ஒரே மாசத்துல எல்லாத்தையும் அடிச்சிட்டு மேல வந்துருச்சே... கிராண்ட் விட்டாரா காருக்கு இவ்வளவு மவுசா?
மாருதி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரின் விற்பனையை அதிகரித்து வந்த ஒரே மாதத்தில் டாப் 10 எஸ்யூவி கார்களின் பட்டியலில் இடம் பெற வைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

மாருதி சுஸூகி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் எஸ்யூவி செக்மெண்டில் புதிதாக கிராண்ட் விட்டாரா என்ற காரை அறிமுகப்படுத்தியது. இந்நிறுவனம் தனது பிரெஸ்ஸா காரின் சமீபத்தில் செய்த அப்டேட்டை தொடர்ந்து புதிதாக இ்நத காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் மார்கெட்டில் நேரடியாக ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோகஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், நிஸான் கிக்ஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது.

இந்நிலையில் கிராண்ட் விட்டாரா காரை மாருதி அறிமுகப்படுத்தப்போவதாக அறிவிப்பு வெளியான போதே இந்த காருக்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகியது. குறிப்பாக இது வழக்கமான பெட்ரோல் காராக இல்லாமல் ஹைபிரிட் காராக டொயோட்டா நிறுவனத்துடன் இணைந்து மாருதி நிறுவனம் தயாரித்த இன்ஜினை கொண்டு இந்த கார் தயாரிக்கப்படுவதால் பலர் இந்த காரை அதிகம் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் கிராண்ட் விட்டாரா காருக்ககான புக்கிங் துவங்கியபோதே மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கும் விதமாக புக்கிங்களை குவித்தனர். இந்த காருக்கு தற்போது வரை 57 ஆயிரம் புக்கிங்கள் குவிந்துள்ளது. மாருதி நிறுவனம் பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களகு்கு சேர்ந்து மொத்தம் 2 லட்சம் கார்கள் புக்கிங் ஆகியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் மாருதி நிறுவனம் மொத்தம் 4770 கிராண்ட் விட்டாரா கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 8052 கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் கிராண்ட் விட்டாரா கார் இந்தியாவில் விற்பனையான டாப் 10 எஸ்யூவி கார்களில் பட்டியலில் இணைந்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவிகளில் கிராண்ட் விட்டாரா கார் 7 வது இடத்தில் இருக்கிறது. இந்த கார்கள், ஒட்டு மொத்த பயணிகள் கார் விற்பனையில் 16வது இடத்தில் இருக்கிறது. இந்த கிராண்ட் விட்டாரா கார் குலோபல் சி ஆர்க்கிடெக்ஷர் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்ஃபார்மில் தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மாருதி சுஸூகி கிராண்ட் 5 சீட்டர் கார். இந்த கார் மார்கெட்டில் ரூ10.45 லட்சம் முதல் பேஸ் வேரியன்ட் ஆரம்பித்து அதிகபட்சமாக டாப் வேரியன்ட் 19.65 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்த கிராண்ட் விட்டாரா கார் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் கே15சி மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜினை கொண்டது. இதே பெட்ரோல் இன்ஜின் தான் எர்டிகா, எக்ஸ்எல்6, பிரெஸ்ஸா ஆகிய கார்களில் இருக்கிறது. இந்த கார் அதிகபட்சமாக 103 பிஎஸ் பவரையும், 136என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆகிய கியர் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

மற்றொரு இன்ஜின் ஆப்ஷனவாக 1.5 லிட்டர் 3 சிலிண்டர் அட்கின்சன் சைக்கிள் டிஎன்ஜிஏ பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது டொயோட்டா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் கிடைத்த இன்ஜின் இந்த இன்ஜின் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி பேக் உடன் இணைந்த ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜினாகும். இந்த கார் முழுவதுமாக இவி மோடில் இயங்கும் திறனும் கொண்டது.

இந்த ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 28 கி.மீ வரை செல்லும் திறன் கொண்டதாகும். இந்த காரின் உட்புறத்தில் 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது வயர்லெஸில் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய கனெக்டிவிட்டியை சப்போர்ட் செய்யும், இந்த காரில் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்டியரிங் வீல் மவுண்டட் கண்ட்ரோல், ஹைட்ஸ் அப் டிஸ்பிளே, 360 டிகிரி கேமரா சிஸ்டம், 6 ஏர்பேக், மற்றும் கனெக்டெட் கார் தொழிற்நுட்பத்தில் இயங்கும் திறன் கொண்டது.


Click it and Unblock the Notifications