திடீரென வெளியான அறிவிப்பு... புதிய கார் வாங்குபவர்களுக்கு செக்... காரணம் என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!
புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி திகழ்ந்து வருகிறது. நடப்பு ஏப்ரல் மாதம் முதல் தனது அனைத்து கார்களின் விலைகளையும் உயர்த்தவுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. உள்ளீட்டு செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாகவே, விலைகளை உயர்த்தவுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் கார்களின் விலை எவ்வளவு உயரவுள்ளது? என்பதை மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனால் கார் மாடல்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடும் என தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் கார்களின் விலைகளை தொடர்ச்சியாக உயர்த்தி கொண்டே வருகிறது.

கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் கார்களின் விலையை 8.8 சதவீதம் வரை உயர்த்தி விட்டது. உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதே இதற்கு காரணம். இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனம் பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது. ஆல்டோ, வேகன் ஆர், செலிரியோ, ஸ்விஃப்ட் போன்ற மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு கார்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

இதுதவிர இக்னிஸ், பலேனோ, சியாஸ், விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-க்ராஸ், எர்டிகா, எக்ஸ்எல்6 உள்ளிட்ட கார்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது டீசல் இன்ஜின் கார்களை விற்பனை செய்வதில்லை. பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு பிறகும், இந்தியாவில் டீசல் இன்ஜின் கார்களுக்கான தேவை நன்றாகவே இருந்து வருகிறது.

எனவே எதிர்காலத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் டீசல் இன்ஜின் கார்களை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இதற்கிடையே மாருதி சுஸுகி நிறுவனத்தை போல், இன்னும் பல்வேறு நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதில், ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார் நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் கார்களின் விலைகளை உயர்த்தி விட்டன.

அதேபோல் டொயோட்டா நிறுவனமும் இந்தியாவில் தனது கார்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. இரு சக்கர வாகன நிறுவனங்களை பொறுத்தவரையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது தயாரிப்புகளின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதேபோல் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் தனது ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய பைக்குகளின் விலைகளை அதிகரித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தை பொறுத்தவரை தற்போது புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில்தான் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் 2022 மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து பலேனோ காரின் சிஎன்ஜி மாடலும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

2022ம் ஆண்டின் மத்தியில், அதாவது மே, ஜூன் மாதங்களில் மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதை தொடர்ந்து மாருதி சுஸுகி பலேனோவின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட காரான டொயோட்டா க்ளான்சாவின் சிஎன்ஜி மாடலும் விற்பனைக்கு களமிறக்கப்படும்.

அதற்கு முன்னதாக தற்போது விற்பனையில் உள்ள எக்ஸ்எல்6 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் எக்ஸ்எல்6 ஃபேஸ்லிஃப்ட் காரை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் எர்டிகா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் மாருதி சுஸுகி நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. எர்டிகா மற்றும் எக்எஸ்எல்6 கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களை மாருதி சுஸுகி நிறுவனம் ஒன்றாகவோ அல்லது அடுத்தடுத்தோ விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

கியா கேரன்ஸ் காரின் வருகையால் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 மற்றும் எர்டிகா ஆகிய கார்களுக்கு போட்டி அதிகரித்துள்ளது. மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் மூலம் இந்த போட்டியை சமாளிப்பதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதவிர விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடலையும் மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டு விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications







