சும்மா சொல்லக்கூடாது... கடந்த 31 நாள்ல மாருதி அடிச்சு ஆடிருக்காங்க... என்ன நடந்ததுன்னு தெரியுமா?

மாருதி நிறுவனத்தின் கடந்த அக்டோபர் மாத விற்பனை அறிக்கை வெளியாகியுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

எப்பயும் மாருதி தான் நம்பர்1 . . . இந்த விஷயத்தை மாருதி கிட்ட நெருங்க கூட யாருமே இல்ல . . .

இந்தியாவின் மிகப்பெரிய கா் தயாரிப்பு நிறுவனம் மாருதி, அதிகமான கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் வெளியிடும் பெரும்பாலான கார்கள் மார்கெட்டில் நல்ல ஹிட்டை அடித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் விற்பனை அறிக்கையாக வெளியாகியுள்ளது. இதை முழுமையாகக் காணலாம் வாருங்கள்.

எப்பயும் மாருதி தான் நம்பர்1 . . . இந்த விஷயத்தை மாருதி கிட்ட நெருங்க கூட யாருமே இல்ல . . .

மாருதி நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 19 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் மொத்தம் 1,67,520 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1,38,335 வாகனங்களை விற்பனை செய்துள்ளனர். இது ஏற்றுமதி மற்றும் கமர்ஷியல் வாகனங்களின் எண்ணிக்கையும் அடங்கும்.

எப்பயும் மாருதி தான் நம்பர்1 . . . இந்த விஷயத்தை மாருதி கிட்ட நெருங்க கூட யாருமே இல்ல . . .

இதுவே உள்நாட்டு விற்பனையில் மட்டும் மொத்தம் 1,40,337 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மொத்தம் 1,08,991 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதில் பயணிகள் வாகன செக்மெண்ட் மட்டும் 33.6 சதவீதம் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. அதாவது இந்தாண்டு அக்டோபரில் 1,00,505 வாகனங்களும் கடந்தாண்டு அக்டோபரில் 71,590 வாகனங்களும் விற்பனையாகியுள்ளன.

எப்பயும் மாருதி தான் நம்பர்1 . . . இந்த விஷயத்தை மாருதி கிட்ட நெருங்க கூட யாருமே இல்ல . . .

பயணிகள் வாகனத்தைப் பொருத்தவரை மினி மாடலில் இந்நிறுவனம் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ கார்களையும், கம்பேக்ட் மாடலில் பலேனோ, செலிரியோ, டிசையர், ஸிவிஃப்ட், வேகன்ஆர், ஆகிய கார்களையும் செடான் மாடலில் சியாஸ் காரையும் விற்பனை செய்துவருகிறது. யூட்டிலிட்டி வாகனத்தை பொருத்தவரை பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்எல்6, கிராண்ட் விட்டாரா, ஈக்கோ ஆகிய வாகனங்களை விற்பனை செய்துவருகிறது.

எப்பயும் மாருதி தான் நம்பர்1 . . . இந்த விஷயத்தை மாருதி கிட்ட நெருங்க கூட யாருமே இல்ல . . .

யூட்டிலிட்டி செக்மெண்டில்லில் இந்நிறுவனம் 6.49 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. அதாவது இந்தாண்டு அக்டோபர் மாதம் 39,832 கார்களையும், கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 37,401 கார்களையும் இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

எப்பயும் மாருதி தான் நம்பர்1 . . . இந்த விஷயத்தை மாருதி கிட்ட நெருங்க கூட யாருமே இல்ல . . .

கமர்ஷியல் செக்மெண்டில் இந்நிறுவனம் மொத்தம் சூப்பர் கேரி என்ற வாகனத்தை விற்பனை செய்கிறது. இந்த வாகன விற்பனையைப் பொருத்தவரை 23.28 சதவீதம் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 2913 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு 3797 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. இது உள்நாட்டு விற்பனை தான்.

எப்பயும் மாருதி தான் நம்பர்1 . . . இந்த விஷயத்தை மாருதி கிட்ட நெருங்க கூட யாருமே இல்ல . . .

இதுவே ஏற்றுமதியைப் பொருத்தவரை 4.09 சதவீத விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. ஏற்று மதியில் மொத்தம் 20,448 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. ஆனால் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 21,332 வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்தது. இது போக டொயோட்டா நிறுவனத்திற்கு இந்நிறுவனம் சப்ளே செய்த வாகனத்தின் எண்ணிக்கையும் 9.53 சதவீதம் குறித்துள்ளது.

எப்பயும் மாருதி தான் நம்பர்1 . . . இந்த விஷயத்தை மாருதி கிட்ட நெருங்க கூட யாருமே இல்ல . . .

இந்நிறுவனம் இந்த மாதம் வெறும் 3822 வாகனங்களை மட்டுமே டொயோட்டா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இதுவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் 4225 வாகனங்களை வழங்கியுள்ளது.

எப்பயும் மாருதி தான் நம்பர்1 . . . இந்த விஷயத்தை மாருதி கிட்ட நெருங்க கூட யாருமே இல்ல . . .

இதுவே இந்த நிதியாண்டான ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான கணக்கைப் பார்த்தால் மாருதி நிறுவனம் உள்நாட்டு விற்பனை, ஏற்றுமதி, ஓஇஎம் மற்றும் கமர்ஷியல் வாகன விற்பனை என எல்லாம் சேர்த்து மொத்தம் 11,52,846 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மொத்தம் 8,71,490 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 32.28 சதவீத வளர்ச்சியாகும்.

எப்பயும் மாருதி தான் நம்பர்1 . . . இந்த விஷயத்தை மாருதி கிட்ட நெருங்க கூட யாருமே இல்ல . . .

இந்தாண்டு மாருதி நிறுவனத்திற்கு எலெக்டரானிக் உதிரிப் பாகங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டது. சர்வதேச அளவில் ஏற்பட்ட செமி கண்டெக்டர் தட்டுப்பாட்டால் மாருதி நிறுவனமும் பாதிக்கப்பட்டது. இது இந்நிறுவனத்தின் வளர்ச்சியைப் பாதித்துள்ளது. குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 1, 2022, 16:38 [IST]
English summary
Maruti Suzuki October 2022 sales report
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+