங்கப்பட்ட சில தினங்களிலேயே ஆயிரக் கணக்கில் அக்காருக்கு புக்கிங் குவிந்துள்ளது. இந்த வாங்குதலைக் கூடுதலாகத் தூண்டும் வகையில் பன்முக தொழில்நுட்ப வசதிகளையும் கிராண்ட் விட்டாரா கொண்டிருக்கின்றது.

    மாருதி கிராண்ட் விட்டாரா இவ்ளோ குறைவான விலையில் விற்பனைக்கு வரபோகுதா! க்ரெட்டா இருக்க இடம் தெரியாம போகு போது!

    அவற்றில் மிக முக்கியமான அம்சமாக 9.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை உள்ளது. இந்த திரை ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, ஹெட்ஸ்-அப் திரை, ஒயர்லெஸ் சார்ஜர், கார் இணைப்பு தொழில்நுட்பம், க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி, சாவியில்லாமல் காருக்குள் நுழைதல் மற்றும் தானாகவே மடக்கிக் கொள்ளும் ஓஆர்விஎம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, July 30, 2022, 17:33 [IST]
English summary
Maruti suzuki grand vitara prices leaked via online here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+