என்னதான் டாடா, கியான்னு வந்தாலும் மக்கள் எப்பவும் மாருதி பக்கம்தான்! விற்பனையில் நம்பர் 1 இடத்தை பிடித்தது!

மாருதி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மட்டும் மொத்தம் 1,59,044 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.இந்தியாவின் மிக அதிகமாக கார்களை விற்பனை செய்யும் நிறுவனமான மாருதி சுஸூகி நிறுவனம் கடந்த நவம்பர் மாத தங்கள் விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.

டிசம்பர் மாதம் பிறந்துவிட்டது. ஒவ்வொரு ஆங்கில மாதப் பிறப்பின்போதும் கடந்த மாதம் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் விற்பனை குறித்த அறிக்கையை வெளியிடுவார்கள். அப்படியாக தற்போது கடந்த நவம்பர் மாத விற்பனை அறிக்கை வெளியாகத் துவங்கிவிட்டது. இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் கடந்த நவம்பர் மாத விற்பனை அறிக்கையைக் காணலாம் வாருங்கள்.

என்னதான் டாடா, கியான்னு வந்தாலும் மக்கள் எப்பவும் மாருதி பக்கம்தான்! விற்பனையில் நம்பர் 1 இடத்தை பிடித்தது!

இதன்படி மாருதி சுஸூகி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் மொத்தம் 1,59,044 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை மட்டும் 1,35,055 கார்களாகும், இது போக மற்ற ஓஇஎம்களுக்கு தயாரித்த கொடுத்தவரையில் மொத்தம் 4251 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. ஏற்றுமதியைப் பொருத்தவரை 19,738 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. இந்த மாதம் மாருதி நிறுவனம் எலெக்ட்ரிக் உதிரிப்பாகங்களின் தட்டுப்பாட்டில் தனது உற்பத்தியில் பாதிப்பைச் சந்தித்தது. குறிப்பாக உள்நாட்டு வாகன உற்பத்தி குறைந்தது. இருந்தாலும் அதன் பாதிப்பை முடிந்தளவிற்குக் குறைக்க மாருதி திட்டமிட்டிருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

ஒட்டு மொத்த விற்பனையில் யூட்டிலிட்டி வாகன விற்பனையைப் பொருத்தவரை மொத்தம் 32,563 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. பயணிகள் வாகன விற்பனை 39,746 ஆக இருக்கிறது. ஏற்றுமதியைப் பொருத்தவரை மொத்தம் 19,738 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. லைட் கமர்ஷியல் வாகனத்தைப் பொருத்தவரை மாருதி நிறுவனம் 2660 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியா முழுவதும் டீலர் ஷிப் முறையில் வானகங்களை விற்பனை செய்கிறது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 3700 அவுலெட்களை திறக்கும் இலக்குடன் இயங்கி வருகிறது. இதற்காக தற்போது தனது ஆலையின் உற்பத்தித் திறனில் மேலும் 1 லட்சம் கார்களை அதிகம் தயாரிக்கும்படி அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 1300 டீலர்ஷிப்களுடன் இருந்த மாருதி நிறுவனம் தற்போது 3500 டீலர்ஷிப்களுக்கு உயர்ந்துள்ளது.

தற்போது மாருதி நிறுவனம் இந்தியாவில் உள்ள 2,250 நகரங்களில் இருக்கிறது. கடந்த 2021-22ம் நிதியாண்டில் மட்டும் புதிதாக 237 அவுட்லெட்களும், இந்த நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் 170 அவுட்லெட்களையும் புதிதாகக் கொண்டு வந்துள்ளது. விரைவில் ஒட்டுமொத்த அவுட்லெட்களின் எண்ணிக்கை இந்த நிதியாண்டிற்குள் 3700-ஐ தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி நிறுவனத்தைப் பொருத்தவரை தற்போது குர்கிராம், மானீசர் ஆலையில் ஆண்டிற்கு 15 லட்சம் கார்களை தயாரிக்கும் அளவிற்குக் கொள்ளளவு கொண்டதாக இருக்கிறது. இதுபோக சுஸூகி நிறுவனத்திடம் ஆண்டிற்கு 7.5 லட்சம் கார்களை தயாரிக்கும் ஆலை ஒன்று குஜராத்தில் இருக்கிறது.இந்த இரு நிறுவனங்களும் இணைந்து ஆண்டிற்கு 22.5 லட்சம் கார்களை தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாத விற்பனையை கடந்தாண்டு நவம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் ஒட்டு மொத்த விற்பனையில் 19.5 சதவீத வளர்ச்சியையும், மற்ற ஓயிஎம்களுக்கான விற்பனையில் 10.96 சதவீத வீழ்ச்சியையும், ஏற்றுமதியில் 7.74 சதவீத வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது. உள்நாட்டு விற்பனவையில் 18.27 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Maruti Suzuki November sales rise 14 percent
Story first published: Friday, December 2, 2022, 10:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X