"மே ஐ கம் இன்" என கேஜிஎஃப் ஸ்டைலில் கெத்தாக களம் இறங்கும் மாருதி கிராண்ட் விட்டாரா! ஒவ்வொரு வேரியன்டும் தரம்!
மாருதி நிறுவனம் இந்த மாத இறுதிக்குள் தனது கிராண்ட் விட்டாரா காரை விற்பனைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த காரின் வேரியன்ட் வாரியாக அதில் உள்ள அம்சங்கள் மற்றும் வித்தியாசங்களை இங்கே காணலாம்.

மாருதி நிறுவனத்தின் கார்களுக்கு எப்பொழுதுமே மக்கள் மத்தியில் பயங்கரமான மவுசு இருக்கிறது. இந்த நிறுவனத்தின் கார்களை வாங்க மக்கள் போட்டி போடுகின்றனர். என்னதான் சிலர் விமர்சனம் செய்தாலும் விற்பனையில் இந்த நிறுவனத்தின் கார்கள் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இந்நிலையில இந்நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா காருக்கு மக்கள் மத்தியில் பயங்கரமான எதிர்பார்ப்பு இருக்கிறது.

மாருதி நிறுவனம் இந்த காரை கடந்த ஜூலை மாதம் 11 ம்தேதி பொதுப் பார்வைக்காக அறிமுகப்படுத்தியது. மிட் சைஸ் எக்ஸ்யூவி செக்மெண்டில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது . இந்த காருக்கான புக்கிங் துவங்கப்பட்ட நிலையில் இதுவரை இந்த காருக்கு 50 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங் குவிந்துள்ளது. இந்த நிலையில் இந்தக் காரை இந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வர மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தப் பதிவில் இந்த மாதம் கிராண்ட் விட்டாரா காரின் வேரியன்ட் மற்றும் மற்ற விபரங்களைக் காணலாம் வாருங்கள்

மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா சிக்மா
இந்த சிக்மா வேரியன்ட் மாருதி சுஸூகி நிறுவனத்தின் பேஸ் வேரியன்டாகும். இதில் எல்இடி டிஆர்எல்கள், ஹேலஜன் புரோஜெக்டர் லைட்கள், எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் ஓஆர்விஎம், கீ லெஸ் என்ட்ரி, டெலஸ்கோபிக் ஸ்டியரிங் வீல் டூயல் ஏர் பேக், இபிடியுடன் கூடிய ஏபிஸ் ஆகிய அம்சங்கள் இருக்கிறது இந்த காரில் 1.5 லிட்டர் மைல்டு ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா டெல்டா
இந்த டெல்டா வேரியன்டை பொருத்தவரை சிக்மா வேரியன்டில் உள்ள அதே இன்ஜின் தான் இந்த வேரியன்டிலும் உள்ளது. ஆனால் இந்த வேரியன்டில் மேனுவல் அல்லது ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முடியும். அம்சங்களை பொருத்தவரை சிக்மாவில் உள்ள அம்சங்கள் போக கூடுதலாக க்ரூஸ் கண்ட்ரோல், பின்சீட்டில் உள்ளவர்களுக்கான யூஎஸ்பி போர்ட், அலெக்ஸா மற்றும் கூகுள் அசிஸ்டென்ஸ், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் உள்ளன.

மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா ஸெட்டா
இந்த காரின் இன்ஜின் மற்றும் கியர் ஆப்ஷன்களை பொருத்தவரை டெல்டா வேரியன்டில் உள்ள அதே ஆப்ஷன்கள் தான் உள்ளன. அம்சங்களில் சில கூடுதல் அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. இந்த காரில் டேஷ்போர்டு மற்றும் டோர் பேனல்களில் சாஃப்ட் டச், டோர்களில் ஆம்பியன்ஸ் லைட், 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பக்கவாட்டில் ஏர்பேக் போன்ற அம்சங்கள் உள்ளன.

மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா ஸெட்டா +
ஸெட்டா + வேரியன்டில் 1.5 லிட்டர் ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது இ-சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வேரியன்ட் டூயல் டோன் பெயிண்ட் ஸ்கீம் உடன் விற்பனைக்கு வருகிறது. இதில் அம்சங்களாக ஹெட்ஸ்அப் டிஸ்பிளே, வயர்லெஸ் போன் சார்ஜர், டேஷ்போர்டிலும் ஆம்பியன்ஸ் லைட், முழுவதுமாக கருப்பு நிறத்திலால் ஆன உட்புறக் கட்டமைப்பு ஆங்காங்கே தங்க நிற ஆக்ஸென்ஸ், ஆகியன இதில் ஸெட்டா வேரியன்டைவிட கூடுதலாக இருக்கிறது.

மாருதி கிராண்ட் விட்டாரா ஆல்ஃபா
இந்த ஆல்ஃபா வேரியன்டை பொருத்தவரை மைல்டு ஹைபிரிட் இன்ஜின் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது. இதில் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் ஆல்வீல் டிரைவ் மோட் ஆப்ஷனில் இருக்கிறது. இந்த வேரியன்டில் கூடுதல் அம்சஙகளாக லேதர் சீட், லேதர் ஸ்டியரிங் வீல், டிரைவ் செலக்டர் மோட், 360 டிகிரி கேமரா மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா ஆல்ஃபா +
ஆல்ஃபா + வேரியன்டை பொருத்தவரை மாருதி சுஸூகி விட்டாரா காரின் டாப் எண்ட் மாடல் காராகும். இந்த கார் ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜின் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த இன்ஜின் இ-சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் கூடுதல் அம்சங்களாக பட்டல் லைட், வென்டிலேட்டட் சீட், ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இதுபோக ஸெட்டா + காரில் உள்ள அத்தனை அம்சங்களும் இந்த காரிலும் உள்ளன.

நீங்கள் மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா காரை வாங்கும் எண்ணத்தில் இருந்தால் மேலே உள்ளத் தகவல் உங்களுக்கு எந்த வேரியன்டை தேர்வு செய்வது என்பதில் ஒரு தெளிவை ஏற்படுத்தும். எந்தெந்த அம்சங்களில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என மாருதி தெளிவுபடுத்தியுள்ளது. இதில் நீங்கள் என்ன வேரியன்ட் காரை வாங்குவீர்கள் கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications