லிட்டருக்கு 25.30கிமீ மைலேஜ் தரும்! 2022 மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ விற்பனைக்கு அறிமுகம்! ரூ.4.25 லட்சம்தான்!

2022 மாருதி சுஸுகி எஸ் பிரஸ்ஸோ (Maruti Suzuki S-Presso) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக எரிபொருள் சிக்கன வசதியுடன் இக்கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

லிட்டருக்கு 25.30 கிமீ மைலேஜ் தரும்... 2022 மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ விற்பனைக்கு அறிமுகம்... ரூ. 4.25 லட்சத்துக்கே இந்த காரை வாங்கலாம்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட எஸ்-பிரஸ்ஸோ (S-Presso) காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. முன்பை விட பல மடங்கு எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் இக்காரை மாருதி சுஸுகி அப்டேட் செய்திருக்கின்றது. இந்த புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் ரூ. 4.25 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

லிட்டருக்கு 25.30 கிமீ மைலேஜ் தரும்... 2022 மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ விற்பனைக்கு அறிமுகம்... ரூ. 4.25 லட்சத்துக்கே இந்த காரை வாங்கலாம்!

அதிக மைலேஜை வழங்குவதற்காக அப்டேட் செய்யப்பட்ட எஞ்ஜினை மாருதி சுஸுகி நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது. கே-சீரிஸ் 1.0 லிட்டர் ட்யூவல்-ஜெட், ட்யூவல் விவிடி மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. இது ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பமும் இந்த மோட்டாரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

லிட்டருக்கு 25.30 கிமீ மைலேஜ் தரும்... 2022 மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ விற்பனைக்கு அறிமுகம்... ரூ. 4.25 லட்சத்துக்கே இந்த காரை வாங்கலாம்!

இந்த மோட்டார் 65.7 பிஎச்பி பவரை 5,500 ஆர்பிஎம்மிலும், 89 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி (ஏஜிஎஸ்) கியர்பாக்ஸ் தேர்வு இக்காரில் வழங்கப்படுகின்றது. இந்த மோட்டாரே 25.30 கிமீ வரை ஒரு லிட்டருக்கு மைலேஜ் தரும்.

லிட்டருக்கு 25.30 கிமீ மைலேஜ் தரும்... 2022 மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ விற்பனைக்கு அறிமுகம்... ரூ. 4.25 லட்சத்துக்கே இந்த காரை வாங்கலாம்!

இதோ வேரியண்ட் வாரியாக மைலேஜ் விபரம்:

விஎக்ஸ்ஐ (ஓ) / விஎக்ஸ்ஐ பிளஸ் (ஓ) ஏஜிஎஸ் - 25.30 கிமீ மைலேஜை வழங்கும்.

விஎக்ஸ்ஐ / விஎக்ஸ்ஐ பிளஸ் எம்டி - 24.76 கிமீ மைலேஜை வழங்கும்.

எஸ்டிடி / எல்எக்ஸ்ஐ எம்டி 24.12 கிமீ மைலேஜை வழங்கும்.

லிட்டருக்கு 25.30 கிமீ மைலேஜ் தரும்... 2022 மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ விற்பனைக்கு அறிமுகம்... ரூ. 4.25 லட்சத்துக்கே இந்த காரை வாங்கலாம்!

காரின் விலை விபரம்:

வேரியண்ட் விலை விபரம்
Std MT ₹4,25,000
LXi MT ₹4,95,000
VXi MT ₹5,15,000
VXi+ MT ₹5,49,000
VXi (O) AGS ₹5,65,000
VXi+ (O) AGS ₹5,99,000
லிட்டருக்கு 25.30 கிமீ மைலேஜ் தரும்... 2022 மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ விற்பனைக்கு அறிமுகம்... ரூ. 4.25 லட்சத்துக்கே இந்த காரை வாங்கலாம்!

இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் காராக மாருதி சுஸுகி நிறுவனத்தின் செலிரியோ இருக்கின்றது. இந்த கார் ஒரு லிட்டருக்கு 26.68 கிமீ வரை மைலேஜ் தரும். இந்த காருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை புதிய 2022 எஸ்-பிரஸ்ஸோ பிடித்துள்ளது. புதிய மாருதி எஸ்-பிரஸ்ஸோ காரில் பாதுகாப்பு அம்சங்களாக இஎஸ்பி, ஹில் ஹோல்டு அசிஸ்ட் சிஸ்டத்துடன் இந்த அம்சம் வழங்கப்படுகின்றது.

லிட்டருக்கு 25.30 கிமீ மைலேஜ் தரும்... 2022 மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ விற்பனைக்கு அறிமுகம்... ரூ. 4.25 லட்சத்துக்கே இந்த காரை வாங்கலாம்!

அனைத்து ஏஜிஎஸ் வேரியண்டுகளிலும் மேற்கூறிய அம்சம் ஸடாண்டர்டாக காட்சியளிக்கும். இதுதவிர எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் ஓஆர்விஎம்-களும் வழங்கப்படுகின்றன. இதுதவிர கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சிலவும் இக்காரில் புதுப்பித்தலின் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கின்றன.

லிட்டருக்கு 25.30 கிமீ மைலேஜ் தரும்... 2022 மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ விற்பனைக்கு அறிமுகம்... ரூ. 4.25 லட்சத்துக்கே இந்த காரை வாங்கலாம்!

அந்தவகையில் இரு ஏர் பேக்குகள் (முன் பக்கத்தில்), இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ப்ரீ டென்ஷனர் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர், ஹை ஸ்பீடு அலர்டு சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, பன்முக தொழில்நுட்ப வசதிகளும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

லிட்டருக்கு 25.30 கிமீ மைலேஜ் தரும்... 2022 மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ விற்பனைக்கு அறிமுகம்... ரூ. 4.25 லட்சத்துக்கே இந்த காரை வாங்கலாம்!

ஆடியோ மற்றும் குரல் கட்டளை வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல், ட்வின் சேம்பர் ஹெட்லேம்ப் மற்றும் ஸ்மார்ட் பிளே ஸ்டுடியோ வசதி அடங்கிய டைனமிக் சென்டர் கன்சோல் உள்ளிட்ட அம்சங்களும் 2022 மாருதி எஸ்-பிரஸ்ஸோ காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

லிட்டருக்கு 25.30 கிமீ மைலேஜ் தரும்... 2022 மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ விற்பனைக்கு அறிமுகம்... ரூ. 4.25 லட்சத்துக்கே இந்த காரை வாங்கலாம்!

இக்காரை மாருதி சுஸுகி நிறுவனம் ஹார்டெக்ட் பிளாட்பாரத்தை பயன்படுத்தியே உருவாக்கியிருக்கின்றது. இந்த பிளாட்பாரத்தை பயன்படுத்தியே செலிரியோ மற்றும் வேகன் ஆர் கார்களை அது உற்பத்தி செய்து வருகின்றது. இந்த காரின் வருகை அதிக மைலேஜை விரும்புபவர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

Article Published On: Monday, July 18, 2022, 14:04 [IST]
English summary
Maruti suzuki launched 2022 s presso with new k series 1 0 l motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+