மெட்டாவெர்ஷில் மாருதி அரேனா ஷோரூம்! கார் வாங்குவதில் புதிய அனுபவம்!
மாருதி நிறுவனம் தனது அரேனா ஷோரூமை முதன் முறையாக மெட்டாவெர்ஷில் அறிமுகப்படுத்தவுள்ளது. மெட்டாவெர்ஸ் தளத்தில் உருவாகவுள்ள இந்த தளம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி சுஸூகி நிறுவனம் தனது கார்களை இரண்டு செக்மெண்ட்களாக பிரித்து பிரிமியம் ரக கார்களைதனது நெக்ஸா ஷோரூம்கள் மூலமும் மற்ற கார்களை தனது அரேனா ஷோரூம்கள் மூலமும் விற்பனை செய்து வருகிறது. மாருதி நிறுவனத்தின் ஆல்டோ கே10, ஸ்விஃப்ட், டிசையர், பிரெஸ்ஸா, எர்டிகா ஆகிய கார்கள் எல்லாம் அரேனா டீலர் ஷிப் ஷோரூம்களில்தான் விற்பனையாகிறது.

இந்நிலையில் 2022ம் ஆண்டு துவக்கத்தில் மாருதி நிறுவனம் தனது நெக்ஸா ஷோரூமின் மெட்டாவெர்ஸ் விர்ச்சுவல் ஷோரூமை துவங்கியிருந்தது. தற்போது 2023ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தனது அரேனா ஷோரூமின் மெட்டாவெர்ஸ் தளத்தை திறக்க தயாராகியுள்ளது. இந்நிலையில் இந்த மெட்டாவெர்ஸ் அனுபவம் இனி மாருதி அரேனா ஷோரூம்களில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படவுள்ளது.
நாடு முழுவதும் மாருதி நிறுவனத்தினற்கு 700 அரேனா ஷோரூம்கள் உள்ளது அங்கு இந்த மெட்டாவெர்ஸ் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் வழங்கப்பட்டுள்ளது. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் கார் வாங்கும் அனுபவத்தை மெட்டாவெர்ஸ் உலகத்தில் பெறலாம். மேலும் வாடிக்கையாளர்கள் மாருதி நிறுவத்தின் இணையத்தளத்தில் வெப் புரெளசர்கள் மூலமும் இந்த அனுபவத்தை பெறும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாருதி நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்கெட்டிங் பிரிவு சீனியர் எக்ஸிக்யூட்டிவ் ஆஃபீசர் சஸாங் ஸ்ரீவத்சவா கூறும் போது : "புதிய வாடிக்கையாளர்களை கவர மாருதி சுஸூகி நிறுவனம் தனது டிஜிட்டல் பயணத்தை பலப்படுத்தி வருகிறது. இதற்கு முன்னர் நெக்ஸாவில் மெட்டாவெர்ஸ தளத்தை அறிமுகப்படுத்தினோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட கிராண்ட் விட்டாரா காருக்கு மட்டும் 10 ஆயிரம் புக்கிங்கள் வந்துள்ளது. தற்போது அரேனா ஷோரூம்களிலும் மெட்டாவெர்ஸை அறிமுகப்படுத்தியுள்ளோம்." என கூறினார்.
புதிய அரேனாவின் மெட்டவெர்ஸ் தளம் மாருதியை டிஜிட்டல்மயம் நோக்கி நகர்த்தியுள்ளது. தற்போது ஒருவர் கார் வாங்குவதற்காக உள்ள 26 படிநிலைகளில் 24 படிநிலைகளை மாருதி நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கிவிட்டது. மெட்டாவெர்ஸ் மூலம் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தங்கள் வாடிக்கையாள்களுக்கு கார் வாங்குவதை டிஜிட்டல் முறையில் மாற்ற ஒரு நல்ல வாய்ப்பாக கருதியுள்ளனர்.
மாருதி மட்டுமல்ல மஹிந்திரா நிறுவனமும் தனது எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கான மெட்டாவெர்ஸ் தளத்தை உருவாக்கியுள்ளது. இதில் காரை டெஸ்ட் டிரைவ் செய்யது பார்க்க முடியும். சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் வாகன விற்பனையில் 3டி டிஜிட்டல் தளத்தை புகத்தி வருகின்றனர். விர்ச்சூவல் ரியாலிட்டில மற்றும் அரக்கயூமெண்ட்டட் ரியாலிட்டி ஆகியவைற்றை கலந்து மெட்டாவெர்ஷஸ் மூலம்இந்த தளத்தை தயாரித்து வருகின்னறனர். இந்த தளத்தில் நீங்கள் காரை புக் செய்ய விரும்புகிறீர்களா? இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications







